விஜய்-ன் பீஸ்ட் படக்கதை இணைய பக்கத்தில் லீக் ஆகிடுச்சாம்:படக்குழு அப்செட்

விஜய்-ன் பீஸ்ட் படக்கதை இணைய பக்கத்தில் லீக் ஆகிடுச்சாம்:படக்குழு அப்செட்
X
அமெரிக்காவில் உள்ள கேலக்ஸி திரையரங்கம் தங்களது இணையதள பக்கத்தில் பீஸ்ட் படத்தின் கதையை முழுவதுமாக வெளியிட்டு இருக்குது

பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் கதை லீக் ஆகி உள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள கேலக்ஸி திரையரங்கம் தங்களது இணையதள பக்கத்தில் பீஸ்ட் படத்தின் கதையை முழுவதுமாக வெளியிட்டு இருக்குது.

அதன்படி, "நகரின் பரபரப்பான பகுதியை சர்வதேச பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுந்து, அவர்களது அமைப்பின் தலைவனை விடுவிக்கக்கோரி அரசுக்கு மிரட்டல் விடுறாய்ங்க.

ஆனால், அரசாங்கமோ அந்த பயங்கரவாதிகள் அமைப்பின் தலைவனை விடுவிக்க மறுக்கிறது. ஒரு கட்டத்தில் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட இடத்தில் அரசின் உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியான விஜய் இருப்பது தெரியவருது. இதனையடுத்து பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க, அவரது உதவியை அரசு நாடுகிறது.

இதன் பின்னர் அந்த முன்னாள் அதிகாரி பயங்கரவாதிகளுக்கு எதிராக தனது மிஷனை தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் நிலைமை பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைய, அந்த அமைப்பின் தலைவனை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. இச் சூழலில் சாமர்த்தியமாக செயல்படும் அந்த முன்னாள் உளவு அதிகாரி பயங்கரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட மக்களை மீட்பதோடு, பயங்கரவாதிகளையும் தீர்த்துக்கட்டுகிறார்" அப்ப்டீன்னு அதில் குறிப்பிட்டிருக்குது. எப்டீங்க இப்டீ லீக் ஆகுது?

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!