அக்காலத்தைய ஹாரிபாட்டர் விட்டலாச்சாரியா காலமான தினமின்று!Spl ரிப்போர்ட்

அக்காலத்தைய ஹாரிபாட்டர் விட்டலாச்சாரியா காலமான தினமின்று!Spl ரிப்போர்ட்
X

ஹாரிபாட்டர் விட்டலாச்சாரியா. 

Harry Potter Vittalacharia was born on January 20, 1920 in Udupi, Karnataka.

அக்காலத்தைய ஹாரி பாட்டர் விட்டலாச்சாரியா கர்நாடக மாநிலம் உடுப்பியில் 1920 ம் ஆண்டு ஜனவரி 20 ம் தேதி பிறந்தார்.இவருக்கு ஜானபாத பிரம்மா, மாயாஜால மன்னன் என புனை பெயர்களும் உண்டு.இவரது மனைவி ஜெயலெட்சுமி என்பவராவார்.இவர் தனது 79 வது வயதில் 1999 ம் ஆண்டு மே 28 ம் தேதி மறைந்தார்.

விஜயா வாஹிணி ஸ்டுடியோ இதில் நிரந்தரமாக செட் வைத்திருந்தவர்கள் இருவர் ஒருவர் சாண்டோ சின்னப்பா தேவர் மற்றவர் விட்டலாச்சார்யா இவர்கள் இருவரும் சினிமாவில் புதிய உத்திகள் கண்டுபிடித்து உழைத்து வாளர்ந்தவர்கள்.இதில் விட்டலாச்சார்யா சிறந்த திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தமிழ் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நிறைய திரைப்படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார்

அதாவது சில திரைப்படங்கள், பார்க்கும் பார்வையாளர்கள் எந்த வயதையொத்தவர்களாக இருந்தாலும், அவர்களை குழந்தையாக மாற்றி படத்தை ரசிக்க வைக்குமளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். உதாரணத்திற்கு, அக்காலத்தில் வெளிவந்த விட்டலாச்சார்யா திரைப்படங்களை சொல்லலாம். 'மாய மோதிரம்', 'ஜெகன் மோகினி' போன்ற திரைப்படங்கள் அக்காலத்தைய ஹாரி பாட்டர்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், ஆனால் அவைகள் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்படவில்லை..! பெரியவர் முதல் சிறியவர் வரை குழந்தையாய் மாறி ரசிக்கும்படியாய் அமைந்த திரைப்படங்கள் அவை.

தன்னிடம் இருந்த குறைந்த பணத்தை வைத்துக் கொண்டு தமிழ் தெலுங்கு சினிமாவில் பல அதிசயங்கள் செய்தவர்.எலும்புக் கூடுகள் கதை (gadhai)கத்தி கபட ஈட்டிஇரும்பு சங்கிலி கேடயம் பாம்பு தேளு இவைகள் தான் இவரது சொத்து. மாயா ஜாலம் மந்திரவாதி பாம்பு சூப் கரடி சண்டை இவைகள் இவரது தொழில் நுட்பம்.

ராஜாவின் உயிர் ஒரு கிளி கழுத்தில் இருக்கும், அந்த கிளியைக் கண்டுபிடிக்க pass word இருக்கும். ஒரு சிறுவன் ஏழு கடலைக் கடந்து கிளியின் பாஸ்வேர்ட் எல்லாம் கண்டறிந்து அதன் கழுத்தை திருக வேண்டும் திருகினால் ராஜா உயிர் பிழைப்பான் இப்படி கதையை வைத்து குறிப்பாக பெண் ரசிகர்களைக் கொண்டவர்

Steven Spielber (அல்லது ஹாரிபாட்டர் இயக்கியவர்) போன்றவர்கள் உலக சினிமா சந்தையில் கோடிக் கணக்கில் பெரும் பண செலவில் செய்த பல சாதனைகளை சில லட்சம் பண செலவில் எடுத்து சாதனை செய்தவர் என் டி ராமராவ், ராஜநளா, காந்த ராவ், ரேலங்கி, பாரதி, ராஜ்ஸ்ரீ, கிருஷ்ணவேணி, ஜெய மாலினி, விஜயலலிதா இப்படி பலருக்கு வாழ்வு தந்தவர் . இவர்கள் இவரது படங்களில் நிரந்தர நடிகர்கள் இவர் படத்தைக் காணும் பெண்கள் அழ வேண்டும் குழந்தைகள் சிரிக்க வேண்டும் டங்க டக்கர டங்க டக்கர டான்ஸ் காட்சி வேண்டும். படம் முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது மன மகிழ்வுடன் செல்லவேண்டும் எல்லை மீறாத ஆபாசமும் கலந்து காட்டுவது இவரது பாணி.

அன்னாருக்கு இன்ஸ்டாநியூஸ் சினிமா அப்டேட் குழு இந்த ரிப்போர்ட் வாயிலாக அஞ்சலி செலுத்துகிறது


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!