பிக்பாஸ் 6-வது சீசனில் நுழைய தயாராக இருக்கும் கிளாமர் நடிகை கிரண்
நடிகை கிரண்
kiran rathod news, bigg boss season 6 tamil, bigg boss 6உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானது.பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் முடிந்து ஆறாவது சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது.
இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் தமிழில் ஒரு காலத்தில் தளபதி விஜய் மற்றும் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த கிரண் மற்றும் குக் வித் கோமாளி புகழ் ஹீரோ அஸ்வின்குமார் ஆகியோர் நுழைய இருக்கிறார்கள். நடிகை கிரணை பொறுத்த வரை சினிமா வாய்ப்பு முழுவதுமாக அவருக்கு கரைந்து போய்விட்டாலும், சமூக வலைத்தளங்களில் போட்டோக்கள் பதிவிட்டு லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்து வருகிறார். அவர் இந்த நிகழ்ச்சியில் இணைவது கிட்டத்தட்ட 80 சதவீதம் உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.
kiran rathod news, bigg boss season 6 tamil, bigg boss 6அதேபோல் குக் வித் கோமாளி ஹீரோ அஸ்வின் குமாரும் சிறந்த ஒரு நிகழ்ச்சி தயாரிப்பாளர். அவரும் இந்த நிகழ்ச்சியில் நிச்சயமாக பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என்பது உறுதியாகிவிட்டது. பிக் பாஸ் ஆறாவது சீசனை எதிர்நோக்கி இருக்கும் ரசிகர்கள் இந்த இரு கிளாமர் நடிகை மற்றும் நடிகருடைய வரவேற்பையும் வருகையையும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu