இசை வழி போதை கடத்தல்காரன் யுவனின் பிறந்தநாள் இன்று!

இசை வழி போதை கடத்தல்காரன் யுவனின் பிறந்தநாள் இன்று!
X
யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் இன்று

இசைஞானி இளையராஜாவின் மகனாக பிறந்து, தனித்துவமான இசையால் ரசிகர்களை கவரும் யுவன்

இசைஞானி இளையராஜாவின் மகனாக பிறந்த யுவன் சங்கர் ராஜா, 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். தனது தந்தையின் இசைத் திறமைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டாலும் பெரிய அளவில் சினிமா மீது நாட்டம் இல்லாமலேயே இருந்தார் யுவன் சங்கர் ராஜா.

யுவன் ஷங்கர் ராஜா தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பு வரை பயின்ற யுவன் பின்னர் ஜேக்கப் மாஸ்டரிடமிருந்து இசையைக் கற்கத் தொடங்கினார்.

16 வயதில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், தீனா, பூவெல்லாம் கேட்டுப்பார், ராம், மாஸ்டர், தல 800, ஜெமினி கணேசன் போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியுடன் இணைந்த சென்னையில் உள்ள "மியூசி மியூசிகல்" என்ற பியானோ வகுப்புகளில் கலந்து கொண்டார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இளைஞர்களை ஈர்க்கும் திறமை உள்ளது. அவரது இசையில் காதல், சோகம், ஆவேசம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் எப்போதும் புதிய முயற்சிகள் இருக்கும். துள்ளல் இசையில் யுவன் சங்கர் ராஜா மிகவும் சிறந்து விளங்குகிறார்.

அஜித்தை மாஸ் ஹீரோவாக மாற்றியதில் யுவனின் இசைக்கு முக்கிய பங்கு உள்ளது என்றே சொல்லாம். அடுத்தடுத்து அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா, கார்த்தி, ஆர்யா போன்ற நடிகர்களை தனது சிறப்பான துள்ளல் இசையால் ரசிகர்கள் கொண்டாடும் கதாநாயர்களாக மாற்றியதில் யுவன் சங்கர் ராஜாவிற்கு முக்கிய பங்குள்ளது என்றால் மிகையல்ல.

7ஜி ரெயின்போ காலனி படத்தில் வரும் கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை, தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தில் வரும், தேவதையை கண்டேன், சூர்யா, லைலா நடிப்பில் வெளியான நந்தா படத்தில் வரும் முன் பனியாய் முதல் மழையாய், யாரடி நீ மோகினி படத்தில் வரும் எங்கேயோ பார்த்த மயக்கம், ஜெயம் ரவி, பாவனா நடிப்பில் தீபாவளி படத்தில் காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் என தொடங்கி லவ் டுடே படத்தில் வரும் பாடல்கள், தற்போது டிரெண்டாகி வரும் தெலுங்கு பட பாடல் என பட்டையைக் கிளப்பிய கில்லி யுவன்.

யுவன் சங்கர் ராஜா, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரது இசையால் தமிழ் சினிமாவில் புதிய அலை எழுந்தது என்றால் மிகையல்ல. இன்று அவரது 44-வது பிறந்தநாளில், அவருக்கு ரசிகர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!