மகிழ்ச்சியே ஹார்மோன் பிரச்னைகளை சரியாக்கும்: நடிகை ஸ்ருதிஹாசன்

மகிழ்ச்சியே ஹார்மோன் பிரச்னைகளை சரியாக்கும்: நடிகை ஸ்ருதிஹாசன்
X

நடிகை ஸ்ருதி ஹாசன்.

நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாவில், உடற்பயிற்சியும் மனமகிழ்ச்சியும் ஹார்மோன் பிரச்னைகளை சரிசெய்யும் என்று பதிவிட்டுள்ளார்.

அண்மையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு உள்ள ஹார்மோன் பிரச்சனைகள் குறித்தும் அதனை, தான் கடினமான உடற்பயிற்சிகளின் மூலம் எவ்வாறு சரிசெய்துகொண்டார் என்பது குறித்தும் உடற்பயிற்சிகள் செய்யும் வீடியோக்களோடு வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோக்களில் அவர், "சமநிலையற்ற வளர்சிதை மாற்றங்களை எதிர்கொள்வது எந்த அளவிற்கு கடினமான ஒன்று என்பது பெண்களுக்கு நிச்சயம் தெரியும். எனவே, என்னோடு சேர்ந்து நீங்களும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

நான், மிக மோசமான ஹார்மோனல் பிரச்சனைகளை எதிர்கொண்டேன். அதேநேரம், மனம் தளராமல் அதனை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் சவாலாக எடுத்துக்கொண்டேன். என் உடலின் இயல்பே இதுதான் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அதன்பிறகுதான், ஆரோக்கியமான உணவு, சரியான நேரத்திற்கு தூக்கம், மகிழ்ச்சியான உடற்பயிற்சி என நான் இருக்கிறேன். இப்போது என் உடல் சரியாக இருக்கிறது. அதனால், என் மனமும் நிறைவாக இருக்கிறது.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தாலே, அது நம் ஹார்மோன்களை சரி செய்துவிடும். மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட இந்தப் பயணம்தான் என்னை உங்களோடு இப்படிப் பேச வைத்திருக்கிறது. இதனை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!