விஜய் சேதுபதி நடிப்பில் இந்தியில் வெளியான ஃபார்ஸி வெப்சீரியஸ் விமர்சனம்.... இங்கு படிங்க

விஜய் சேதுபதி நடிப்பில் இந்தியில் வெளியான ஃபார்ஸி வெப்சீரியஸ் விமர்சனம்.... இங்கு படிங்க
X

பார்ஸி (பைல் படம்) 

Farzi season 1 review in tamil-இரட்டை இயகுனர்களான ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கி உள்ள புதிய வெப்சீரிஸ் ஃபார்ஸி இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

தி ஃபேமிலி மேன் 1 மற்றும் 2 வெப்சீரிஸை இயக்கிய இரட்டை இயகுனர்களான ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கி உள்ள புதிய வெப்சீரிஸ் ஃபார்ஸி இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

மனோஜ் பாஜ்பாயி, பிரியாமணி நடித்த முதல் பாகமே ரசிகர்கள் மத்தியில் ராஜ் மற்றும் டிகேவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்த நிலையில், சமந்தா நடித்த இரண்டாம் பாகம் வேறலெவல் ஹிட் அடித்தது.

இந்நிலையில் ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கிய ஃபார்ஸி படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் யாருமே கண்டே பிடிக்க முடியாத அளவுக்கு கள்ளத்தனமாக நோட்டுக்களை அச்சு பிசகாமல் அச்சடிக்கும் ஷாகித் கபூரை போலீஸ் அதிகாரி விஜய்சேதுபதி மற்றும் ஆர்பிஐ வங்கி அதிகாரி ராஷி கண்ணா இருவரும் இணைந்து பிடித்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த ஃபார்ஸி வெப்சீரிஸின் கதை.

Farzi season 1 review in tamil-ஷாகித் கபூர் மற்றும் விஜய்சேதுபதியின் நடிப்பை பார்க்க ஆசையாக வந்த ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸாக நடிகர் கேகே மேனனின் அசத்தல் பர்ஃபார்மன்ஸ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரோட கதாபாத்திரமும் நடிப்பும் எக்ஸ்ட்ராடினரி என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மைக்கேல் எனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கள்ளநோட்டு அச்சடிக்கும் நாயகன் ஷாகித் கபூரை கண்டுபிடிக்கும் வேலையை பக்காவாக செய்து ஸ்கோர் செய்துள்ளார் விஜய்சேதுபதி. அவரது இந்தி டப்பிங் கச்சிதமாக பொருந்தியுள்ளது என பாலிவுட் ரசிகர்களே விஜய்சேதுபதிக்கு விசில் அடித்து வருகின்றனர். ஃபர்ஸி வெப்சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Farzi season 1 review in tamil-ஃபார்ஸி வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு பிடிக்கும் அளவுக்கு செம ஸ்பீடான த்ரில்லர் வெப் சீரிஸாகவே நகர்கிறது. நடிகர்களின் நடிப்பு, மேக்கிங், ஒளிப்பதிவு, ஸ்க்ரீன்பிளே அனைத்தும் பாசிட்டிவாக உள்ளது. அதே சமயம் நெகட்டிவ் என்று பார்த்தால் சில எபிசோடுகள் லேக் அடிக்கிறது. 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய கதையை 8 எபிசோடுகளுக்கு நீட்டி முழக்கி உள்ளனர் என சில நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார்.

ஃபார்ஸி வெப்சீரிஸுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், இந்த வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸின் பிரபலமான பிரேக்கிங் பேட் உடையை சீப் காப்பி என இந்த நெட்டிசன் கடுமையாக விமர்சித்துள்ளார். ஃபார்ஸி வெப்சீரிஸின் நீளத்தை குறைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்பதே பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அதே சமயம் நடிகர்களின் நடிப்பை ஏகப்பட்ட பேர் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story