ரீமேக் படமாக இருந்தாலும் விஜய்யோட கேரியரில் முக்கியமான படம் கில்லி

ரீமேக் படமாக இருந்தாலும் விஜய்யோட  கேரியரில் முக்கியமான படம் கில்லி
X
கில்லி படத்தின் 18 ஆண்டுகள் நிறைவையடுத்து விஜயின் அம்மாவாக நடித்த நடிகை ஜானகியின் உணர்வுப்பூர்வமான பதிவு என்ன தெரியுமா?

ரீமேக் படமாக இருந்தாலும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு கமெர்ஷியல் படத்திற்காக அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் கச்சிதமாக பொருந்தியிருந்தது. ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்தப் படத்தை ரசிச்சாய்ங்க

இந்நிலையில் கில்லி படத்தின் 18 ஆண்டுகள் நிறைவை அடுத்து படத்தில் விஜயின் அம்மாவாக நடத்திருந்த நடிகை ஜானகி உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். "18 ஆண்டுகள் கடந்தும் கில்லி படத்தின் காட்சிகள் இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

சில பேர் இப்படத்தை 1000 முறை பார்த்திருப்பதாக மெசேஜ் அனுப்பி இருக்கின்றனர். நானும், ஆஷிஷ் வித்யார்த்தியும் கடந்த வாரம் சென்னை மெரினாவில் வாக் சென்று வந்தோம். அப்போது எங்களை கவனித்த கில்லி ரசிகர்கள், அப்படத்தை பற்றியும், அதில் எங்களை அவர்கள் ரசித்தது பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.


எங்களுக்கு அன்பை வாரி அளித்து வரும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள்" அப்படீன்னு தெரிவிச்சிருந்தார். .

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare