ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!

ஈஸ்வரிக்கு ஏதோ ஆகிவிட்டது போல. அதனால் பதறியடித்து போகிறாள் ஜனனி. மருத்துவமனையிலிந்து அவன் மகன் ஃபோன் செய்தும் தனது மனைவிக்கு இப்படி ஆனது தெரிந்தும் எந்த கவலையுமின்றி இருக்கிறான் குணசேகரன்.

HIGHLIGHTS

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
X

இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 20th March 2023

ஜனனியும் குணசேகரனும் காரில் சென்றுகொண்டிருக்கிறார்கள். தங்கள் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது ஜனனிக்கு திடீரென ஒரு அழைப்பு வருகிறது. போனை எடுத்து பேசியவளுக்கு அதிர்ச்சி. இதை குணசேகரனிடம் கூற அவன் எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஈகோவில் இருக்கிறான். ஜனனியோ காரை நிறுத்துங்கள் என்று கூறிவிட்டு காரைவிட்டு இறங்குகிறாள்.

வீட்டில் குணசேகரன் வந்து அமர்ந்ததும் அப்பத்தா அவனிடம் கேட்கிறாள். போன காரியம் நல்லபடியா முடிஞ்சிதா என்பது போல கேட்டதற்கு அதுலாம் நல்லபடியா முடிஞ்சிது என்கிறான். உடனே ஜனனியைத் தேடுகிறார்கள். ஜனனி எங்கே இருக்கிறாள் அவளைக் காணவில்லையே என்று கேட்கிறார்கள். உடனே குணசேகரன் நடந்ததைக் கூறுகிறான்.

ஈஸ்வரிக்கு ஏதோ ஆகிவிட்டது போல. அதனால் பதறியடித்து போகிறாள் ஜனனி. மருத்துவமனையிலிந்து அவன் மகன் ஃபோன் செய்தும் தனது மனைவிக்கு இப்படி ஆனது தெரிந்தும் எந்த கவலையுமின்றி இருக்கிறான் குணசேகரன்.

முந்தைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 19th March 2023

தொடர் அவமானங்களைச் சந்தித்தாலும் பரவாயில்லை என்று கூறி எஸ் கே ஆர் வீட்டுக்கு சம்பந்தம் பேச செல்கிறான் குணசேகரன். எஸ்கே ஆர் வீட்டில் குணசேகரனுக்கு எதிர்பார்த்தபடியே அவமானங்கள் நிகழ்கின்றன. ஆனால் தான் போட்ட கணக்கு சரியாக இருக்கும் என அதை பொறுத்துக் கொள்கிறான் குணசேகரன்.

எஸ்கேஆரின் தம்பி அரசு ஜனனியை வைத்து புது திட்டம் ஒன்றை தீட்டுகிறான்.

ஆதிரைக்கு அருணுடன் திருமணம் செய்து வைக்க அனைவரது முன்பு சம்மதம் தெரிவித்த குணசேகரன் தனியாக வேறொரு திட்டம் தீட்டுகிறான். அப்பத்தாவும் 40 சதவிகிதத்தை தருவதாக கூறிவிட்ட வேறொரு திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தாம்பூலத் தட்டு மாற்றவேண்டும் என அப்பத்தா கூறியதால் எஸ்கேஆர் வீட்டுக்கு தானே செல்கிறான் குணசேகரன். அவனதுடன் ஜனனியும் செல்கிறாள்.

எஸ்கேஆர் வீட்டுக்கு போயி நாள் குறிச்சிட்டு வரேன் என்கிறான் குணசேகரன். அங்கு சென்று கொண்டிருக்கும்போதே அரசு குணசேகரனை அவமானப்படுத்திகிறான். முன்னாடி குணசேகரன் செய்த விசயங்களை நக்கலாக சொல்லி காட்டுகிறான்.

வீட்டுக்கு சென்ற குணசேகரன் அங்கு எஸ் கே ஆர் உக்காந்து இருப்பதைப் பார்த்து உடனே முதலாளி என்று கூப்பிட்டு அருகே செல்கிறான். வணக்கம் முதலாளி எப்படி இருக்கீங்க என்று கேட்க அதற்கு எஸ்கேஆர் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார். பின்னர் குணசேகரன் கேரக்டரைக் குத்தி காண்பித்து பேசுகிறார்.

குணசேகரா எனக்கு உன்னோடு சம்மந்தம் வைத்துக் கொள்ள துளி அளவும் விருப்பம் இல்லை. அதனால உன் தங்கச்சி இங்க வந்தாலும் நல்ல படியா சந்தோஷமாக இருப்பாலானு தெரியாது. நா இந்த தாம்பூல தட்டை வாங்க மாட்டேன். வேற யாரும் வாங்குனா தடுக்கவும் மாட்டேன் என்று எஸ்கேஆர் கூற, அவரின் தம்பி அரசுவிடம் தாம்பூலத்தை வாங்க சொல்லி கேட்கிறான் குணசேகரன். அதற்கு அரசு தங்கள் வீட்டில் பெண்கள் யாரும் இப்போது இல்லையே. ஜனனி எங்க வீட்டு பொண்ணு மாதிரிதான அவங்களே வாங்கட்டும் என்று சொல்கிறான்

குணசேகரனும் ஜனனியிடம் தாம்பூலத்தைத் தந்துவிட்டு கிளம்புகிறான்.

Updated On: 20 March 2023 12:11 PM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  சிறப்பு காவலர் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் சேர்ப்பு
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நிகழ்ச்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து...
 4. திருச்செந்தூர்
  மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய கனிமொழி
 5. அரசியல்
  அமித்ஷா போட்டியிடும் குஜராத் காந்தி நகர் தொகுதியின் அரசியல் பின்னணி
 6. உலகம்
  ரஷ்ய நாட்டு இளைஞர்களுக்கு அதிபர் விளாடிமிர் புதினின் புதிய வேண்டுகோள்
 7. அரசியல்
  சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்
 8. இந்தியா
  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாக போகிறது வந்தே பாரத் ரயில்கள்
 9. தமிழ்நாடு
  ஏ.சி. பயன்படுத்துவோர் மின் கட்டணம் எகிறாமல் பார்த்துக்கொள்வது எப்படி?
 10. ஆன்மீகம்
  பங்குனி உத்திரம் நாளில் முருகனை வழிபடுங்க!