முதன்முறையாக இணையும் மூவர் கூட்டணி..!

முதன்முறையாக இணையும் மூவர் கூட்டணி..!
X

டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள போட்டோ. 

GV Prakash New Song - இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில் வைரமுத்து முதன்முறையாக இணைகிறார்.

GV Prakash New Song -இயக்குநர் தங்கர் பச்சான், தமிழ்த்திரையுலகில் குறிப்பிடத் தகுந்த வித்தியாசமான இயக்குநர்களின் வரிசையில் ஒருவர். இவரது படங்கள் தனித்துவம் மிக்கது என்பது மிகையல்ல. 'அழகி', 'பள்ளிக்கூடம்' என சான்றாகப் பல படங்களைப் பட்டியலிடலாம்.

இவர், கடந்த 2017ம் ஆண்டில் வெளியான 'களவாடிய பொழுதுகள்' படத்திற்கு பிறகு படங்களை இயக்காமல் சற்று ஒதுங்கி இருந்தார். தற்போது, தன்னுடைய மகன் விஜித்தை வைத்து 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்ற படத்தை இயக்கி முடித்து மீண்டும் திரைக்களத்துக்கு வந்துள்ளார்.

இந்தநிலையில், தனது தனித்துவமிக்க அடுத்த படைப்பாக 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற படத்தை இயக்கி வருகிறார் தங்கர்பச்சான். இந்தப் படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன் ஆகிய மூவரின் கேரக்டர்கள் மையப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தப் படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இதன் மூலம் தங்கர்பச்சான் - வைரமுத்து - ஜீ.வி.பிரகாஷ்குமார் என மூவர் கூட்டணி முதன் முறையாக இணைகிறது. இந்தநிலையில், இந்தப் படத்தின் பாடல் உருவாக்கம் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பாடல் உருவாக்கத்திற்கான வீடியோ வெளியாவது இதுவே முதல்முறை ஆகும். இந்த வீடியோவில் ஜீ.வி.பிரகாஷ்குமார், வைரமுத்து மற்றும் தங்கர் பச்சான் ஆகிய மூவரும் கலந்துரையாடும் காட்சிகளில் பாடலுக்கான மெட்டை ஜீ.வி.பிரகாஷ்குமார் கூற, அந்த மெட்டிற்கேற்ற பாடல் வரிகளைச் சொல்லும் வைரமுத்து, செவ்வந்திப் பூவே.. செவ்வந்திப் பூவே என்று பாடலின் முதல் வரிகளை ஒரு பாடகராகவே மாறி பாடிக் காட்டுகிறார். அது மிகவும் அழகாக உள்ளது.

வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!