நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படம்- இன்று பூஜையுடன் தொடங்கியது

நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படம்- இன்று பூஜையுடன் தொடங்கியது
X

நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படக்குழு

நடிகர் நட்டி எனும் நடராஜன் சுப்ரமணியம் நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

நடராஜன் சுப்ரமணியம் நட்டி அல்லது நட்ராஜ் என அறியப்படும் இவர் ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

நடராஜன் சுப்பிரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட இவரை நட்ராஜ் என்னும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தார். மேலும் இவர் பிளாக் ஃப்ரைடே, லாஸ்ட் டிரெயின் டூ மஹாகாளி, ஆகிய இந்தி திரைப்படத்திலும் மற்றும் யூத் ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளாராம். மேலும் சக்கரவியூகம், மிளகா, மற்றும் முத்துக்கு முத்தாக ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் வெற்றி சூடிய மிளகா திரைப்படம் இந்தியில் மறுஆக்கம் செய்யப்படுகிறது, இதில் தமிழில் நாயகனாக நடித்த நட்ராஜ் இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். 'ட்ரீம் ஹவுஸ்' சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் 'ட்ரீம் ஹவுஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 1' படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படம்- இன்று பூஜையுடன் தொடங்கியது

படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் நாயகிகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.

ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய்

மக்கள் தொடர்பு & நிர்வாக தயாரிப்பு: கே.எஸ்.கே செல்வா

தயாரிப்பு மேற்பார்வை: எம் எஸ் லோகநாதன்..




Tags

Next Story
ai marketing future