ஹரிஷ் கல்யாண் சம்பளம் இவ்வளவு தானா? இன்னும் 1 கோடியே வரலியே..!

ஹரிஷ் கல்யாண் சம்பளம் இவ்வளவு தானா? இன்னும் 1 கோடியே வரலியே..!
X
ஹரிஷ் கல்யாண் சம்பளம் இவ்வளவு தானா? இன்னும் 1 கோடியே வரலியே..!

திரையரங்குகளில் வெற்றிக்கொடி பறக்கவிட்டுக்கொண்டிருக்கும் லப்பர் பந்து நாயகன் ஹரிஷ் கல்யாண் இந்த படத்துக்காக வாங்கிய சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் 2 வாரங்களுக்கும் மேலாக ஓடி வரும் திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகனாக நடித்துள்ளனர். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக சஞ்சனாவும் மற்றும் தினேஷ் ஜோடியாக சுவாசிகாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், பால சரவணன், காளி வெங்கட், தேவதர்ஷினி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி திரைக்கு வந்தது.

தரமான படங்களை அவ்வப்போது கண்டுகொள்ளும் தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் இதுபோன்ற சிறப்பான படங்கள் வரும். அந்த வரிசையில் லப்பர் பந்து படம் தரமான கதையம்சத்துடன் அசர வைக்கும் காட்சிகளைக் கொண்டு வெளியாகி இருக்கிறது. இதனால் இப்படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே லப்பர் பந்து தான் சிறந்த கதையம்சம் கொண்ட படம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு பிறகு வந்த மெய்யழகன் படமும் முன்னதாக வந்த கோட் படமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தாலும் அதற்கு சற்றும் சளைக்காமல் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் இப்படத்தை பார்த்து சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் 2 வாரங்களைக் கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த நிலையில், வசூலிலும் தொடர்ந்து சக்கைப் போடு போட்டு வருகிறது. சமீபத்தில் வந்த தகவலின்படி லப்பர் பந்து திரைப்படம் வெளியான 13 நாட்களில் ரூ.21.32 கோடி வசூலித்து உள்ளது. நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி திரையரங்குகளுக்கு பொதுமக்கள் படையெடுத்ததால் ஒரே நாளில் ரூ.3.25 கோடி வசூலை வாரிக்குவித்திருக்கிறது லப்பர் பந்து திரைப்படம்.

இப்படி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் லப்பர் பந்து படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் நடிக்க ரூ.70 லட்சம் சம்பளமாக வாங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!