Ethirneechal அடிமடியில் கைவைத்த அப்பத்தா! 40 % குணசேகரனுக்கு போகாதாம்!
அப்பத்தா குணசேகரனுக்கு 40 சதவிகித சொத்தை எழுதி கொடுத்துவிட்டதாக காட்டப்பட்டாலும் அதிலும் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறாராம். இதனால் அந்த சொத்து குணசேகரனுக்கு நேரடியாக கிடைக்க முடியாதமாதிரி சாணக்கியத்தனம் செய்து வைத்திருப்பதாக இன்றைய எபிசோடில் தெரிய வருகிறது.
எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 28th April 2023
அப்பத்தா கோமாவில் இருந்தாலும் ஏற்கனவே செய்து வைத்த சில விசயங்களால் அவர் அந்த சொத்தைக் காப்பாற்றிடுவார் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் ஜனனி. ஆனால் அது என்ன வென்று தெரியாமல் குழப்பமாக இருக்க, அதற்கான வழியும் தெரிய வருகிறது. இதில் ஜனனிக்கு ஈஸ்வரி மிகவும் உதவி செய்து வருகிறார்.
அருண் - ஆதிரை திருமணத்தை குணசேகரன் சதி செய்து நிறுத்திவிடவே குடும்பம் அதிர்ச்சியடைகிறது. இதில் கதிர் எழுதி கொடுத்த சொத்து செல்லாது என எஸ்கேஆர் குடும்பத்துக்கு விபூதி அடித்தார் குணசேகரன். இதனால் எஸ்கேஆரின் தம்பி அரசு கடும் கோபத்தில் குணசேகரன் வீட்டுக்கு வந்து அவமானப்பட்டு சென்றார். | ethirneechal serial appatha name
அதேநேரம் நிச்சயதார்த்த நாளிலேயே அப்பத்தாவிடம் மொத்த சொத்தையும் எழுதி வாங்கிவிட்டார். இதனால் தான் போட்ட திட்டம் நடக்காமல் போய்விடுமோ என அச்சத்தில் அப்பத்தா தெருவில் நடந்து செல்லும்போதே மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். இப்படி ஒரு சூழலில் அப்பத்தா என்ன சிக்கல் செய்து வைத்திருப்பார் என்பதை அறிய ஜனனி ஓடி வருகிறார்.
இதனிடையே கரிகாலனின் அப்பா மலேசிய தொழிலதிபரை வீட்டுக்கு அழைத்து சம்பந்தம் பேசி முடிக்கிறார். இது ஆதிரை மற்றும் அவளது அம்மா உள்ளிட்டவர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்குகிறது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ள நேரம் இல்லாதவளாய், ஜனனி அப்பத்தாவின் மருத்துவ செலவுக்கு என்ன செய்யலாம் என ஒவ்வொருவரிடமும் உதவி கேட்க, கடைசியில் ஈஸ்வரியிடம் இருந்து உதவி கிடைக்கும் என்ற நிலை வருகிறது. அவர் தனது தந்தையின் சொத்து டாக்குமெண்ட் அடகு வைத்து பணம் தர முடிவு செய்திருக்கிறார். இதனை குணசேகரனுக்கு தெரியாமல் மறைத்துவிட திட்டமிடுகிறார்.
குணசேகரனிடமே நேரடியாக மோதும் ஜனனி, நீங்கள் நினைத்தது போல 40 சதவிகித சொத்து உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்று கூற குணசேகரன் அதிர்ச்சியடைகிறார். என்ன திட்டம் வைத்திருக்கிறார்களோ என நினைத்து கொஞ்சம் அதிர்ச்சியோடு ஏய் எங்கம்மா போற என்று சொல்லி கத்துகிறார். | ethir neechal serial gunasekaran
ஈஸ்வரி தன்னிடம் இருந்த ஃபைல் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து ஜனனியிடம் தந்துவிட்டு வெற்றிக் குறி காட்டுகிறார். இதனைப்பெற்றுக் கொண்டு ஜனனி வெளியில் செல்கிறாள். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 27th April 2023
குணசேகரினின் அம்மா அவரை தர தரவென இழுத்துக் கொண்டு மாடிக்கு வருகிறார். எதற்காக தன்னை அழைக்கிறார் என்று தெரியாமல் குணசேகரன் குழம்பி நிற்கிறார். ஏன்மா ஏன் என்ன இப்படி கூப்பிட்டுட்டு வர.. என்னனு சொல்லு என்று குணசேகரன் கேட்க, ஏம்ப்பா இப்படி பண்ணலாமா இப்படி ஒரு இடிய தூக்கி போடலாமா நீயி.. இதுலாம் ரொம்ப அநியாயம்பா.
இது கூட பொறந்த பொறப்புய்யா உனக்கு. அத போயி இப்படி பாடா படுத்துறியே.
அதற்கு குணசேகரன் எனக்கு என்ன பண்றேன்னு தெரியுமா.. என்ன யாரும் கோளாறு சொல்ல வேண்டாம்மா. பேசாம இருங்கம்மா.
அதற்கு குணசேகரனின் அம்மா, அன்னைக்கு மண்டபத்துல வச்சி என்ன என்ன பண்ணுன.நா அந்த கெழவிகிட்ட போயி வாய்க்கு வராத வார்த்தையல்லாம் பேசி பாடா படுத்துனேன் அவங்கள. நாங்க செத்துருவோம் நீங்க நல்லா இருங்கன்னு வார்த்தையால கொன்னு அவங்கள கையெழுத்து போட வச்சேன். அம்புட்டயும் வாங்கிட்டு இந்த சம்பந்தத்த முறிக்குறதுலேயே குறியா இருக்கியேப்பா. | ethirneechal serial kathir real name
அதற்கு குணசேகரன், இப்ப ஒன்னும் முறிக்கலம்மா. ஆரம்பத்துல இருந்தே எனக்கு இதுல உடன்பாடு இல்ல.
பின்ன ஏம்ப்பா இம்புட்டு நாடகம் ஆடுன என்று அம்மா கேட்க, அதற்கு குணசேகரன்,
ஏது, நாடகம் ஆடுனனா அப்ப அது ஆடுனது நாடகம் இல்லியா
வீட்ல வச்சி தாரேன் தாரேன் தாரேன்னு சொல்லிச்சு அந்த 40 பர்சென்ட.. கல்யாண மண்டபத்துக்கு போனதும் எல்லார் முன்னாடியும் நின்னுச்சுல. அப்ப குடுக்கக்கூடாதுங்குறதுதான் எண்ணம் இல்லியா. அப்ப இதுவர சொன்னதுலாம் பொய்யி. அது ஆடுன நாடகத்துக்கும் நான் ஆடுனதுக்கும் சரியா போச்சிம்மா... பேச்ச விடும்மா..
உங்க சண்டைக்கி உன் தங்கச்சி வாழ்க்யைய ஏம்பா பணயம் வைக்குறீங்க.
நீ என்னம்மா தங்கச்சி, அக்கா, அண்ணன் தம்பின்ட்டு பேசிட்டு கெடக்க. சொந்தம் என்னம்மா சொந்தம் சொந்தத்துனால அஞ்சி பைசா புரயோஜனம் கிடையாது.
எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 29th April 2023
ஜனனியின் அடுத்த அடி எப்படி இருக்கப்போகிறது? அப்பத்தா இந்த சொத்தில் என்ன சிக்கல் செய்து வைத்திருக்கிறார் என்பதை நினைத்து குழம்பியபடி இருக்கிறார் குணசேகரன். இதனை ஏப்ரல் 29 எபிசோடில் தெரிந்து கொள்ளலாம். இதற்கான புரோமோ விரைவில் அப்டேட் செய்யப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu