பிரபல திரைப்பட நடிகர் சக்ரவர்த்தி திடீர் மாரடைப்பு காரணமாக மரணம்.

80-களில் பிரபல நடிகராக இருந்தவர் சக்ரவர்த்தி. சிவாஜி, ரஜினி, கமல் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிச்சிருக்கார்.
சிவாஜி நடிப்பில் வெளியான 'ரிஷி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதுவரை 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய சிறந்த நடிப்பால் 80-களில் ரசிகர்களின் அன்பை பெற்றிருந்தார். நடிகை ராதிகாவுடன் 'கண் மலர்களின் அழைப்பிதழ்' என்ற பாடலில் இவர் ஆடிய நடனம் மிகவும் பிரபலம். சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் சென்னையில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தார். அங்கு பிரபல விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் பின்னணி குரல் கொடுத்தார். இதுதவிர தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்த வருகிறார்.
இந்நிலையில் 62 வயதாகும் சக்ரவர்த்தி, இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவரை அவரது மனைவி லலிதா இன்று காலை எழுப்பியிருக்கிறார். நீண்ட நேரம் எழுப்பியும் அவர் எழாததால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சக்ரவர்த்தியின் திடீர் மரணம் தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சக்ரவர்த்திக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார், அஜய்குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu