Ethirneechal அருணிடம் விசாரிக்கும் அண்ணன்...! மரணப்படுக்கையில் ஆதிரை...! என்ன நடக்கப்போகிறது?

Ethirneechal  அருணிடம் விசாரிக்கும் அண்ணன்...! மரணப்படுக்கையில் ஆதிரை...! என்ன நடக்கப்போகிறது?
X
என்ன நடந்தது என அருணிடம் விசாரிக்கும் அண்ணன்...! காதலுக்கு அண்ணன் சம்மதிக்காததால் மாத்திரை சாப்பிட்டு மரணப்படுக்கையில் ஆதிரை...! அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது?

கௌரவத்துக்காக சொந்த தங்கச்சி செத்தாலும் பரவாயில்லை என்கிற அளவுக்கு போயிவிட்டார் குணசேகரன். கதிரையும் மருத்துவமனைக்கு போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். கர்வம் தலைக்கேறிய நிலையில் அவர் கோபத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 1st March 2023

அறைக்கு சென்று பார்த்த ஜனனி, அங்கு ஆதிரை சுயநினைவின்றி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். அங்கு அவள் மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடக்கிறாள். செய்வதறியாது திகைத்து பின் ஒவ்வொருவராக அறைக்கு வருகின்றனர். உடனே அண்ணன் சக்தி அவளைத் தூக்கி கொண்டு ஓடுகிறான்.

அங்கே இவள் மாத்திரை சாப்பிட்ட விசயத்தை குணசேகரன் கேட்டும் கண்டுகொள்ளாமல் இருக்கிறான். என்ன மனுசனோ தெரியவில்லை என மற்றவர்கள் இவரைக் கண்டுகொள்ளாமல் மருத்துவமனை செல்லும் அவசரத்தில் இருக்கிறார்கள்.

ஜனனி, சக்தி இருவரும் பதற்றத்துடன் மருத்துவமனையில் ஆதிரையை அனுமதிக்கிறார்கள்.

அருணின் அண்ணன் அவனை பார்க்கிறான். காருக்குள் இருந்தவனை பார்த்து சட்டை கசங்கியிருக்கு, முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு என்ன ஆச்சு என்று கேட்க, அருணும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க புரோமோ துவங்குகிறது.

நந்தினி, ரேணுகா இருவரும் ஆதிரையை மடியில் போட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவசரத்தில் பயத்தில் அழுது கொண்டே செல்கிறார்கள். இங்கே குணசேகரன் ஒரு பொம்பள புள்ளையால எத்தன பிரச்னைடா என கோபத்தில் கத்துகிறான். நீ அங்க போன அப்பறம் இருக்கு கதிரு என கதிரையும் மிரட்டுகிறான். மறந்துருவேன் அவ்ளோதான் என வீராப்பாய் பேசுகிறான்.

ஜனனி, நந்தினி, ரேணுகா, சக்தி ஆகியோர் ஆதிரையை மருத்துவமனை வார்டுக்குள் கொண்ட செல்ல உதவுகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என திக் திக் மொமண்டுகளைக் காண இன்றிரவு சன்டிவியில் காணுங்கள் எதிர் நீச்சல்

முந்தைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 28th February 2023

கடுமையான கோபத்தில் அருணையும், ஆதிரையையும் அவமானப்படுத்திவிட்டனர். ஆதிரையை அடித்து வீட்டு அறையில் பூட்டி வைத்துவிட அவளோ அண்ணனிடம் நான் செத்துவிடுவதாக கூறுகிறார். இது நாடகம் என்றும் பேசுகிறார்கள்.

ஆதிரை குணசேகரனிடம் தான் அருணைத் தவிர யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டார். அப்படி அருணை திருமணம் செய்யமுடியாமல் ஆனால் தான் உயிரோடு இருக்கமாட்டேன் என்று கூற, கதிர் அவளை அடித்து இழுத்துச் சென்று அறையில் அடைத்து வைக்கிறான்.

ஆதிரை ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் தூக்கமாத்திரைகளை ஒரே நேரத்தில் தின்று தற்கொலைக்கு முயல்கிறாள். இதனால் வீடு பரபரக்கிறது. சக்தி அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுவதாக இன்றைய எபிசோட் புரோமோ மூலம் தெரியவருகிறது.

முன்னதாக, ஆதிரை ஜூஸ் குடிக்கவில்லை என்று அந்த ஜூஸைக் கொண்டு குணசேகரனிடம் நீட்டி நீங்கள் குடிக்கிறீர்களா என்று கேட்கிறாள் நந்தினி.

இதனை பார்த்த குணசேகரன் என்ன கிண்டலா என்று கோபப்படுகிறார். இவ கூட எப்படிடா குடும்பம் நடத்துற என்று கதிரிடம் கேட்கிறார். நீங்கதானே கட்டி வச்சீங்க என்று கூறிய கதிரிடம், வந்த ஒன்னு கூட சரியா அமையலயேடா என்று ஃபீல் பண்ணுகிறார்.

ஆதிரையைத் தேடி வரும் ஜனனிக்கு ஷாக். அவள் நிலையின்றி படுத்து கிடக்கிறாள். சுயநினைவு இல்லை என்பதால் கவலை கொள்கிறாள் ஜனனி. ஆதிரை மாத்திரை சாப்பிட்டாள் என நந்தினி கூற, என்ன சும்மா டிராமா பண்ணிட்டு திரியுறாளா என்று குணசேகரன் கேட்கிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!