பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்
நடிகர் கங்கா
கடந்த 1980ம் ஆண்டு கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து கொடிகட்டி பறந்தவர் நடிகர் கங்கா. இவர் நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். இவருக்கு திருமணமாகததால், சென்னையில் உள்ள தனது சகோதரர் குடும்பத்துடன் இவர் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் கங்கா. பின்னர் கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பிரபலமானவர்.
சில படங்களில் இரண்டாவது ஹீரோ போன்ற கதாபாத்திரத்தை ஏற்றுத் தனது நடிப்புத் திறமையால், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போதுவரை உயிருள்ள வரை உஷா படத்தில் இவரது நடிப்பில் வெளியான 'வைகை கரை காற்றே நில்லு'.. என்ற பாடல் பிரபலமானது.
இந்த நிலையில் நடிப்பிலிருந்து விலகி, திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த கங்கா, தனது சகோதரர் குடும்பத்துடன் மயிலாப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாரடைப்பு ஏற்பட்ட சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர். நடிகர் கங்காவின் இறுதிச் சடங்கு சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu