கமலுக்கு விருந்து உபசரிப்பு… சிரஞ்சீவி அளித்த சிறப்பு..!

தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நடிகர் கமல்ஹாசனையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் தனது வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து உபசரித்து பாராட்டி மகிழ்ந்துள்ளார்
Kamal Haasan News Today - திரைவானில் எழுபதுகளில் எண்பதுகளில் தொண்ணூறுகளில் என கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் நாயகர்களாகவும் பிரத்தியேக கதாபாத்திரங்களாகவும் ஜொலித்துக் கோலோச்சிக்கொண்டுள்ள நடிகர்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மம்முட்டி, மோகன்லால், திலீப்குமார் போன்ற தென்னிந்திய நடிகர்களும் ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களையும் குறிப்பிட்டுக் கூறலாம்.
இன்றைய இளைய கலைஞர்களுக்குப் போட்டியாக இந்த மூத்த கலைஞர்களின் படங்களும் வெற்றிச் சாதனை படைப்பது என்பது புருவம் உயர்த்தி வியக்கும் ஆச்சர்யம்தான். அந்தவகையில், கடந்த ஜூன் 3ஆம் தேதி உலகெங்கும் வெள்ளித்திரையில் ரசிகர்களின் ஃபுல் எண்டர்டெய்ன்மெண்ட் விருந்து படைத்தது 'விக்ரம்' படம்.
தற்போது இரண்டாவது வாரத்தில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் 'விக்ரம்' உலகெங்கும் வசூலில் 300 கோடியை நெருங்கி சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியது நான்கு படங்கள். நான்குமே வெற்றிபடங்கள் என்றாலும் நான்காவது படமான 'விக்ரம்' இமாலய வெற்றி என்பதுதான் குறிப்பிடத்தக்க கூடுதல் சிறப்பு. மூத்த கலைஞரான கமல்ஹாசன் இப்படத்தில் எந்தவித ஈகோவும் இன்றி ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட இளைய முன்னணி நடிகர்களோடும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் மிகவும் இளையவர்களான பிற டெக்னீஷியன்கள் என அனைவரோடும் இரணடறக்கலந்து கமல் ஆற்றிய பங்களிப்பு என்பது ஆகச்சிறப்பு.
இவை அத்தனையும் ஒருங்கிணைந்த அவுட்புட்தான் 'விக்ரம்' அள்ளிக் குவித்துக்கொண்டிருக்கும் வெற்றிச்சாதனை என்பது. இதற்காக இந்தியத் திரைவானின் சக கலைஞர்கள் அனைவருமே நடிகர் கமல்ஹாசனை உச்சிமுகர்ந்து பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில், தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிகர் கமல்ஹாசனையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் தனது வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து உபசரித்து பாராட்டி மகிழ்ந்துள்ளார். ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சல்மான் கானும் இந்த விருந்தில் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து, சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது அன்பான பழைய நண்பர் கமல்ஹாசனை அழைத்து நேற்று(11/06/2022) இரவு வீட்டில் விருந்தளித்து கௌரவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 'விக்ரம்' படத்தின் அற்புதமான வெற்றிக்கு நான் அளித்த இந்த விருந்தில் எனது நெருங்கிய நண்பர் சல்மான்கான் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்" என்றதோடு,
"என்ன ஒரு த்ரில்லிங்கான படம். எனது நண்பா! மேலும் உங்களுக்கு சக்திகள் கிடைக்க வாழ்த்துகள்" என்று கமல்ஹாசனை வாழ்த்திக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu