Ethirneechal ஒரு பக்கம் கதிர்! இன்னொரு பக்கம் அரசு! நடுவில் மாட்டிக் கொண்ட அருண்! என்ன நடக்குமோ?
காரில் சென்ற கதிர், கரிகாலன் கண்களிலிருந்து தப்பி விட்டாலும் அதே ஊரில்தான் அவர்கள் தங்கி இருக்கிறார்கள் என்பதால் பதைபதைப்பில் இருக்கிறாள் ஜனனி. ஒரு பக்கம் அருணின் அண்ணன் அரசுவும் வலை வீசி அருணைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 22nd May 2023
மது பாட்டில் இருக்கிறதா கொண்டு வந்தீங்களா மாமா என்று கதிரிடம் கரிகாலன் கேட்க அதற்கு இது கோவில்டா இங்கெல்லாம் எப்படி. நான் கொண்டு வரல என்றார் கதிர். அதற்கு மாமா கார்ல வச்சிருப்பீங்களே என பேசிக் கொண்டிருக்கும்போது கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி, இதுலாம் தப்பில்ல அண்ணே. பூஜை முடிஞ்சதும் ஏற்பாடு பண்ணுவோம். பரவால சாமி ஒன்னும் சொல்லாது. வீட்டுக்கு வாங்க நிறைய உங்களுக்கு புடிச்சது தரோம் என தனது புராணத்தை எடுத்து விடுகிறார்.
இந்த பக்கம் நந்தினி பாருங்க சாராயம் குடிக்குறவனும் சாராயம் காய்ச்சுரவளும் ஒன்னு சேர்ந்துட்டாங்க. உருப்படுறதுக்கா என்று தெரிவிக்கிறார். அந்த நேரத்தில் அருணுக்கு கால் செய்து பேசு சக்தி என்று ஜனனி ஆரம்பிக்கிறார். அப்போது ஆதிரை பதைபதைப்பில் இருக்கிறார். அங்கு வரும் கரிகாலன் தன்னோடு வரும்படியும் ஆதிரையுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கவேண்டும் எனவும் பேசுகிறான். அந்த நேரத்தில் அங்கு கரிகாலனின் நண்பர் ஒருவர் வருகிறார்.
Ethirneechal கலாய்த்து ஓட விடும் பெண்கள்! குணசேகரன் செய்யப்போகும் அடுத்த அதிரடி!
ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் நடத்தலாம் என ஆதிரை கையைப் பிடித்து இழுக்கிறான் . அங்கு வந்த சக்தி அதை தடுக்க, ஜனனியும் முறைக்கிறாள். நந்தினி கரிகாலனைத் திட்டுகிறாள். கதிரும் அங்கு வருகிறார். நந்தினியின் பேச்சை கேட்காமல் கரிகாலனை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்.
நல்லவேள இங்க ரேணுகா அக்காவும் ஈஸ்வரி அக்காவும் இல்ல என்று நந்தினி கூறிக்கொண்டே, அது சரி அவங்களுக்கு அங்க என்ன பிரச்னையோ என்று சொல்லுகிறாள்.
அரசு தன் அடியாட்களுடன் அருணைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது சாருபாலா அவருக்கு அழைக்கிறார். அருணை வைத்து குணசேகரன் கேம் ஆடுகிறான் என்று கோபத்தில் கூறுகிறார். அப்போது கோபப்படும் சாருபாலா, தன் அலுவலகத்துக்கு வந்த குணசேகரனிடம் கடு கடு என எரிந்து விழுகிறார். இது என்ன வென்று புரியாத குணசேகரன் வீட்டுக்கு செல்கிறார்.
அங்கு ஈஸ்வரி, ரேணுகாவை குணசேகரனின் உறவினர்கள் இவர்கள் என்ன சமையல் செய்ய சலித்துக் கொள்கிறார்கள் என குணசேகரனிடமே புகார் செய்கிறார்கள். அதற்கு ஈஸ்வரி சில விசயங்களைக் கூறுகிறார். வீட்டில் மொத்தம் 20 பேர் இருக்கிறோம். குழந்தைகளுக்கு 3, பெண்களுக்கு 4, ஆண்களுக்கு 5,6 தோசை என ஒரு நாளைக்கே 100க்கும் அதிக எண்ணிக்கையில் தோசை சுட வேண்டும். அதில் ஒருவருக்கு வெங்காயத்தோசை, ஒருவருக்கு நெய் தோசை, இன்னொருவருக்கு முட்டை தோசை, தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி என ஆளாளுக்கு ஒரு வகையில் சுட வேண்டியிருக்கிறது. இதை செய்ய 3 மணி நேரம் ஆகும். அதுவும் சூடா சாப்பிட வேண்டும். என அவர் செய்யும் வேலைகளை அடுக்குகிறார்.
எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 19th May 2023
கதிர், கரிகாலன், ஜான்சிராணி, கரிகாலன் அப்பா இவர்கள் ஒரு காரிலும், ஜனனி, நந்தினி, சக்தி, ஆதிரை ஒரு காரிலும் செல்கிறார்கள், கரிகாலன் கார் முன்னால் செல்ல பின்தொடர்ந்து சக்தியின் கார் செல்கிறது. நந்தினி வழக்கம்போல லூஸ்டாக் விடுகிறாள். சக்தி அந்த அருணு.... என ஆரம்பிக்கிறாள் நந்தினி. இதனால் ஜனனி, சக்தி இருவரும் முறைக்கின்றனர். உடனே அருணகிரிநாதர் என்று கூறி சமாளித்துவிட்டு, அடுத்து டிரைவரை வண்டியை நிறுத்திவிட்டு பஸ்ஸில் ஏறிச் செல்லுங்கள் என்று கூறுகிறாள்.
டிரைவர் முதலில் மறுத்தாலும் பின் ஒப்புக்கொண்டு காரை விட்டு இறங்கிவிடுகிறார். அடுத்து நந்தினியை ஆதிரை பாராட்டுகிறாள். நல்லவேளை சமாளிச்சிட்டீங்க, அருண் பெயரை சொல்லி மாட்டிப்போமோ என பயந்துவிட்டதாக கூறுகிறாள். பின் பாலம் தாண்டியது ரைட்டு என்கிறாள்.
அதற்கு சக்தி, அங்குதான் அருணும் கௌதமும் தங்கியிருக்காங்க என்று கூறுகிறான். அய்யய்யோ அங்க அருண் இருப்பத மத்தவங்க பாத்துடப் போறாங்க என்று பதைபதைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். உடனே நந்தியிடம் கதிருக்கு கால் செய்யும்படி ஜனனி கூறுகிறாள்.
நந்தினியும் கதிருக்கு ஃபோன் செய்கிறாள். கதிரிடம் தாங்கள் சென்று கொண்டிருக்கும் கார் உங்கள் காரை மிஸ் செய்துவிட்டது என கூறுகிறாள். அதற்கு டிரைவரைத் திட்டுகிறான் கதிர். நடந்ததைக் கூறி அந்த இடத்துக்கு பெயர் என்ன என்று கேட்க அதனை கேட்டுவிட்டு நேராக கோவிலுக்கு செல்ல திட்டமிடுகிறார்கள்.
காரில் சென்று கொண்டிருக்கும் கதிர், கரிகாலன் கண்களில் அருண் மாட்டிக் கொள்ளக்கூடாது என சக்தி, ஜனனி நந்தினி, ஆதிரை பயப்படுகின்றனர். அவர்கள் பயப்பட்டது மாதிரியே கௌதம் மற்றும் அருண் இருவரும் இவர்கள் செல்லும் வழியிலேயே நடந்து வந்துகொண்டிருக்கிறார்கள். நந்தினி அருணைப் பார்த்துவிட்டு அய்யோ இது அருண்ல, கதிர் கண்ணுல மாட்டிடக்கூடாது என்று வேண்டும் அந்த சமயத்தில் சக்தி காரை வேகமாக ஓட்டுகிறான்.
கோவிலில் நந்தினிக்கும் கரிகாலனின் அம்மா ஜான்சி ராணிக்கும் இடையே மோதல் தொடங்குகிறது. இதனால் கோபப்பட்டு கதிர் கத்துகிறான். ஜனனியும் நந்தினியை சமாதானப்படுத்தி அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறாள்.
எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 21st May 2023
ஆதிரை திருமணத்துக்கு சம்மதித்து குணசேகரன் மூக்கை அறுக்க ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதனால் கரிகாலன் - ஆதிரை திருமணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu