Ethirneechal மகளுக்காக குணசேகரனை பகைக்கும் ரேணுகா! ஜனனியை பழி தீர்க்கப்போகும் குணசேகரன்!
எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் 5 ஜூலை 2023 | Ethirneechal Today Episode 5th July 2023
விரைவில் அப்டேட் செய்யப்படும்
எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் 4 ஜூலை 2023 | Ethirneechal Today Episode 4th July 2023
எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் 3 ஜூலை 2023 | Ethirneechal Today Episode 3rd July 2023
ஜனனியும் சக்தியும் வீட்டுக்கு வந்த பிறகு, கரிகாலனையும் ஆதிரையையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கிறார்கள். ஆதிரையை அவள் வீட்டுக்கே சென்று அழைத்து வர சக்தியுடன், ஜனனி, நந்தினி ஆகியோரும் வருகின்றனர். ஜான்சி ராணி தனது அடாவடித்தனத்தை அங்கேயும் காண்பிக்கிறார். உள்ளே ஜனனி, நந்தினி, ஆதிரை பேசிக் கொண்டிருக்கையில் ஜான்சி ராணி கதவை தட்டி அடிதடி செய்கிறாள். கல்யாண மண்டபத்தில் பொண்ண கடத்திட்டு போனவ இவதான் என நந்தினியை காண்பிக்கிறாள்.
அதற்கு நந்தினி தக்க பதிலடி கொடுக்கவே, அடுத்து ஆதிரையைச் சமைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறாள் ஜான்சி ராணி. கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தா அடுப்படில போயி காபியாச்சும் போட வேண்டாமா என கோபப்படுகிறாள். இதனால் ஆதிரை தாலியைத் தூக்கி காண்பித்து சமைக்கணுமா சமைக்கணுமா என கொந்தளிக்கிறாள். இதனால் பதறிப் போன கரிகாலன் வேண்டாம் தாலிய கழட்டிறாத என்று சொல்ல, ஜான்சி ராணி அமைதியாக நிற்கிறாள். நான் என் வீட்டுக்கு போகணும் என்று சொல்ல, கரிகாலன் கூட்டிப் போவதாக சொல்லி சமாதானம் செய்கிறான்.
மறுவீட்டுக்கு செல்லும் கரிகாலனையும் ஆதிரையையும் நிற்க சொல்லி, ஜான்சி ராணி ஒவ்வொரு வீடாக என் புள்ள மறுவீடு போறான் என சொல்லிக் கொண்டே நடந்து வருகிறார்கள். பின்னாடி ஜனனியும் சக்தியும் நடந்து வர, நந்தினியின் கையைப் பிடித்துக் கொண்டே ஆதிரையும் அம்மாவுடன் பேசிக் கொண்டே கரிகாலனும் நடந்து வருகிறார்கள். ஜான்சி ராணி கரிகாலனைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பிக்கிறாள்.
குணசேகரன் வீட்டில் ரேணுகாவும் குணசேகரனும் வார்த்தை விளையாட்டில் மோதிக் கொள்கிறார்கள். பாத்தியா ஞானம் உன் பொண்டாட்டியோட பதில என சொல்கிறான். ஞானசேகரன் கோபத்தில் அவளை முறைக்கிறான்.
குணசேகரன் வீட்டுக்கு வருகிறார்கள். ஆதிரை வேகமாக உள்ளே செல்ல முயற்சிக்க, குணசேகரன் அவளைத் தடுத்து நிறுத்துகிறார். உடனே ஆரத்தி தட்டு எங்கே கரைக்கச் சொன்னேன்ல என ரேணுகாவை முறைக்கிறான். நான் மளிக லிஸ்ட் எடுத்து பாத்துட்டு இருந்தேன் என்கிறாள். முதன்முதலா நீ கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்தப்ப உனக்கு ஆரத்தி எடுத்தோம்ல மறந்து போச்சா என்று கேட்க, அதற்கு பதிலளித்த ரேணுகா ரொம்ப நாள் ஆச்சுல்ல மறந்துடுச்சி என்கிறாள்.
அந்த நேரத்தில் ஆட்டோவில் ரேணுகாவின் மகளை அழைத்து வருகிறார்கள். அவருடைய ஆசிரியரும் அவள் வயசுக்கு வந்துவிட்டாள் சொல்லாமலே இருந்திருக்கிறாள் என்று கூறுகிறார். மூன்று நாட்களாக சொல்லாமல் இருந்திருக்கிறாள். உங்கள் வீட்டில் எதும் பிரச்னையா என்ன ஆச்சுன்னு போயி கூப்பிட்டு பேசுங்க.
ஐஸ்வர்யா ரொம்ப நல்ல பொண்ணு பிரிலியன்டான பொண்ணு எல்லா எக்ஸாம்லயும் நல்ல மார்க் எடுப்பா என சொல்லிட்டு போகிறார். இதனால் அங்கு ரேணுகாவும் நந்தினியும் ஐஸ்வர்யாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் குணசேகரன் ஏம்மா அழறீங்க. நல்ல விசயம்தான நடந்திருக்கு கூட்டிட்டு உள்ள போங்கம்மா என்கிறான். அதற்குள் ஞானத்துக்கும் ரேணுகாவுக்கும் சண்டை வருகிறது. தாங்கள் என்னன்ன வேலைகள்லாம் செய்றோம் நீங்க சும்மா வந்து சாப்பிட்டுட்டு போயிடுறீங்க என்று அவளின் வலியை உணர்த்தி கத்தி பேசுகிறாள். பின் ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடுகிறார்கள்.
கரிகாலன் ஆரத்திக்காக காத்திருந்து பின் குணசேகரனிடம் கேட்க, அட போடா நீ வேற இங்க என்ன விசயம் நடந்திருக்கு, நீ ஆரத்திக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க, வாப்பா எனக்கு ஆரத்தி எடுக்க தெரியாது, வலது காலோ இடது காலோ ரெண்டும் நம்ம கார்தான உள்ள வா என்று செல்கிறான் குணசேகரன்.
மேலே ரேணுகா அழுதுகொண்டிருக்கிறாள். அம்மாகிட்ட சொல்ல முடியாத அளவுக்கு என்ன பிரச்னை என்று ஐஸ்வர்யாவைக் கேட்கிறாள். அப்போது மிகவும் பக்குவமாக ஐஸ்வர்யா பதில் சொல்கிறாள். நான் வயசுக்கு வந்துட்டத சொல்லிட்டா மட்டும் இவங்க என்ன செய்ய போறாங்க. என்ன ஒரு ரூமுக்குள்ள அடச்சி வச்சி, சொந்த காரங்கள கூட்டு விருந்து வச்சி, அப்றம் கீழ உக்காந்து இருக்கான்ல ஒரு லூசு, அவன மாதிரி ஒருத்தன கூட்டி வந்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க. இதல்லாம் பிடிக்கலன்னு சொன்னா அப்பா பெரியப்பாகிட்ட தயங்கி தயங்கி சொல்வாரு, அதுக்குள்ள பெரியப்பா இது என் வீடு என் சொத்துனு சொல்ல, அப்றம் அப்பாவும் அவரு கால்ல விழுந்துடுவாரு. இதான் நடக்கப் போகுது என்று கூறுகிறாள் ஐஸ்வர்யா.
