The GOAT பாட்டு ரெடி...! விஜய்யுடன் 3 நாயகிகள்! இதாம்லே அப்டேட்டு..!

The GOAT பாட்டு ரெடி...! விஜய்யுடன் 3 நாயகிகள்! இதாம்லே அப்டேட்டு..!
X
தளபதி விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அப்டேட் கசிந்துள்ளது.

தளபதி விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அப்டேட் கசிந்துள்ளது. இந்த பாடலில் 3 நாயகிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பாடல் மற்ற இரண்டு பாடல்கள் போல இல்லாமல், வெறித்தனமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் முதல் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும் விஜய்யின் மற்ற படங்களைப் போல அது மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகவில்லை. அனிருத்தை மிஸ் செய்வதாகவே விஜய் ரசிகர்களே வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். அனிருத் மட்டும் இருந்திருந்தா இந்த அளவுக்கு மோசமான பாடல்களையா தந்திருப்பார் என புலம்புகின்றனர்.

அதேநேரம் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள் பாட்டு நன்றாக இருப்பதாக முட்டு கொடுக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்திலிருந்து மூன்றாவது பாடலை விரைவில் வெளியிட இருக்கிறார்கள். அதாவது ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே இந்த பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த பாடலில் விஜய்யுடன் சேர்ந்து மூன்று நாயகிகளும் பங்கெடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

விஜய்யின் குரலில் இந்த பாடல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் சேர்ந்து நடிகை ஷ்ருதிஹாசனும் பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடலில் விஜய்யுடன் திரிஷா நடனமாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த பாடல் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதுதவிர இந்த பாடலில் இன்னொரு நடிகையும் சம்பந்தப்பட்டிருக்கிறார். அவர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. இருந்தாலும் அவர் அநேகமாக படத்தின் நாயகி மீனாட்சி சவுத்ரி அல்லது சிநேகாவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்