வசூலில் விக்ரம், பொன்னியின் செல்வன் படங்களை ஓவர்டேக் செய்த காந்தாரா

வசூலில் விக்ரம், பொன்னியின் செல்வன் படங்களை ஓவர்டேக் செய்த காந்தாரா
X

கமலின் விக்ரம், பொன்னியின் செல்வன் படங்களின் வசூலை விட காந்தார திரைப்படம் கூடுதல் வசூலை பெற்று உள்ளது.

Gandhara -'காந்தாரா' திரைப்படம், 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'விக்ரம்' படங்களின் வசூல் சாதனையை முறியடித்து முந்திச் செல்கிறது.

Gandhara -இந்தியத் திரையுலகையே கன்னடத் திரையுலகின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து இயக்கியுள்ள 'காந்தாரா' திரைப்படம். அதோடு, தென்னிந்தியத் திரையுலகில் 2022-ம் ஆண்டு வெளியான பல படங்கள் இதுவரை எப்போதும் இல்லாத வகையில் வசூலிலும் வரவேற்பிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு கடந்த ஜூன் 3-ம் தேதி உலகம் முழுவதும் வெள்ளித் திரையில் வெளியான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடித்த 'விக்ரம்' திரைப்படம் நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மட்டும் சுமார் 250 கோடி ரூபாய் வசூல் செய்து, மொத்த வசூலில் 480 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. இது, படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நடிகர் கமல்ஹாசனையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

'விக்ரம்' திரைப்படத்தின் வசூல் சாதனையை வேறு எந்தப் படமும் முறியடிக்க முடியாது என்று பல்வேறு தரப்பில் இருந்து வெளியான கருத்துகளின் காரம் குறையும் முன்னரே, கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், 'விக்ரம்' திரைப்படத்தின் வசூல் சாதனையை, படம் வெளியான இரண்டு வாரங்களில் முறியடித்தது.

அடுத்து, இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் வசூல் சாதனை பரபரப்பாகிக் கொண்டிருந்த அதே வேளையில், 'பொன்னியின் செல்வன்' வெளியான செப்டம்பர் 30-ம் தேதி கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து இயக்கி வெளியான 'காந்தாரா' திரைப்படம் கர்நாடகாவில் வெளியானதோடு, தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு, கடந்த அக்டோபர் 15-ம் தேதி வெள்ளித் திரையில் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.


அதோடு, தமிழகத்தில் 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு போட்டியாளராகக் களமிறங்கி வெற்றி பெற்ற 'கே.ஜி.எஃப்' திரைப்படத்தின் பார்வையாளர் எண்ணிக்கை சாதனையை கர்நாடகத்தில் முறியடித்து முதலிடத்துக்கு வந்தது 'காந்தாரா' திரைப்படம். இந்தநிலையில், 'காந்தாரா'வின் தெலுங்கு வெளியீட்டில் மட்டும் இந்தப் படத்திற்கு 45 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை என்பது, 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'விக்ரம்' படங்களின் தெலுங்குப் பதிப்பின் வசூலை விட அதிகமாம்.

மேலும், தமிழகத்தில் தீபாவளியையொட்டி நடிகர் கார்த்தி நாயகனாக நடித்த 'சர்தார்' திரைப்படமும் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த 'பிரின்ஸ்' திரைப்படமும் வெளியாகின. அந்த சமயத்தில் 'காந்தாரா' திரைப்படம் குறைவான திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது.

ஆனால், தீபாவளியைக் கடந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் படத் தயாரிப்பாளருக்கும் நாயகன் சிவகார்த்திகேயனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. இந்தநிலையில், ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா' திரைப்படத்திற்கு கூடுதலான திரையரங்குகள் கிடைத்தன.

இதனையடுத்து, 'காந்தாரா' திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் நூறு திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், தமிழகத் திரையரங்குகளைப் பொறுத்தவரையில் இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', நடிகர் கார்த்தியின் 'சர்தார்' ஆகியவற்றோடு ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா' ஆகிய மூன்று படங்கள் மட்டுமே அதிகமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!