எவர் கிரீன் நாயகிகளான நயன்தாராவும் திரிஷாவும் ஒரே படத்தில் இணைகிறார்கள் ..?!

எவர் கிரீன் நாயகிகளான நயன்தாராவும் திரிஷாவும் ஒரே படத்தில் இணைகிறார்கள் ..?!
X

நடிகை நயன்தாரா, நடிகை த்ரிஷா

Trisha Actress -தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகிகளான நடிகை நயன்தாராவும் நடிகை திரிஷாவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்களாம்.

Trisha Actress -அந்தக் காலம் தொட்டே தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகிகள் அவ்வப்போது ஒரே படத்தில் இணைந்து நடித்து வருவது வழக்கம். ஆனால், அது அத்தனை எளிதில் அமைவதில்லை. அப்படி அமையும்போது அது குறித்தான பேச்சும் ரசிகர்களிடையே எழும் வரவேற்பும் உற்சாகமும் பரபரப்பைக்கூட்டும். அதேபோல், தமிழ்த் திரையுலகில் நாயகிகளில் ஒரு சிலர் மட்டுமே திரையில் நாயகிகளாக தொடர்ந்து பல ஆண்டுகள் நிலைப்பதும் வெற்றி நாயகிகளாக நீடித்து வலம் வருவதும் உண்டு.

அவ்வகையில், தமிழ்த் திரையுலகில் மட்டும் இன்றி தென்னிந்தியப் பட உலகிலும் தாங்கள் அறிமுகமான பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து இப்போது வரை கதாநாயகிகளாக வெற்றியுடன் திகழ்பவர்கள் நடிகை நயன்தாராவும் நடிகை திரிஷாவும் ஆவர். இந்தநிலையில், எவர் கிரீன் நாயகிகளான இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்மையில் வெளியாகி, உலகம் முழுவதும் வெற்றிச்சாதனை படைத்து வரும் இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகை திரிஷா, குந்தவையாக நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது என அனைவரும் இவரது நடிப்பை பாராட்டி உள்ளனர். செப்டம்பர் 30-ம் தேதி வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வந்து பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தமிழ் சினிமாவின் எவர் கிரீன் நடிகைகளான திரிஷா மற்றும் நயன்தாராவை இணைந்து நடிக்க வைக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் முயற்சி செய்தனர். ஆனால், அது முடியாமல் தள்ளித் தள்ளிப் போனது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அண்மையில் வெளியான, 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில்கூட நடிகை நயன்தாரா, திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது முடியாமல் போனதால், நடிகை சமந்தா அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது நயன்தாராவும் திரிஷாவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரிஷா தற்போது, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் கதாநாயகனாக நடிக்கும் மலையாளப் படமான, 'ராம்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாராவை ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் ரெட் கார்பெட் சுரேஷுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் இணைந்து 'ராம்' படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்துள்ளதாக மலையாளப் பட உலக முக்கியப் பிரமுகர்களால் தகவல்கள் தெரியவருகிறது. முதல் பாகத்தின் இறுதியில் வரும் நயன்தாரா அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் லீட் ரோலில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

நடிகை நயன்தாரா தற்போது, இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜவான்' இந்தி திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஷாருக்கான் இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோனே ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தநிலையில், புதிய படமொன்றில் நடிகை நயன்தாராவும் நடிகை திரிஷாவும் இணைந்து ஒரு படத்தில் நாயகியர்களாக நடிக்கவிருக்கின்றனர் என்கிற செய்தி நயன்தாரா மற்றும் திரிஷா ஆகியோரின் ரசிகர்களிடையே புதியதொரு உற்சாகத்தைத் தந்துள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story