லவ் டுடே, தளபதி 68 படங்களை இழந்த ஹாரிஸ் ஜெயராஜ்! சம்பளம் பெருசா கேட்டதாலா?

லவ் டுடே, தளபதி 68 படங்களை இழந்த ஹாரிஸ் ஜெயராஜ்! சம்பளம் பெருசா கேட்டதாலா?
பெரிய இழப்பாக லவ் டுடே படமும் அதற்கு பிறகு தளபதி 68 படங்களுக்கும் முதலில் ஹாரிஸ் ஜெயராஜையே மனதில் நினைத்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.

ஏ ஆர் ரஹ்மானுக்கு அடுத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். சூப்பர் ஹிட் பாடல்கள், மெலோடி என கலக்கியவர் சமீப நாட்களில் பெரிதாக எந்த ஹிட் பாடல்களையும் கொடுக்கவில்லை. பெரிதாக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார். இதற்கு காரணம் அவர் அதிக சம்பளம் கேட்டதுதான் என்று கூறுகிறார்கள்.

பெரிய இழப்பாக லவ் டுடே படமும் அதற்கு பிறகு தளபதி 68 படங்களுக்கும் முதலில் ஹாரிஸ் ஜெயராஜையே மனதில் நினைத்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய படங்களைத் தயாரித்து வரும் ஒரு சில நிறுவனங்களில் ஏஜிஎஸ் நிறுவனமும் ஒன்று. விஜய்யை வைத்து பிகில் படத்தை தயாரித்தவர்கள் அடுத்து சில படங்களைத் தயாரிக்க முடிவு செய்தார்கள். அதில் 4.5 கோடி பட்ஜெட்டில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படமும் ஒன்று.

இந்த படத்துக்கு முதலில் இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜையே மனதில் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தனக்கு சம்பளமாக 7 கோடி ரூபாய் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். தனக்கு படங்கள் இல்லை என்று கூட நினைக்காமல் தன் பழைய சம்பளத்தையே கேட்டிருக்கிறார் ஹாரிஸ்.

ஏஜிஎஸ் தரப்பில் இது பெரிய படம் இல்லை மொத்தமே 4.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் எடுக்கிறோம். இதனால் தங்களுக்கு தர வேண்டிய சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியும் அவர் இறங்கியே வரவில்லையாம். அதனால் ஏஜிஎஸ் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் விருப்பப்படி யுவன் ஷங்கர் ராஜாவிடமே சென்று கேட்டிருக்கிறார்கள். அவரோ சம்பளம் குறித்து எதுவுமே பேசாமல், என்ன செய்யவேண்டும், எப்போது முடிக்கவேண்டும் தனக்கு இருக்கும் படங்களின் கமிட்மெண்ட் குறித்து பேசிவிட்டு அப்படியே சென்றுவிட்டாராம்.

அவரிடம் மீண்டும் மீண்டும் ஏஜிஎஸ் தரப்பில் இருந்து கேட்கப்பட்டபோதும் கூட அவர் நீங்கள் மார்க்கெட் விலைக்கு போட்டு கொடுங்கள் என்றே தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனால் ஏஜிஎஸ் இப்போது விஜய்யுடன் இணையும் தளபதி 68 படத்துக்கும் முதலில் யுவன் ஷங்கர் ராஜாவையே புக் செய்யலாம் என்று கூறிவிட்டார்களாம்.

வழக்கமாக விஜய் படங்கள் என்றால் ஏ ஆர் ரஹ்மான், அனிருத் என பெரிய இசையமைப்பாளர்களையே நாடுவார்கள். அதிலும் ஹாரிஸ் ஜெயராஜ் விஜய் துப்பாக்கி படத்தில் மிரட்டியிருப்பார்கள். இதனால் ஹாரிஸை ஒப்பந்தம் செய்யலாம் என யோசித்தவர்கள், லவ் டுடே படத்துக்கு அவர் கேட்ட சம்பளத்தை நினைத்து பார்த்து அந்த படத்துக்கே 7 கோடி ரூபாய் கேட்டாரே, இந்த படத்துக்கு 70 கோடி ரூபாய் கேட்பாரோ என நினைத்து உடனடியாக யுவனை புக் செய்திருக்கிறார்கள். அவரும் இந்த படத்துக்கு பெரிய அளவில் சம்பளம் எதுவும் கேட்கவில்லையாம். கடைசி படத்துக்கு வாங்கிய அதே சம்பளத்துக்கே பேசி முடித்திருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் மட்டும் லவ் டுடே படத்துக்கு கொஞ்சம் இறங்கி வந்து லாபத்தை எதிர்நோக்காமல், கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு இசையமைத்துக் கொடுத்து உதவியிருந்தால் இன்று அந்த நன்றியை மனதில் வைத்துக் கொண்டு ஹாரிஸை மீண்டும் விஜய் படத்துக்கு இசையமைக்க கூப்பிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. தன் தலையில் தானே மண் வாரி இட்டுக் கொண்டார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Tags

Next Story