அட்ராசக்க! - சிவகார்த்திகேயனின் பெரியப்பா ரோலில் கவுண்டமணியா?

அட்ராசக்க! - சிவகார்த்திகேயனின் பெரியப்பா ரோலில் கவுண்டமணியா?
X

நடிகர் கவுண்டமணி உடன் சிவகார்த்திகேயன் 

Goundamani in Sivakarthikeyan movie :நடிகர் கவுண்டமணி நடிப்பில், 2016ஆம் ஆண்டு வெளியான 'வாய்மை' திரைப்படம், அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஆகும்.

Goundamani in Sivakarthikeyan movie : நடிகர் கவுண்டமணி என்றாலே அவரின் கவுன்டர் காமெடிகள் தான் நினைவிற்கு வரும். கவுண்டமணியும் – செந்திலும் இணைந்து நடித்து வெளியான படங்கள் அனைத்தும் 1980 முதல் 2000மாவது காலகட்டம் வரை பெரும் பிரபலம் அடைந்தன. இதற்குப்பிறகு, இருவரும் நடிப்பிலிருந்து சற்று விலகிக் கொண்டனர். அவர்கள் அவ்வப்போது படங்களில் தலைகாட்டி வருகின்றனர்.

நடிகர் கவுண்டமணி நடிப்பில், 2016ஆம் ஆண்டு வெளியான 'வாய்மை' திரைப்படம், அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஆகும்.

கோலிவுட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டான்' படம் வெற்றியடைந்து உள்ளது. பிரின்ஸ் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக, நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பிலும் நடிக்க உள்ளார்.

இதனிடையே, 'மண்டேலா' இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ள படத்தில் நடித்து வருகிறார். தமிழில், இந்த படத்திற்கு ''மாவீரன்'' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமே உறுதியாகி இருந்த நிலையில், இந்த படத்தில் தற்போது நடிகர் கவுண்டமணியும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயனின் பெரியப்பா கேரக்டரில், கவுண்டமணி நடிக்க இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

கவுண்டமணி நடிப்பிற்கு சிறிது ஓய்வு அளித்திருந்த நிலையில், சிவகார்த்திகேயன், அவரை நேரடியாக சந்தித்து, மாவீரன் படத்தில் நடிக்க சம்மதம் பெற்றிருக்கிறாராம்!

அப்போ, வெகுவிரைவில், கவுண்டமணியின் மறுபிரவேசத்தை இந்த படத்தில் பார்க்கலாம் என்பது மட்டும் நிச்சயம்!

Tags

Next Story
பவானி காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு..!