விநாயகர் சதுர்த்தி; விரதம் துவங்கிய இந்து முன்னணி

திருப்பூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில், இந்து முன்னணியினர் விரதம் துவங்கினர்.
Lord Ganesha Ganesh Chaturthi -வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அதில், கோவை, திருப்பூரில், 11 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று காலை, காப்பு கட்டி, விரதம் துவங்கினர். திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் திரளான தொண்டர்கள் பங்கேற்று காப்பு கட்டி கொண்டனர். இந்து முன்னணி மாநில தலைவர் 'காடேஸ்வரா' சுப்ரமணியம், மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu