Ethirneechal அருணை கண்டுபிடிக்கச் செல்லும் கதிர்! அதிர்ச்சியில் சக்தி, ஜனனி! என்ன நடக்கப்போது?
கௌதம் பொறுப்பில் அருணை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய சக்தி, வீட்டில் நடந்த பிரச்னைகளைப் பற்றி கேட்கிறான். ஆனால் அதை பெரிது படுத்தவேண்டாம் என்று ஞானசேகரன் விட்டுவிடச் சொல்கிறார். இதனால் அமைதியான சக்தி, ஜனனி ஆதிரையுடன் கரிகாலனின் குடும்ப கோவிலுக்கு செல்கிறான். காரில் ஜனனி, சக்தி, நந்தினி சென்று கொண்டிருக்கையில் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.
எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 19th May 2023
ஆதிரை - அருண் திருமணத்தை குணசேகரனை மீறி நடத்த திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஜனனி. அவருக்கு உதவியாக சக்தி, நந்தினி, ரேணுகா, மாமியார் விசாலாட்சி, ஆதிரை, ஜனனியின் நண்பர் கௌதம் உள்ளிட்டோர் நடந்துகொள்கின்றனர்.
கௌதம் உதவியுடன் அருண் கொடைக்கானல் சாலையில் ஒரு கிராமத்தில் தங்கியிருக்கிறார். அவரிடம் அருணை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுகிறான் சக்தி.
அங்கு நடந்த பிரச்னை குறித்து கேட்டு கதிருடன் சண்டைக்கு போக நினைக்கிறான். ஆனால் ஞானசேகரன் அவனைத் தடுத்து விடுகிறார். போக வேண்டாம் இந்த பிரச்னையை நான் பார்த்துக் கொள்கிறேன். தேவையில்லாமல் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படும் என்று கூறுகிறான் ஞானசேகரன்.
முன்னதாக ஞானசேகரனிடம் நந்தினியும் அவளது குழந்தையும் மன்னிப்பு கேட்டார்கள். நந்தினி மன்னிப்பு கேட்டு அழுததைப் பார்த்து ஞானசேகரனின் கோபம் அடங்கிப் போனது. ஆனால் கதிர் மீண்டும் வந்து நந்தினியை அடித்து சண்டைக்கு வந்தான். சண்டையை மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறி அவனை உள்ளே அனுப்பிவிட்டனர்.
குணசேகரன் தன் தம்பி கதிருக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்க, அங்கே ஒரு குழப்பம் வருகிறது. நந்தினியும், கதிரும் சண்டையிட அடுத்து ஆளாளுக்கு பேசுகின்றனர். அப்போது அங்கு கரிகாலனும், அவனது அம்மா ஜான்சி ராணியும் வருகிறார்கள். தாங்கள் குடும்ப கோவிலுக்கு செல்லவேண்டும் என்பதை தெரிவித்து ஆதிரையை அழைத்து செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். சக்தியும் ஜனனியும் தன்னுடன் வந்தால்தான் நான் போவேன் என்று ஆதிரைக் கூறுகிறாள். அதே நேரம் குணசேகரன் அவங்கள்லாம் எதுக்குமா.. நீ போயிட்டு வா என்று கோபத்தில் கூற, ஆதிரைக்கு சப்போர்ட்டாக விசாலாட்சியும் போயிட்டு வரட்டுமேப்பா. ஒத்தாசைக்கு இருக்கும் என்று நந்தினி, ஜனனி, சக்தி மூவரும் செல்கின்றனர்.
கதிர் அருண் இங்குதான் எங்கேயோ தங்கியிருப்பதை அறிந்து அவனைத் தேடி செல்கிறான். அது சக்திக்கு தெரிந்ததும் அங்குதான் அருணும் கௌதமும் தங்கியிருக்காங்க என்று கூறுகிறான். உடனே நந்தியிடம் கதிருக்கு கால் செய்யும்படி ஜனனி கூறுகிறாள்.
நந்தினியும் கதிருக்கு ஃபோன் செய்கிறாள்
எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 18th May 2023
ஆதிரை - அருண் திருமணத்தை குணசேகரனை மீறி நடத்த திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஜனனி. அவருக்கு உதவியாக சக்தி, நந்தினி, ரேணுகா, மாமியார் விசாலாட்சி, ஆதிரை, ஜனனியின் நண்பர் கௌதம் உள்ளிட்டோர் நடந்துகொள்கின்றனர்.
கௌதம் உதவியுடன் அருண் கொடைக்கானல் சாலையில் ஒரு கிராமத்தில் தங்கியிருக்கிறார். அவரிடம் அருணை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுகிறான் சக்தி.
அங்கு நடந்த பிரச்னை குறித்து கேட்டு கதிருடன் சண்டைக்கு போக நினைக்கிறான். ஆனால் ஞானசேகரன் அவனைத் தடுத்து விடுகிறார். போக வேண்டாம் இந்த பிரச்னையை நான் பார்த்துக் கொள்கிறேன். தேவையில்லாமல் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படும் என்று கூறுகிறான் ஞானசேகரன்.
முன்னதாக ஞானசேகரனிடம் நந்தினியும் அவளது குழந்தையும் மன்னிப்பு கேட்டார்கள். நந்தினி மன்னிப்பு கேட்டு அழுததைப் பார்த்து ஞானசேகரனின் கோபம் அடங்கிப் போனது. ஆனால் கதிர் மீண்டும் வந்து நந்தினியை அடித்து சண்டைக்கு வந்தான். சண்டையை மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறி அவனை உள்ளே அனுப்பிவிட்டனர்.
கதிர் - நந்தினியின் மகள் ஞானசேகரனிடம் பெரியப்பா நீங்க ரொம்ப நல்லவரு அப்பா தான் பேட் எனக்கு தெரியும். அப்பாக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று கூறியதும் ஞானசேகரன் குழந்தையைக் கட்டி அணைத்துக் கொள்கிறான். அவள் இப்படி பேசக்கூடாது நான் பாத்துக்குறேன். நீங்க போய் சாப்பிடுங்க என்று அன்பாக கூறி அனுப்பி வைக்கிறான்.
விசாலாட்சியும் மருமகள் நந்தினியிடம் குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு கொடுக்க சொல்ல, இந்த வீட்ட எல்லா வேலையும் அப்படியே நடக்கும் எதுவும் நிக்காது அத்தை என்று கடுப்பில் பேசிவிட்டு செல்கிறாள். இதனால் மாமியார் விசாலாட்சி என்ன செய்வது தன்னையே எல்லாரும் குற்றம் சொல்கிறார்கள் நான் என்ன செய்வேன் என்று வருத்தப்படும்போது சம்மந்தியான ஈஸ்வரியின் அப்பா அவருக்கு சமாதானம் கூறுகிறார்.
குணசேகரன் வீட்டுக்கு வருகிறார். அங்கு நடந்த விசயங்களை நந்தினயும், ரேணுகாவும் சொல்ல, அதை கண்டுகொள்ளாமல் தன் தம்பி கதிருக்கே சப்போர்ட் செய்கிறான். அந்த நேரத்தில் அங்கு கரிகாலன், அவரின் அம்மா, அப்பா வருகின்றனர், குடும்ப கோவிலுக்கு செல்லவேண்டும் என்று கேட்கின்றனர். அதற்கு ஆதிரையையும் கூட்டிச் செல்லவேண்டும் என்று கேட்கின்றனர்.ஆனால் ஆதிரை அவர்களுடன் செல்ல வேண்டுமா என அதிர்ச்சியடைகிறாள்.
எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 20th May 2023
ஆதிரை திருமணத்துக்கு சம்மதித்து குணசேகரன் மூக்கை அறுக்க ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதனால் கரிகாலன் - ஆதிரை திருமணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu