பட்டம்மாள் கைரேகையை எடுக்க திட்டமிடும் குணா, ஜீவா! ஷாக்கிங் டுவிஸ்ட்?

பட்டம்மாள் கைரேகையை எடுக்க திட்டமிடும் குணா, ஜீவா! ஷாக்கிங் டுவிஸ்ட்?
X
அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் ஜீவானந்தம் அடுத்தடுத்து சூழ்ச்சிகளை உருவாக்குகிறாரா? அல்லது முடிச்சுகளை அவிழ்க்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 9th June 2023

ஆதிரை - அருண் திருமணத்தை நடத்தி முடிக்க ஜனனி பல்வேறு திட்டங்களை நடத்தி வருகிறார். இந்த வேளையில் ஜீவானந்தத்தால் என்னென்ன பிரச்னைகள் வரப் போகின்றதோ தெரியவில்லை.


எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 8th June 2023

எதிர்நீச்சல் தொடர் மிகவும் சுவாரஸ்யமான கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. மற்றவர்களிடம் அடித்துப் பிடுங்கிய நிலத்தை அவர்களை மிரட்டி வாங்கும் ஜீவானந்தத்தைத் தேடுகிறாள் ஜனனி. அப்பத்தா பல முறை இந்த பெயரை உச்சரித்து இருப்பதால், அவரால் தங்களுக்கு உதவி கிடைக்கும் என்று நம்பி அவரைத் தொடர்பு கொள்கிறாள் ஜனனி. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் ஜீவானந்தத்தால் நமக்கு பிரச்னைதான் வரப்போகிறது என்பதை அவள் உணர்ந்துகொள்கிறாள்.

ஜனனி படிச்ச பொண்ணு அதனால வேகமாக காய் நகர்த்திட்டு போயிட்டே இருக்கா. அதனால பட்டம்மாளோட கைரேகைய சீக்கிரமா எடுக்கணும் என்கிறான் ஜீவானந்தம். அதே நேரத்தில் திருமண மண்டபத்தில் உன் தங்கச்சிக்கு விருப்பம் இல்லையா என்று கூறி ஜான்சி ராணி மிரட்டுகிறார்.

ஆதிரை திருமணம் கரிகாலனுடன் நடைபெறுமா அருணுடன் நடைபெறுமா என நேயர்கள் ஆர்வமாக இருக்க, இப்போது ஜீவானந்தம் புது பிரச்னையை குணசேகரன் குடும்பத்துக்குள் ஏற்படுத்தப்போகிறார்.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 10th June 2023

ஆதிரை திருமணத்துக்கு சம்மதித்து குணசேகரன் மூக்கை அறுக்க ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதனால் கரிகாலன் - ஆதிரை திருமணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த வேளையில் ஜீவானந்தத்தால் அப்பத்தாவுக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது. இல்லை என்ன பிரச்னை வரப் போகிறது என ஜனனி விழி பிதுங்கி நிற்கிறாள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!