தொடாதே படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்னிக்கு ஈவ்னிங் நடக்கப் போகுது

தொடாதே படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்னிக்கு ஈவ்னிங் நடக்கப் போகுது
கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தயாரித்துள்ள திரைப்படம் 'தொடாதே'.
இப் படத்தில் நடிகர் 'காதல்' சுகுமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிச்சிருக்கார். படத்தில் நாயகனுக்கு இணையான, முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் நடிச்சிருக்கார்.
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் அலெக்ஸ். ஒளிப்பதிவு – ராஜேஷ், இசை – ராஜா, பாடல்கள் – பூமாதேவி, பாலமுருகன், ஜெயக்குமார், இணை இயக்கம் – நாகேந்திரன், உதவி இயக்கம் – பார்த்திபன், வள்ளி, சண்டை இயக்கம் – சிவப்பிரகாஷ், படத் தொகுப்பு – ஜி.நாகர், நடன இயக்கம் – பாரதி, மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு – எஸ்.அலெக்ஸ், தயாரிப்பு எஸ்.ஜெயக்குமார்.
பெரும்பாலான கொலை மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் 'போதையில் செய்துவிட்டேன்' என்றே வாக்குமூலம் அளிக்கிறார்கள். மேலும் நடுத்தரக் குடும்பத்திற்கும், கீழான மக்களின் வருமானம் மதுபானக் கடைகளில் சீரழிகிறது. அதை குடிமகன்கள் புரிந்து கொண்டு, குறைந்தபட்சமாவது திருந்த வேண்டும் என்கிற நோக்கில், ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்குதாம்.
அதாவது 'குடியைத் தொடாதே', 'பெண்ணின் விருப்பமில்லாமல் அவளைத் தொடாதே', 'போதைப் பொருட்களை தொடாதே' என்னும் சமூகக் கருத்துக்களை மையமாக வைத்து இந்தப் படத்தின் திரைக்கதையை அமைச்சிருக்காராம் இயக்குநர் அலெக்ஸ்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னிக்கு ஈவ்னிங் நடக்கப் போகுது
இந்த பங்கஷனின் Chief Guest ;
லியாகத் அலிகான்
பாலாஜி சக்திவேல்
மன்சூர் அலிகான்
கலைப்புலி ஜி.சேகரன்
பேரரசு
மற்றும் பலர்...வரப் போறதாச் சொல்லி அழைப்பு வந்துருக்குது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu