Vela Ramamoorthy Salary எதிர்நீச்சலில் நடிக்க ராமமூர்த்தி வாங்கும் சம்பளம்.. வாயடைத்து போன ரசிகர்கள்..!

Vela Ramamoorthy Salary எதிர்நீச்சலில் நடிக்க ராமமூர்த்தி வாங்கும் சம்பளம்.. வாயடைத்து போன ரசிகர்கள்..!
X
எதிர்நீச்சலில் வேலராமமூர்த்தி வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்நீச்சல் சீரியலில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ராமமூர்த்தி நடிக்க சம்மதித்துள்ளதாகவும் அதற்காக அவருக்கு பெரிய தொகை ஒன்று சம்பளமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் சில வாரங்களாகவே குணசேகரன் கதாபாத்திரம் இல்லாமல் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

இந்நிலையில், இன்று (2023 ஆகஸ்ட் 3) புதிய குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் மற்றும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்துள்ளார்.

சீரியலின் புரோமோவில், போலீசார் கதிர் மற்றும் ஞானத்தை விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது, அங்கு ஜனனி மற்றும் சக்தி ஆகியோரும் உள்ளனர். நந்தினியிடம் ஜனனிக்கு போன் செய்து அங்கு என்ன நடக்கிறது என்று கேட்க சொல்கிறார் ஈஸ்வரியின் தந்தை. நந்தினியோ அதெல்லாம் அவங்களே சொல்லுவாங்க என்று கூறுகிறார்.

இதையடுத்து, போலீசாரிடம் கொஞ்சம் ஓவராக வாயை விட்டு, கதிர் மற்றும் ஞானம் தர்ம அடி வாங்குகின்றனர். அப்போது, கருப்பு நிற ஜீப்பில் செம்ம கெத்தாக குணசேகரன் என்ட்ரி கொடுக்கிறார். "ஏய்" என மிரட்டல் குரலால் சத்தமிட்டபடி ஜீவை விட்டு இறங்குகிறார் வேல ராமமூர்த்தி. இதனைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

இதன் மூலம், இன்று முதல் எதிர்நீச்சல் சீரியலில் வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. மேலும் இன்னும் ஏன் சஸ்பென்ஸ் அது இது என்று இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்தான் நடிக்கிறார் என்பது உறுதியாக தெரிந்துவிட்டதே இப்போதே அறிவித்துவிட வேண்டியதுதானே என்கிறார்கள் ரசிகர்கள்.

வேல ராமமூர்த்தி சம்பளம்

ஒரு நாளைக்கு (எபிசோடுக்கு அல்ல) நடிகர் வேல ராமமூர்த்தி கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னதாக இதே கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு நடிகர் மாரிமுத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினாராம். இப்போது இரண்டு மடங்காக கேட்டு வாங்கியிருக்கிறார் வேல ராமமூர்த்தி.

வேல ராமமூர்த்தியின் குணசேகரன் கதாபாத்திரம் எப்படி இருக்கும்?

வேல ராமமூர்த்தி ஒரு திறமையான நடிகர் மற்றும் எழுத்தாளர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்களால் பாராட்டப்பட்டுள்ளன.

வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் இந்த கதாபாத்திரத்தை எப்படி நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரம் சீரியலுக்கு எந்த மாற்றத்தை கொண்டு வரும்?

வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரம் சீரியலுக்கு புத்துணர்ச்சி சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தனது திறமையால் இந்த கதாபாத்திரத்திற்கு ஒரு புதிய அர்த்தத்தை கொடுப்பார் என்று நம்பப்படுகிறது.

வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரம் சீரியலின் கதையை மேலும் சுவாரஸ்யமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாரிமுத்துவை மிஸ் செய்யும் ரசிகர்கள்

ஆதிகுணசேகரனாக ஆரம்பம் முதல் நடித்து வந்த மாரிமுத்துவை மிஸ் செய்வதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர். புதிதாக வரும் வேல ராமமூர்த்தி என்னதான் குணசேகரன் கதாபாத்திரத்துக்கு ஈடு கொடுத்தாலும் அது மாரிமுத்து அளவுக்கு இருக்குமா என பேசி வருகின்றனர். அதேநேரம் மாரிமுத்துவை விட இவர் சீனியர் என்பதும், இயல்பிலேயே கறாரான குணம் கொண்டவர் என்பதால் எளிதாக இந்த கதாபாத்திரத்தை தூக்கி சாப்பிடுவார் என்றும் கூறுகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare