மகேஸ்வரி-அசீம் இடையே முற்றும் சண்டை.. ப்ரோமோ வெளியீட்டால் வைரல்

மகேஸ்வரி-அசீம் இடையே முற்றும் சண்டை.. ப்ரோமோ வெளியீட்டால் வைரல்
X

அசீமிடம் கோபத்தை வெளிபடுத்தும் மகேஸ்வரி.

Bigg Boss Tamil Season 6 - பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர் மகேஸ்வரி- அசீம் இடையான நடைபெற்று வரும் சண்டையின் ப்ரோமோ வெளியீட்டால் வைரலாகியுள்ளது.

Bigg Boss Tamil Season 6 - தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமானது பிக்பாஸ். பிரத்தியேகமாக 24 மணி நேரமும் வித்தியாசமானதாகவும், மிகவும் பிரபலமான மற்றும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியான ' பிக் பாஸ் தமிழ் ' இல்லாமல் உங்கள் நாட்கள் முழுமையடையாது . ஆம், அவர்கள் உங்கள் சலிப்பான நேரத்தை சுறுசுறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றுகிறார்கள். ஒரே நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. அதாவது தீமைகளைப் போலவே இந்த நிகழ்ச்சியிலும் நன்மைகள் உள்ளன. பிக் பாஸ் சர்ச்சைகள் மற்றும் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களுக்கும் பெயர் பெற்றது பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்சியில் தினமும் பிக் பாஸ் ரசிகர்கள் போட்டியாளர்களை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பி மக்களை ஈர்க்கும் புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளது. மக்கள் எந்த நேரத்திலும் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கலாம். பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒவ்வொரு மூலை முடுக்கையும் அப்படியே பார்க்க இது ஒரு விருந்து என்பதில் சந்தேகமில்லை.

மேலும் எந்த சந்தேகமும் இல்லாமல், வீட்டிற்குள் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும். அழகாக வடிவமைக்கப்பட்ட வீட்டை கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதனால் பல ரகசியங்களும் உண்மைகளும் காண்பிக்கப்படுகின்றன.

இந்த போட்டியில் ஒவ்வொரு வாரமும் யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்பதை ஆன்லைன் வாக்கு முடிவுகள் தீர்மானிக்கும். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பங்கேற்பாளர் குறைந்த வாக்குகளைப் பெற்றவர். ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியின் முடிவை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிப்பவர் கமல்ஹாசன்.

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதலாவதாக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் அசல் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 18 நபர்களே உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இந்த டிவி மற்றும் அந்த டிவி என செய்தி வாசிப்பது குறித்த நடைபெற்ற விளையாட்டு நடைபெற்றது. இதில் யார் நன்றாக செய்து என மகேஸ்வரி தீர்ப்பளித்தார். அப்போது அசீம் மற்றும் மகேஸ்வரி இடையே தீர்ப்பு குறித்து சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து இருவருக்கும் தொடர்ந்து நடைபெற்றுவரும் சண்டை தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதனிடையே பிக்பாஸ் சமூகவலைத்தள பக்கத்தில் ப்ரோமோ ஒன்று வெளியாகியது. அதில் அசீமுக்கும் மாகேஸ்வரிக்கும் இடையே நடைபெறும் சண்டையை காண்பிக்கிறது. இது ரசிகர்களிடையே வைரலாகப் பரவி எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் கேளிக்கை விளையாட்டில் சமூக சிந்தனையை தூண்டும் வகையில் சிறப்பாக கருத்துகளை முன் வைத்து வருகிறார் விக்ரமன். மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இனி வரக்கூடாது என கருத்துக்களைமேடை நாடகத்தில் எடுத்து கூறிய விக்ரமன் குழுவிற்கு வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!