குணசேகரனுக்கு அதிர்ச்சியளிக்கும் குடும்பம்! ஜனனியும் ரேணுகாவும் சரவெடி!

குணசேகரனுக்கு அதிர்ச்சியளிக்கும் குடும்பம்! ஜனனியும் ரேணுகாவும் சரவெடி!
X
பெரியப்பா உங்க காலம் வேற இந்த காலம் வேற பெரியப்பா என சுட்டிக் குழந்தை மழலை மொழியில் பேச, அதற்கும் டென்சன் ஆகிறார் குணசேகரன்.

வழக்கமான கிரிஞ்ச் சீன்கள் இல்லாமல் தற்போது ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் எதிர்நீச்சல். சன்டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலேயே மிகவும் சிறப்பான தொடராக இது பெயரெடுத்து வருகிறது. முக்கியமாக இளைஞர்கள் அதிக அளவில் பார்க்கும் தொடராக இது விளங்கி வருகிறது. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதை மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

முன்கதை

நாச்சியப்பனும், பார்வதியும் அவர்களின் பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். சில வருடங்களில் அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறக்கிறது. பார்வதியின் அண்ணன் திருவேங்கடமும் அவரது மனைவியும் என அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

நாச்சியப்பன் முதல் குழந்தையான ஜனனியை பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்க்கிறார். ஒரு கிரிஞ்ச் பேரண்ட் போல பூமர் அங்கிள் போல அவரை வெளியில் விடாமல் படி படி படி என திணித்து அவரை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். ஜனனியும் குடும்ப கஷ்டம் புரிந்து நன்கு படித்து வருகிறார். தகப்பனான நாச்சியப்பன் அனைத்து விசயத்திலும் கண்டிப்பாக இருக்கிறார். என்ன உடை உடுத்துவது யாரிடம் பழகுவது என்பது உட்பட பல கட்டுப்பாடுகள்.

குணசேகரன், அவருக்கு 3 தம்பிகள், ஒரு தங்கை. சிறு வயதிலேயே தந்தையை பறிகொடுத்த குணசேகரன் அம்மா, தம்பி, தங்கையை ஒத்த ஆளாக நின்று உழைத்து காப்பாற்றுகிறார். பெரியவரானதும் தன் சொந்த உழைப்பால் புது பணக்காரர் ஆகிறார். முன்னதாக அவருக்கு நன்கு படித்த பெண்ணைத் திருமணம் செய்ய ஆசை, அதற்காக ஒரு பெண்ணை பார்க்க அந்த பெண் இவர் படிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக இவரை வேண்டாம் என சொல்லிவிடுகிறது. அதுமட்டுமின்றி இவரின் எதிரியான குடும்பத்தில் வாக்கப்பட்டு செல்கிறது. அங்கும் 4 அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள்.

குணசேகரனின் தம்பிகள் ஒவ்வொருவருக்காக திருமணம் செய்துகொண்டு கடைசி தம்பிக்கு திருமணம் ஆகும்போதுதான் நமக்கு சீரியலே துவங்குகிறது. அதில் ஜனனி மணப்பெண்ணாக சக்தியை மணமுடிக்க வருகிறார்.

ஜனனியின் மாமா மகளுக்கோ இந்த குடும்பம் குறித்து ஆரம்பத்திலேயே சந்தேகம் இருக்கிறது. ஆனால் இந்த குடும்பத்தில் மூத்த மருமகளான ஈஸ்வரி குணசேகரன் பெரிய கம்பெனியின் சிஇஓ, இரண்டாவது மருமகள் ரேணுகா ஞானசேகரனும் ஒரு கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். மூன்றாவது மருமகள் நந்தினி கதிர்வேலனும் அப்படியே. தங்கை ஆதிரைச்செல்வி நல்ல கல்லூரியில் எம்பிஏ படிக்கிறாள். இப்படி ஒரு குடும்பம் கிடைக்க நாம் குடுத்து வைத்திருக்க வேண்டும் என நினைத்து பாழாங்கிணற்றில் ஜனனியை விழச் செய்கிறார்கள் .

அடுத்தடுத்து என்ன நடந்தது. அந்த குடும்பத்தில் ஜனனி நடத்தும் போராட்டமே சீரியலின் அடுத்தடுத்து எபிசோட்கள்.

இன்றைய எபிசோட்

பெரியப்பா உங்க காலம் வேற இந்த காலம் வேற பெரியப்பா என சுட்டிக் குழந்தை மழலை மொழியில் பேச, அதற்கும் டென்சன் ஆகிறார் குணசேகரன். உடனே ஈஸ்வரியும் மாற்றத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுங்க என அவருக்கே உரிய தன்னடக்கத்தோடு பேசுகிறார். ஆனால் அவரின் பேச்சில் ஒரு கர்வம் தெரிகிறது.

மாற்றத்த நாம ஏத்துக்கலன்னா ஒதுங்கி நிக்கணும்னு சொல்லவும் குணசேகரனுக்கு ஜிவ்வென்று வருகிறது. உடனே அங்கிருந்து சக்தியும் ஜனனியும் பொருட்களை வாங்கிக் கொண்டு வருகிறார்கள். அப்போது ஜனனி ஐஸ்வர்யா பிறந்த நாளுக்கு புது துணிகள் என்று சொல்ல, குணசேகரன் தன்னை கேட்காமல் இதெல்லாம் நடக்கிறதே என கோபத்தில் யாரைக் கேட்டு இதெல்லாம் பண்றீங்க என்று தனக்கே உரிய பாணியில் கேட்கிறார்.

அதற்கு ஜனனி யாரைக் கேட்கணும் என்று எதிர்த்து கேட்க, உடனே குணசேகரன் எங்க அம்மா? என்று அம்மாவைத் தேடுகிறார். உடனடியாக ரேணுகா தன் பங்குக்கு ஏதோ பேசுகிறார். இது குணசேகரனை மேலும் கோபமடையச் செய்கிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!