ஹெச் வினோத்தின் அடுத்த படம் இவரோடுதான்.. அடித்து சொல்லும் தகவல்!

ஹெச் வினோத்தின் அடுத்த படம் இவரோடுதான்.. அடித்து சொல்லும் தகவல்!
X
இயக்குநர் ஹெச் வினோத் புகைப்படம்
அஜித்குமார் நடித்த அடுத்த படமான வலிமை மிக அதிக நாட்களாக உருவாக்கத்தில் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் கொரோனாவும் அதனால் போடப்பட்ட லாக்டவுனும்தான். இந்த இடைப்பட்ட நாட்களில் உக்கார்ந்து ஹெச் வினோத் எழுதியதுதான் துணிவு படத்தின் கதை.

துணிவு படத்தைத் தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கும் புதிய படத்தில் இவர்தான் நாயகனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இது கிட்டத்தட்ட உறுதியான தகவலாக வெளியாகியுள்ளது.

ஹெச் வினோத் - அஜித்குமார் - போனி கபூர் கூட்டணியில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் படமாக ஹிந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக் உருவானது. தமிழில் நேர் கொண்ட பார்வை எனும் பெயரில் உருவான அந்த படத்தில் அஜித்குமாருடன் வித்யாபாலன் நாயகியாக நடித்திருந்தார். படத்தின் கதைக்களம் கொஞ்சம் டார்க்கான சப்ஜெக்ட்டை பேசியதாலும், இங்கு சராசரியான மனநிலையை உடைத்ததாலும் படத்தை பெரிய அளவில் யாரும் கொண்டாடவில்லை. ஆனால் முற்போக்குவாதிகள் படத்தைப் பாராட்டினர். இது மிகவும் வித்தியாசமான முயற்சி என கூறினர்.

அஜித்குமார் நடித்த அடுத்த படமான வலிமை மிக அதிக நாட்களாக உருவாக்கத்தில் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் கொரோனாவும் அதனால் போடப்பட்ட லாக்டவுனும்தான். இந்த இடைப்பட்ட நாட்களில் உக்கார்ந்து ஹெச் வினோத் எழுதியதுதான் துணிவு படத்தின் கதை. இதை ஒரு பேட்டியில் அவரே கூறியிருக்கிறார். வெறும் 6 மாதத்தில் எல்லா வேலைகளையும் முடித்து படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார்கள். முன்னதாக வலிமை படத்துக்கு 3 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

இப்படி அஜித்குமாருடன் மூன்று படங்களைத் தொடர்ந்து எடுத்திருந்தாலும், ஹெச் வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தைப் பார்த்துவிட்டு அதன்மூலம் இம்ப்ரஸ் ஆனவர் உலகநாயகன் கமல்ஹாசன். அந்த கதையில் மிகப் பெரிய ஆன்மா இருப்பதை உணர்ந்த கமல்ஹாசன், தனக்கு ஒரு கதை எழுதும்படி கேட்டிருக்கிறார் என்கிறார்கள். இதனால் ஹெச் வினோத் சில லைன்களைப் பிடித்து கதையை உருவாக்கி வைத்திருக்கிறார்.

கமல்ஹாசனுக்கு இவரது கதை பிடித்திருப்பதால் உடனடியாக இவருடன் பணிபுரிய முடிவெடுத்திருக்கிறாராம். வெகு சீக்கிரத்தில் இந்த படத்தை முடித்துவிடலாம் என்பதால் இந்த படத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக மணிரத்னம் படத்துக்கு செல்வார் என்று கூறுகிறார்கள். சமீபத்தில் ஹெச் வினோத்துக்கு கார் வாங்கி கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்