Ethirneechal காணாமல் போன அருண்! கௌதம் வைத்த டுவிஸ்ட்! குணசேகரன் திட்டம் பலிக்குமா?

Ethirneechal காணாமல் போன அருண்! கௌதம் வைத்த டுவிஸ்ட்! குணசேகரன் திட்டம் பலிக்குமா?
X
ஜான்சி ராணியின் சபதம், குணசேகரனின் கடிவாளம் என்ன நடக்கப்போகிறதோ?

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 26th May 2023

எஸ்கே ஆரின் தம்பி அரசு அடியாட்களுடன் வந்து தனது மகனை அடித்து கையை உடைத்து சென்றுவிட்டான் என்பதை பொறுக்க முடியாத ஜான்சி ராணி, அந்த எஸ்கேஆர் குடும்பத்தை ஒரு வழி பண்ணாம விடமாட்டேன் என சபதம் எடுக்கிறாள். கரிகாலனுக்கு மருத்துவமனையில் கையில் பெரிய கட்டு போட்டிருக்கிறார்கள்.

குணசேகரன் முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருப்பதாகவும் நாளைல இருந்து அத தீர்க்கமா நடைமுறைப் படுத்துவேன்னும் எல்லார்க்கிட்டயும் சொல்லிரும்மா என கூறுகிறான் குணசேகரன். இந்த பக்கம் ஜனனி, கௌதமுக்கு கால் செய்து பார்க்கிறாள். போனை எடுத்த கௌதம் தான் அருணைக் கூட்டிக் கொண்டு பாதுகாப்பான இடத்தில் தங்கியிருப்பதாக கூறுகிறான்.

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 25th May 2023

அருண் இருக்கும் இடம் தெரிந்து கரிகாலனும் கதிரும் வேக வேகமாக அங்குள்ள தங்கும் விடுதிகளுக்கு சென்று தேட ஆரம்பிக்கிறார்கள். காரிலிருந்து வெளியே வந்த கதிர் அவர்கள் பின்னாடியே போகிறான். ஜனனி, நந்தினி, ஆதிரை மூவரும் பதைபதைப்புடன் கையைப் பிசைந்து கொண்டு நிற்க ஜான்சி ராணி அவர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு நையப்புடைக்கிறார். உங்கள் மேல்தான் சந்தேகம் இருக்கு. நீங்க பாத்த வேலையாதான் இருக்கும் என்று பேசுகிறாள்.

கரிகாலனின் அப்பாவும் அங்கு இல்லை முதல் சம்சாரம் கூப்பிட்டாருன்னு ஓடிட்டான் என திட்டுகிறாள் ஜான்சிராணி. அடுத்து கதிரும், கரிகாலனும் அருண் தங்கியிருந்த அறைக்கு சென்றுவிட்டார்கள். ஆனால் அவர்கள் இல்லை. சரியான நேரத்தில் எஸ்கேப் ஆகிவிட்டனர். இதனால் கடுப்பான கதிர், சக்தியைத் திட்டிவிட்டு செல்கிறான். இருந்தாலும் கதிர் விடுவதாக இல்லை ஒவ்வொரு இடமாக தேடித் தேடிச் சென்று கொண்டிருக்கிறான். கூடவே கரிகாலனும் ஓடுகிறான்.

வெளியே வந்த சக்தியை ஜான்சி ராணி மிரட்டுகிறாள் ஆனால் அவனோ ஜான்சி ராணியை அலட்சியப்படுத்துகிறான். கௌதமுக்கு கால் செய்து பார்த்து நாட் ரீச்சபிளாக இருப்பதை ஜனனியிடம் கூறிவிட்டு செல்கிறான் சக்தி. அருகில் எங்கேயாவது இருக்கிறார்களா என்று பார்க்கிறேன் என்று போகிறார்கள். அந்த நேரத்தில் அரசு, கதிர் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்கிறான். அடியாட்களுடன் சேர்ந்து கதிருடன் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாக்குவாதம் அடிதடி சண்டையாக மாறுகிறது. கரிகாலனின் கையை உடைத்து விடுகிறார்கள். இதனால் கதிர் கரிகாலனை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான்.

அரசு வந்து கையை உடைத்துவிட்டு போயிட்டார்னு சொன்னதும் இவர்களுக்கு பயம் இன்னும் அதிகமாகிறது. அருணை அரசுவும் தேடுகிறார் என்பதைத் தெரிந்து வருத்தத்தில் இருக்கிறார் ஆதிரை. அரசு கரிகாலனின் கையை மட்டும் உடைத்திருக்கக் கூடாது அவங்க ரெண்டு பேரையும் முடிச்சிருக்கணும்னு பேசுகிறார். அந்த நேரத்தில் சாருபாலா அரசுவுக்கு அழைக்கிறார். நடந்ததைக் கூறிவிட்டு அருணை எப்படியாவது வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். எப்படியும் குணசேகரன் தங்கச்சிய அருணுக்கு கட்டி வைக்க விடமாட்டேன் அண்ணி என்று கூறி அழைப்பைத் துண்டிக்கிறான்.

குணசேகரன் வீட்டு பால்கனியில் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டே இருக்கிறான். அந்த சமயம் ஞானம் கதவைத் திறந்து உள்ளே வருகிறான். ஞானத்தைப் பார்த்ததும் குணசேகரன் மேலே வா என்று கூறுகிறான். உள்ளே வந்திருக்கும் உறவினர்களை நலம் விசாரித்துக் கொண்டு மேலே செல்கிறான் ஞானம். அங்கே குணசேகரனை நேருக்கு நேர் பார்த்து பேச கொஞ்சம் தயக்கத்துடன் நிற்கும் ஞானத்தை மீண்டும் குணசேகரன் அழைத்ததால் அவன் முன் போய் நிற்கிறான்.

கல்யாண வேலைகளில் நான் மண்டையைப் பிய்ச்சிக்கிட்டு இருக்கேன். உன்கிட்ட எப்படி சொல்றதுனு தெரியலப்பா. உன் பொண்டாட்டி என்ன நடு வீட்டுல வச்சி நாக்க புடுங்கிட்டு சாகுறமாதிரி பேசிப்புட்டா. ஞானம் நம்மள பிரிக்குறாங்க. இங்கு நம்மள பெத்த அம்மா உட்பட எல்லா பொம்பளைங்களும் சேர்ந்து என்னய கீழ தள்ள பாத்துட்டுருக்காங்க. இங்கு பிரிச்சி ஆளுற சூழ்ச்சி நடந்துட்டு இருக்கு. எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா என்று பல பிட்டுகளை எடுத்துபோடுகிறான்.

ஞானம் பிடி கொடுக்காமல் பேசுகிறான். தன்னைப் பற்றி குணசேகரன் ஏற்கனவே சொன்ன பல விசயங்களைக் கூறி எனக்கும் இந்த கல்யாணத்துக்கும் என்ன இருக்கு. நான் என்ன செய்ய. எனக்கு எந்த வேலையும் பிரிச்சிக் கொடுக்கல. நா என்ன பண்றது என்று கூற தன்னுடன் கடைசி வரை இருப்பதாக கூறி சத்தியம் செய்து தரவேண்டும் என ஞானத்திடம் குணசேகரன் சத்தியம் கேட்கிறார்.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 27th May 2023

ஆதிரை திருமணத்துக்கு சம்மதித்து குணசேகரன் மூக்கை அறுக்க ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதனால் கரிகாலன் - ஆதிரை திருமணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!