குணசேகரனுக்கு விழுந்த அடி... அருணின் அவமானத்துக்கு பதிலடி!

குணசேகரனுக்கு விழுந்த அடி... அருணின் அவமானத்துக்கு பதிலடி!
X
எஸ்கே ஆரின் தம்பியிடம் வீணே வம்பிழுக்கிறான் குணசேகரன். அவனோ கொஞ்சம் பொறுமையாக இருக்க, உங்க அண்ணன் உங்க அண்ணி முந்தானய புடிச்சிட்டு சுத்திட்டு இருக்கானா என கேட்கிறான்.

இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 7th March 2023


குணசேகரனின் ஒரே தங்கை அங்கே மருத்துமனையில் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறாள். அவளுக்கு தன் காதலன் அருணுடன் சேர்வேனா என்பது கவலை. அதைவிட பெரிய கவலை தன் அண்ணன் தான் நினைத்த மாதிரி இல்லை தான் இறந்தாலும் கவலைப்படாமல் இருக்கிறான் என்று நினைக்கிறாள். இதைவிட பெரிய தொந்தரவாக கரிகாலனும் அவனது அம்மாவும் பண்ணும் அழிச்சாட்டியம் இருக்கிறது. இப்படி ஏகப்பட்ட கவலைகளில் இருந்து கொஞ்சம் மீண்டு வந்துள்ள ஆதிரையை மருத்துவர் பரிசோதனை செய்கிறார்.

ஆதிரை எப்படி இருக்கா டாக்டர் என ஜனனி டாக்டரிம் கேட்க அவர் ஏதேதோ சொல்கிறார். அநேகமாக நற்செய்தியாகத் தான் இருக்கும். ஆதிரைக்கு குணமாகிவிட்டது விரைவில் வீட்டுக்கு கொண்டு செல்லலாம் என்பதாகத்தான் இருக்கும்.


எஸ்கே ஆரின் தம்பியிடம் வீணே வம்பிழுக்கிறான் குணசேகரன். அவனோ கொஞ்சம் பொறுமையாக இருக்க, உங்க அண்ணன் உங்க அண்ணி முந்தானய புடிச்சிட்டு சுத்திட்டு இருக்கானா என கேட்கிறான். தானே இறங்க வேண்டாம் என நினைத்த எஸ்கேஆர் தம்பி ஆளை வைத்து திட்டம் போடுகிறார் போல. பலர் வந்து குணசேரனை சட்டையைப் பிடித்து அடித்து உதைக்கிறார்கள். அத்துடன் புரோமோ முடிவடைகிறது.

முந்தைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 6th March 2023

குணசேகரன் வீட்டில் போலீஸ் சென்று விசாரிக்கிறது. அங்கு போலீஸ் வந்திருப்பதை அறிந்த குணசேகரன் காவலர்களிடம் என்ன என விசாரிக்கிறான். என்ன இந்த பக்கம் என தனக்கே உரிய அந்த அதிகார திமிர்த்தனத்தில் கேட்கிறான்.

குணசேகரனின் அதிகாரத்துக்கு அடிபணிந்து நிற்கும் காவல் அதிகாரியும் அமைதியாக தம்பி கதிரை கூட்டிட்டு போக வந்திருக்கோம்னு சொல்றார். இதைக் கேட்ட கதிர் அவர்களைப் பார்த்து எகத்தாளமான லுக் ஒன்றை விடுகிறான். உடனே காவலர்கள் ஸ்டேசன் வரைக்கும் கொஞ்சம் கூட்டிட்டு போயிட்டு வரோம்னு போலீஸ் சொல்ல, எதுக்கு என்று கேட்கிறான் குணசேகரன்.

தம்பி கதிர், அருணை அடித்து தங்கை ஆதிரையை இழுத்துவிட்டு வந்த விசயத்தை கூறியிருப்பார்கள் போல. அதற்கு ஆதாரம் இருக்கா என்று கேட்கவே, கையிலிருக்கும் மொபைல் ஃபோனை எடுத்து ஆதாரத்தை நீட்டுகிறது போலீஸ்.இதனைப் பார்த்து கொஞ்சம் கோபமடைந்த கதிர் போலீஸை முறைத்து பார்க்கிறான்.


அங்கே மருத்துவமனையில் தனது நாடகத்தைப் போட தயாராகிவிட்டாள் கரிகாலனின் தாய். கரிகாலன் தன் தாயை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததை சற்றும் எதிர்பாராத சக்தி அவனை இங்கு வரச் சொன்னது யார் என்று கேட்க முன்னே செல்கிறான்.

அவனிடம் கோபத்தில் உன்னை யார் இங்க வரச் சொன்னது என்று கோபமாக கேட்க, உங்க அண்ணன் சொல்லிவுட்டுதான் நாங்க வந்தோம் என்று கரிகாலனின் தாய் கூறுகிறாள்.

அண்ணன் சொல்லிட்டா.. ஆதிரை கட்டிக்க மாட்டா என கோபமாக சொல்ல, அதற்கு கரிகாலனின் தாய் அவனை முறைத்து பார்க்கிறாள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!