கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன் கூட்டணியில் வெளிவரும் 'வெந்து தணிந்தது காடு'..!

கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன் கூட்டணியில் வெளிவரும் வெந்து தணிந்தது காடு..!
X

நடிகர் சிலம்பரசன்.

நடிகர் சிலம்பரசன் நடிப்பிலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்திலும் தயாராகியுள்ள 'வெந்துதணிந்தது காடு' வெளியீட்டு ஏற்பாடு.

'மாநாடு' படத்துக்குப் பிறகு, சிலம்பரசன் தனது ரசிகர்களுக்கு வழங்கும் ஸ்பெஷல் திரைவிருந்துதான், 'வெந்து தணிந்தது காடு'. இப்படம் ஏற்கெனவே, கெளதம் வாசுதேவ் மேனன் – சிலம்பரசன் கூட்டணியில் இதற்கு முன்பு வந்த 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக இது இருக்கும் என்கிறார்கள்.

சிலம்பரசன், இந்தப் படத்திற்காக 'மாநாடு' படத்தை விட மேலும் உடல் இளைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில், ராதிகா சரத்குமார் சிலம்பரசனின் அம்மா கதாபத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக சித்தி இத்நானி நடித்துள்ளார்.

இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் நடந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறார்கள்.

ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவினை சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

அவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களை அழைக்கும் எண்ணத்தில் படக்குழு உள்ளதாகத் தெரிய வருகிறது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்