/* */

அச்சம் தவிர் குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி வெளியீடு

Short Film Tamil -பெண் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அச்சம் தவிர் குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அச்சம் தவிர் குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி வெளியீடு
X

அச்சம் தவிர் குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி வெளியிடப்பட்டது.

Short Film Tamil -திருப்பூர் மாவட்டத்தில் பல விழிப்புணர்வு குறும்படங்களை இயக்கி பல்வேறு விருதுகளை பெற்ற பிரபல குறும்பட இயக்குனர் குமார் தங்கவேல் இயக்கத்தில் ஈஷா மீடியா தயாரிப்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் அச்சம்தவிர். இப் படத்தின் படப்பிடிப்பு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இப்படம் பெண்கள் பெண் குழந்தைகள் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி தைரியமாக எதிர் கொள்ள வேண்டும் என்பதை கருவாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.



இப்படம் பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் அசோக்குமார், வேலுசாமி, நடிகைகள் திரைப்பட குறும்பட நடிகை வென்மதி ஷீபா, மீனா, சுலோச்சனா, அனிதா கந்தசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை நாமக்கலை சேர்ந்த யாசின் மற்றும் மதுரையை சேர்ந்த கனி ஆகியோர் செய்துள்ளனர். பேராவூரணியை சேர்ந்த இசையமைப்பாளர் பாலா இசையமைத்துள்ளார். திருப்பூர் செந்தில் குமார் மேற்பார்வையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.


இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல திரைப்பட நடிகர் சாம்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார். அச்சம்தவிர் விழிப்புணர்வு குறும்படம் பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது. போட்டிகள் முடிவடைந்த பிறகு படம் வெளியிடப்படும் என்று படகுழுனர் தெரிவித்துள்ளனர்







அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Sep 2022 11:01 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்