ஒன்னு இல்ல மூனு... சூரிக்கு கிடைத்த மாஸ்! அட செம்மங்க..!

ஒன்னு இல்ல மூனு... சூரிக்கு கிடைத்த மாஸ்! அட செம்மங்க..!
X
கருடன் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

நகைச்சுவை நடிகராக இருந்து பின் கதாநாயகனாக மாறிய பலர் இருக்கிறார்கள். அவர்களில் நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு, யோகிபாபு என பலர் நடித்தாலும் அவர்கள் பின் கதாநாயகனாகவே தொடரவில்லை. சந்தானம்தான் அந்த முடிவை முதலில் எடுத்தார். அவர் தனது நகைச்சுவை கதாபாத்திரங்களை ஓரங்கட்டிவிட்டு தன்னுடைய கதாநாயக பிம்பத்தை பிரபலப்படுத்த களமிறங்கிவிட்டார்.

தமிழில் அவர் எண்ணற்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து சூரியும் கதாநாயகனாக அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்து அசத்தினார். இப்போது விடுதலை 2 படமும் விரைவில் வெளியிடப்படுகிறது.

சூரி நடிப்பில் கருடன் திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்துள்ளது. மொத்தம் 3 ஓடிடி நிறுவனங்களில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

விஜய், அஜித், ரஜினி, சூர்யா உள்ளிட்டவர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தாலும் இவரது காமெடி சிரிப்பே வரவழைக்கவில்லை என கேலி கிண்டலுக்கு ஆளானார். இதனால் உஷாரான சூரி, தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். நிச்சயமாக தனக்கு நடிப்பு வரும் என்பதை நம்பி அவர் கொடுத்த விடுதலை, அவரை கதாநாயகனாக மக்கள் மனதில் நிலைநிறுத்தியது.

தற்போது கருடன் திரைப்படமும் அவருக்கு மிகப் பெரிய இடத்தைக் கொடுத்துள்ளது. முன்னதாக திரைப்படங்களில் நடிக்க நடத்தப்படும் ஆடிஷனில் கலந்து கொண்டு பட வாய்ப்புகளுக்காக காத்திருப்பாராம். ஒரு முறை அவர் சாப்பிட பணம் இல்லாமல், பசியின் காரணமாக ஒரு ஆடிஷனில் மயங்கி விழுந்துவிட்டாராம். அந்த இடத்தை தற்போது விலைக்கு வாங்கி அதிலேயே தனது அலுவலகத்தை அமைத்திருக்கிறார் சூரி.

தற்போது சூரி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ராம் இயக்கி வருகிறார்.

கருடன் திரைப்படம் ஓடிடியில் இன்று (ஜூலை 3ம் தேதி) வெளியாகிறது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். மேலும் சிம்ப்ளி சவுத், டெண்ட் கொட்டா ஆகிய ஓடிடி தளங்களிலும் கருடன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!