Ethirneechal எதிர்நீச்சலில் தேவயானி அறிமுகமாகும் எபிசோட்! பட்டாசா இருக்கப்போகுது!

Ethirneechal எதிர்நீச்சலில் தேவயானி அறிமுகமாகும் எபிசோட்! பட்டாசா இருக்கப்போகுது!
X
எதிர்நீச்சல் இன்றைய நாள் எபிசோடில் என்ன நடக்கிறது என்பதைக் காண்போம்

ஜனனி, சக்தியை ஏமாற்றிவிட்டு குணசேகரன் தன் அப்பத்தாவை வேறொரு இடத்தில் வைத்து வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அங்கு மருத்துவராக ஒருவர் அப்பத்தாவுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் யார் என்பதுதான் ஹைலைட்டே!

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 1st May 2023

இல்ல சக்தி அப்பத்தாவ இந்த ஆஸ்பிட்டலுக்கு கொண்டு வரல. நம்மள சுத்தல்ல விடுறதுக்காகத்தான் இப்படி பண்ணிருக்காரு குணசேகரன் என்று ஜனனி கூறுகிறாள். இதன்படி குணசேகரனும் அவரது தம்பி கதிரும் அப்பத்தாவை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துகொண்டு வெளியில் கொண்டு சென்றுவிட்டனர். ஆனால் எங்கே கொண்டு செல்கிறோம் என உண்மையைச் சொல்லாமல், வேறொரு இடத்தைச் சொல்லி ஏமாற்றியிருக்கிறார்கள். இவர்களை அலைய விட்டிருக்கிறார்கள்.

அப்பத்தாவின் உயிர் அவங்க உடம்புல இல்லம்மா. உன் கையிலதான் இருக்குது என குணசேகரன் யாரோ ஒருவரைப் பார்த்து சொல்கிறார். அது அநேகமாக டாக்டராகத்தான் இருக்கும். அந்த டாக்டர் கதாபாத்திரத்தில் நடிகை தேவயானிதான் நடித்திருக்கிறார் என்பது ஏற்கனவே நாம் அறிந்த ஒரு செய்திதான்.

இந்நிலையில் இன்று வெளியான புரோமோவில் இப்படித்தான் காட்டுகிறார்கள். விரைவில் இதுகுறித்த முழு வீடியோவுடன் அப்டேட் செய்யப்படும்.

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 28th April 2023

அப்பத்தா கோமாவில் இருந்தாலும் ஏற்கனவே செய்து வைத்த சில விசயங்களால் அவர் அந்த சொத்தைக் காப்பாற்றிடுவார் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் ஜனனி. ஆனால் அது என்ன வென்று தெரியாமல் குழப்பமாக இருக்க, அதற்கான வழியும் தெரிய வருகிறது. இதில் ஜனனிக்கு ஈஸ்வரி மிகவும் உதவி செய்து வருகிறார்.

அருண் - ஆதிரை திருமணத்தை குணசேகரன் சதி செய்து நிறுத்திவிடவே குடும்பம் அதிர்ச்சியடைகிறது. இதில் கதிர் எழுதி கொடுத்த சொத்து செல்லாது என எஸ்கேஆர் குடும்பத்துக்கு விபூதி அடித்தார் குணசேகரன். இதனால் எஸ்கேஆரின் தம்பி அரசு கடும் கோபத்தில் குணசேகரன் வீட்டுக்கு வந்து அவமானப்பட்டு சென்றார். | ethirneechal serial appatha name

அதேநேரம் நிச்சயதார்த்த நாளிலேயே அப்பத்தாவிடம் மொத்த சொத்தையும் எழுதி வாங்கிவிட்டார். இதனால் தான் போட்ட திட்டம் நடக்காமல் போய்விடுமோ என அச்சத்தில் அப்பத்தா தெருவில் நடந்து செல்லும்போதே மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். இப்படி ஒரு சூழலில் அப்பத்தா என்ன சிக்கல் செய்து வைத்திருப்பார் என்பதை அறிய ஜனனி ஓடி வருகிறார்.

இதனிடையே கரிகாலனின் அப்பா மலேசிய தொழிலதிபரை வீட்டுக்கு அழைத்து சம்பந்தம் பேசி முடிக்கிறார். இது ஆதிரை மற்றும் அவளது அம்மா உள்ளிட்டவர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்குகிறது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ள நேரம் இல்லாதவளாய், ஜனனி அப்பத்தாவின் மருத்துவ செலவுக்கு என்ன செய்யலாம் என ஒவ்வொருவரிடமும் உதவி கேட்க, கடைசியில் ஈஸ்வரியிடம் இருந்து உதவி கிடைக்கும் என்ற நிலை வருகிறது. அவர் தனது தந்தையின் சொத்து டாக்குமெண்ட் அடகு வைத்து பணம் தர முடிவு செய்திருக்கிறார். இதனை குணசேகரனுக்கு தெரியாமல் மறைத்துவிட திட்டமிடுகிறார்.

குணசேகரனிடமே நேரடியாக மோதும் ஜனனி, நீங்கள் நினைத்தது போல 40 சதவிகித சொத்து உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்று கூற குணசேகரன் அதிர்ச்சியடைகிறார். என்ன திட்டம் வைத்திருக்கிறார்களோ என நினைத்து கொஞ்சம் அதிர்ச்சியோடு ஏய் எங்கம்மா போற என்று சொல்லி கத்துகிறார். | ethir neechal serial gunasekaran

ஈஸ்வரி தன்னிடம் இருந்த ஃபைல் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து ஜனனியிடம் தந்துவிட்டு வெற்றிக் குறி காட்டுகிறார். இதனைப்பெற்றுக் கொண்டு ஜனனி வெளியில் செல்கிறாள். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

குணசேகரன் அப்பத்தா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வருகிறார். அப்போது அங்கு சக்தி மற்றும் ஜனனி ஆகியோர் இருக்கிறார்கள். அவர்களிடம் பேச்சு கொடுக்காமல் அப்பத்தாவைக் காண செல்கிறார் குணசேகரன். ஆனால் ஜனனி அதனை எதிர்க்கிறார்.

நீங்க அங்கெல்லாம் போக கூடாது என்று தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கிறார். ஆனால் இதனை எதிர்பார்த்திருந்த குணசேகரன் தனக்கே உரிய பாணியில் ஜனனியை அதட்டுகிறார். ஏன் போகக் கூடாது. நான் ஏன் போகக்கூடாது. ஏப்பா சக்தி, இவள கூட்டிட்டு போயிடு என்று கத்துகிறார்.

ஈஸ்வரிக்கு திடீரென்று கோபம் வந்து அவளும் தனது கணவர் குணசேகரனைப் பார்த்து கத்துகிறார். என்ன உங்களுக்கு எதிரா யாருமே வர முடியாதுன்னு ஒரு நம்பிக்கைல வாழ ஆரம்பிச்சிட்டீங்கள்ல என்கிறார் ஈஸ்வரி.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 2nd May 2023

ஜனனியின் அடுத்த அடி எப்படி இருக்கப்போகிறது? அப்பத்தா இந்த சொத்தில் என்ன சிக்கல் செய்து வைத்திருக்கிறார் என்பதை நினைத்து குழம்பியபடி இருக்கிறார் குணசேகரன். இதனை மே 2 எபிசோடில் தெரிந்து கொள்ளலாம். இதற்கான புரோமோ விரைவில் அப்டேட் செய்யப்படும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்