அதற்கு தாங்கள் உனக்கு துணையாக இருப்போம் ஐஸ்வர்யா என ஜனனி சொல்கிறாள். அதேநேரம் இந்த வீட்டில் எல்லாரும் எல்லாத்தையும் போராடி போராடிதான் பண்ணனும். ஆதிரை அத்தை விசயத்துலயே தெரிஞ்சி போச்சு. இங்க பொம்பள புள்ளையா பொறந்துட்டாளே லைஃப் காலி. எங்க லைஃபோட அத்தன ரைட்ஸையும் அவரே எடுத்துக்குறாரு. என் கிளாஸ்ல படிக்குற ரேஷ்மா, திவ்யானு எல்லாரும் ஏஜ் அட்டண்ட் பண்ணிட்டாங்க. அவங்க யாரும் வீட்ல இத சொல்லிட்டாங்க. யாருமே பெருசா எடுத்துக்கல. அடுத்தநாளே சாதாரணமா ஸ்கூலுக்கு வந்துட்டாங்க.
நீங்க தர்ஷினிகிட்ட என்ன சொன்னீங்க சித்தி, இது பாடில நடக்குற ஒரு ஹார்மோனல் சேஞ்ச். சாதாரணமா எல்லா பொண்ணுங்களுக்கும் உடம்புல வர்ற விசயத்த வச்சி இவங்க ஸ்டேட்டஸ் கேம் ஆடிட்டு இருக்காங்க. பெரியப்பா காசுல இந்த ஃபங்ஷன் நம்ம நடத்தணுமாம்மா என்று கூறுகிறாள். என்னையும் உங்கள மாதிரி ஆக்குறதுக்கான பர்ஸட் ஸ்டெப் தான்மா இந்த பங்ஷன் என்று கூறுகிறாள்.
சித்தி என் ஃப்ரண்ட்ஸோட அப்பா, அம்மா எல்லாம் அவங்க கொழந்தைங்கள உக்கார வச்சி, உங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன வேணும்னு கேப்பாங்க சித்தி, இதுமாதிரி நம்ம வீட்ல எப்பவாச்சும் ஹெல்த்தி கான்வர்சேசன் நடந்துருக்கா சித்தி என்று ஐஸ்வர்யா கேட்க அனைவரும் இல்லை என தலையாட்டுகிறார்கள். அதை படிக்கட்டிலிருந்து ஞானசேகரன் கேட்டு வருத்தப்படுகிறான்.
படிக்காத அப்பாக்கள்லாம் நாமதான் படிக்கல நம்ம புள்ளைங்களாச்சும் படிக்கட்டும் என நினைப்பாங்க. ஆனா நம்ம வீட்ல இவங்கள்லாம் வேற டைப்பு என்று சொல்லும்போது கோபப்பட்டு ஞானசேகரன் ஐஸ்வர்யாவைத் திட்டுகிறான். இவ்ளோ நாள் சொல்லாம எங்க கூட எல்லாம் புழங்கிட்டு இருக்க இது ரொம்ப தப்பு என தீட்டு பற்றி பேச கொதித்தெழுகிறாள் ரேணுகா. ரேணுகாவும் ஞானசேகரனை வாய்க்கு வந்தபடி பேசுகிறாள். ஆனால் அவள் கேட்பதில் நியாயம் இருக்கிறது.
அந்த நேரத்தில் குணசேகரன் மேலே வருகிறான், குழந்தைக்கு நல்லதை சொல்லிக் கொடுங்க. அதவுட்டுட்டு புள்ளைங்கள கெடுக்காதீங்க. எம்மா நீ இவங்க பேச்செல்லாம் கேட்டுட்டு தப்பு தப்பா யோசிக்காத என ஐஸ்வர்யாவிடம் சொல்ல, இல்ல பெரியப்பா எனக்கு யாரும் சொல்லிக் கொடுக்கல. நா உங்ககிட்ட இருந்துதான் கத்துகிட்டேன். யாருகிட்ட எப்படி நடந்துக்க கூடாது. யாரை எப்படி நடத்தக்கூடாதுனு எல்லாத்தையும் உங்க கிட்டதான் கத்துக்கிட்டேன் என்கிறாள். தனக்கு எதிராக குழந்தைகளும் பேச ஆரம்பிக்குதே என குணசேகரன் யோசிக்கிறான்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu