The GOAT மூன்றாவது பாடல் எப்ப ரிலீஸ் தெரியுமா?

The GOAT மூன்றாவது பாடல் எப்ப ரிலீஸ் தெரியுமா?
X
தளபதி விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மூன்றாவது பாடல் எப்போது வெளியாகும்?

தளபதி விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மூன்றாவது பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட் கசிந்துள்ளது. இந்த பாடலில் 3 நாயகிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பாடல் மற்ற இரண்டு பாடல்கள் போல இல்லாமல், வெறித்தனமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்துக்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று பெயர் வைத்துள்ளனர். ரசிகர்கள் இந்த படத்தை தி கோட் என்று அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவர்களுக்கு ஜோடியாக சிநேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முழு படமும் தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது.

இசைக் கோர்வை மட்டுமே பாக்கி எனும் நிலையில், இரண்டு பாடல்களும், பாதி படத்துக்கான இசையும் யுவன் தரப்பிடமிருந்து பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வெங்கட் பிரபு. ஏற்கனவே அனிருத்தை தேர்ந்தெடுக்காமல், யுவனை இசையமைப்பாளராக போட்டுள்ளதால், விஜய் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கின்றனர்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் முதல் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும் விஜய்யின் மற்ற படங்களைப் போல அது மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகவில்லை. அனிருத்தை மிஸ் செய்வதாகவே விஜய் ரசிகர்களே வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். அனிருத் மட்டும் இருந்திருந்தா இந்த அளவுக்கு மோசமான பாடல்களையா தந்திருப்பார் என புலம்புகின்றனர்.

அதேநேரம் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள் பாட்டு நன்றாக இருப்பதாக முட்டு கொடுக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்திலிருந்து மூன்றாவது பாடலை விரைவில் வெளியிட இருக்கிறார்கள். அதாவது ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே இந்த பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த பாடலில் விஜய்யுடன் சேர்ந்து மூன்று நாயகிகளும் பங்கெடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

விஜய்யின் குரலில் இந்த பாடல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் சேர்ந்து நடிகை ஷ்ருதிஹாசனும் பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடலில் விஜய்யுடன் திரிஷா நடனமாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த பாடல் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதுதவிர இந்த பாடலில் இன்னொரு நடிகையும் சம்பந்தப்பட்டிருக்கிறார். அவர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. இருந்தாலும் அவர் அநேகமாக படத்தின் நாயகி மீனாட்சி சவுத்ரி அல்லது சிநேகாவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எப்போது வெளியாகும்?

தி கோட் படத்தின் மூன்றாவது பாடல் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கான பணிகளை தீவிரமாக செய்து வரும் யுவன் சங்கர் ராஜா, இந்த பாடலின் டம்மி லிரிக்ஸ் போட்டு கொடுத்த பீட்டையே விஜய் மிகவும் ரசித்ததாகவும் அந்த பாடலும் அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Tags

Next Story
ai solutions for small business