கடைசி நேரத்தில் குழப்பம்! குணசேகரன் கழுத்தில் சுருக்கு! அருண் எங்கே?
Ethirneechal Today Episode
எதிர் நீச்சல் இன்றைய எபிசோட்
Ethirneechal Today Episode-ஜான்சிராணியின் கிடுக்குப்பிடியால் அவமானம் தாங்காமல் நிற்கிறான் குணசேகரன். கழுத்தில் சேலை இருப்பதால் அவமானத்தில் தொங்க முடிவெடுத்துவிட்டான் என பேசுகிறார்கள். உன்னய அண்ணன்னு கூப்புடுறதா இல்லையானு இனி நான்தான் முடிவு பண்ணனும் என்பது போல வீராவசனம் பேசுகிறாள் ஜான்சி ராணி.
கதிரையும் கரிகாலனையும் அலேக்காக கழற்றிவிட்டுவிட்டு சக்தி அனுப்பிய காரில் கோவிலுக்கு வந்த சேர்ந்தனர் ஜனனி, ஆதிரை, நந்தினி, ரேணுகா நால்வரும். அங்கு சக்தியும் மண்டபத்தில் அமர்ந்திருக்க, அருணும் கௌதமும் இன்னும் வந்து சேரவில்லை என்பது பெரிய டவுட்டாக இருக்கிறது. அனைவரும் பதைபதைத்துக் கொண்டே இருக்கின்றனர்.
எதிர்நீச்சல் நேற்று எபிசோட்
எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில், குணசேகரன் அவசரப்படுகிறான். பெரிய மனுசங்க எல்லாரும் கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. கோவிலுக்கு போனவங்க இன்னும் வரலயே என குதிக்கிறான். ஞானசேகரனிடம் கதிருக்கு போன் போடச் சொல்கிறான்.
கதிருக்கு போன் போடும் ஞானசேகரன் என்னடா எங்கடா இருக்கீங்க என்னாச்சு ஏன் இன்னும் வரல என்று கேட்க, அதற்கு அவங்க இன்னும் வரலயா என்று குண்டைத் தூக்கிப் போடுகிறான். அதற்கு நா முக்கியமான வேலைக்குவந்துட்டேன் என்று சொன்னதும் குணசேகரன் கோபப்படுகிறான். இதனையடுத்து குணசேகரனிடம் சமாளிக்க பாக்கிறான் கதிர். அவங்களுக்கு ஃபோன் போட்டு பேசு, கால் மணி நேரத்துல மண்டபத்துக்கு வந்து சேரணும் என கோபத்தில் போனை வைக்கிறான்.
இதனையடுத்து கதிர் என்ன செய்வது என்று புரியாமல் விழிக்கிறான். குணசேகரனின் கோபம் அம்மா மீது திரும்புகிறது. ஈஸ்வரியும் நீயும் சேர்ந்து கண்ணுலயே பேசுறீங்களோ என வாருகிறான். மணி 9 ஆச்சு, 11க்கு கல்யாணம் இன்னும் வந்து சேரல என கோபப்பட, அதற்கு பதிலளிக்க வாய்த்திறக்கிறாள் ஈஸ்வரி. ஆனால் அவள் மீதும் எரிந்து விழும் குணசேகரன். போன் பண்ணு அப்பத்தான் வருவாங்க என குதிக்கிறான்.
உன்ன நம்பிதானம்மா அனுப்பி விட்டேன் என அம்மாவை கோபத்துடனேயே கேள்வி கேட்கிறான். போன் போட முடியாது என்று சில காரணங்களைச் சொன்னதும் கரிகாலனுக்கு போன் போடச் சொல்கிறான் குணசேகரன். ஆனால் கரிகாலன் மொபைல் சுவிட்ச்டு ஆஃபாக இருக்கிறது. அடுத்து ஜனனிக்கு போன் போட சொல்கிறான் குணசேகரன்.
அங்கு வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள் நந்தினி. குணசேகரனின் வேகத்தில் ரிங் போகுதுங்க என்று பதற்றத்துடன் சொல்கிறாள் ஈஸ்வரி. அதேநேரம் ஜனனி இந்த கால் ஞானசேகரன் மாமாகிட்ட இருந்து வருது என்று கூறுகிறாள். அதை எடுக்க வேண்டாம் என்று சொல்லியும் ஜனனி அட்டெண்ட் செய்கிறாள். ஆனால் நிலமையை சமாளிக்க ரிங் போச்சு ஆனா கட் ஆயிடிச்சி என்றுகூறிவிட்டு ஞானத்திடம் கொடுத்து விடுகிறாள்.
ஈஸ்வரிக்கு ஏதோ பிரச்னை என்பதை உணர்ந்த ஜனனி, வெகு விரைவில் கோவிலுக்கு சென்று திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்கிறாள். மண்டபத்தில் குணசேகரன் சலங்கை கட்டி ஆடிக் கொண்டிருக்கிறான். நானும் கோவிலுக்கு போரேன்னு சொன்னேன். எங்க மாமன்தா கெடுத்து உட்டாரு. யாரும் வரல.விஐபி யாரு வந்தா ஒரு நாதியும் இல்ல என கோபத்தில் பேசிக்கொண்டே இருக்கிறான். மீண்டும் அவனது கோபம் அம்மா மீது விழுகிறது. ஈஸ்வரியையும் மிகுந்த கோபத்துடன் திட்டுகிறான்.
உடனே அம்மா புரை ஏறுவது போல நடிக்கிறார். தண்ணீர் கொண்டு வரச் சொல்லி ஈஸ்வரிக்கு சைகை காட்ட, அவளும் தண்ணீர் கொண்டு வரச் செல்கிறாள். துருவி துருவி குணசேகரன் தாய் விசாலாட்சியிடம் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறான். நானே பெரிய பிராடு பய, மதுரைல எல்லார் கண்ணுலயும் விரல விட்டு ஆட்டிருக்கேன். நீ எனக்கே பெரிய பிராடுனு காமிக்கிறியா என்று சொல்கிறான். குணசேகரனின் எல்லா பேச்சுக்கும் நான் என்னப்பா செய்தேன், எனக்கு என்ன தெரியும் என பதில் கூறி வருகிறார் அம்மா.
கௌதம், அருணை கொடைக்கானலிலிருந்து அழைத்துக் கொண்டு வத்தலகுண்டு நோக்கி வந்துகொண்டிருக்கிறான். அப்போது அவர்களுக்கு போலீஸால் ஆபத்து நேருமா என்று சந்தேகம் இருக்கிறது. இருந்தாலும் ஒரு தைரியத்தில் அருணை அழைத்து வருகிறான் கௌதம்.
லோக்கல் போலீஸ் வந்தா பிரச்னை இல்லை வேற மாதிரி யாரும் வந்துடக்கூடாது என்று கூறிக்கொண்டே வருகிறான் கௌதம். அந்த நேரத்தில் கரிகாலன் ஒரு கடையில் சென்று மோர், தண்ணீர் குடித்து, போனை சார்ஜில் போடுகிறான். அந்த நேரத்தில் கதிர் அவனுக்கு கால் செய்ய இடத்தைக் கூறி வரச் சொல்கிறான்.
கதிர் அந்த இடத்துக்கு வந்ததும் கோபத்தில் கொக்கறிக்கிறான். கரிகாலனைத் தூக்கி வண்டியில் போட்டு செல்கிறான்.
ஜனனியுடன் ஆதிரை, நந்தினி, ரேணுகா என நால்வரும் காரில் கல்யாணம் நடைபெற இருக்கும் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
எதிர்நீச்சல் நாளைய எபிசோட்
ஜனனியின் திட்டத்தால் அருணையும் ஆதிரையையும் கோவிலில் வைத்து சேர்த்து வைக்க திட்டமிடுகின்றது குடும்பம். குணசேகரனின் அம்மா விசாலாட்சியின் சாதுர்யமான பேச்சால் அனைவரும் மண்டபத்தை விட்டு கோவிலுக்கு போகிறார்கள். ஆனால் அருணைக் காணவில்லை. கல்யாணம் நல்லபடியா நடக்குமா?
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu