ராஜமவுலி திரைப்படத்தை வாங்குவதற்காக 4 கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி

தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எஸ் எஸ் ராஜமவுலி கூட்டணியில் படத்தின் கதைக்களம் ரெடி ஆகிவிட்டதாம்
பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கியவர் எஸ் எஸ் ராஜமவுலி. தன்னுடைய பிரம்மாண்டமான கதைகளத்தோடு இவர் இயக்கும் அம்புட்டு படங்களும் தெலுங்கிலும் சரி, மற்ற மொழிகளிலும் சரி பிரம்மாண்டமான வரவேற்பை பெற்று வருது.
இந் நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரசிகர்களிடம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, மாஸ் வெற்றியையும், வசூல் சாதனையையும் படைச்சிருக்கு. இதனிடையே ராஜமவுலியின் அடுத்த திரைப்படத்திற்கான கதைக்களம் ரெடியான நிலையில் இவரின் திரைப்படத்தை வாங்குவதற்காக நான்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கிட்டிருக்காய்ங்களாம்
ராஜமவுலி தற்போது ஓய்வில் இருந்து வந்த நிலையில் இவரது அடுத்த படத்தை காண வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் ஓய்வில் இருந்ததெல்லாம் போதும் என நினைத்து தன்னுடைய அடுத்த படத்திற்கான கதைக்களத்தை வேகமாக செதுக்கி வாராராம்.
ஏற்கனவே ராஜமவுலி மற்றும் தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் உருவாகும் என்று தெலுங்கு திரை உலகத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் கதைக்களம் ரெடி ஆகிவிட்டதாகவும், இப்படத்தை தயாரிப்பாளர் கே .எல்.நாராயணன் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படத்தினை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாகவும், புதையலை தேடும் கதைக்களமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ஆப்ரிக்காவில் படப்பிடிப்பு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பேன் இந்தியா திரைப்படமாக ராஜமவுலி இயக்கும் இத்திரைப்படத்திற்கு முதலீடுகளை போடுவதற்காக பல முன்னணி கார்பரேட் நிறுவனமான பாலிவுட்டின் பெண் ஸ்டுடியோ நிறுவனம், தமிழில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் இப்படத்தில் திரையரங்கு டிஸ்ட்ரிபியூஷன் வாங்குவதற்கு போட்டி போட்டு வாராய்ங்களாம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu