ஜனனியிடம் உதவி கேட்ட குணசேகரன்.. அப்பத்தா ராக்ஸ்! அடுத்த வாரமும் டிஆர்பி எகிறும்!
சன்டிவியில் பல்வேறு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் பல எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர். குணசேகரன் தனது தங்கை ஆதிரையை கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற நிலையில், அப்பத்தா சொத்து தந்தால் ஆதிரைக்கு அவள் விரும்பிய பையனையே திருமணம் செய்து வைக்கிறேன் என்று கேட்கிறான் குணசேகரன்.
40 சதவிகித பங்கை தனக்கு எழுதி கேட்கிறான் குணசேகரன். அதே நேரத்தில் அந்த பக்கம் ஜான்சிராணியை அழைத்து அவளிடம் சத்தியம் செய்து கொடுக்கிறான். என் தங்கை ஆதிரைக்கு கரிகாலன்தான் மாப்பிள்ளை என்று சத்தியம் செய்து கொடுத்து அவளை அனுப்பி வைக்கிறான்.
எஸ்கேஆர் தங்கள் குடும்பத்தின் எதிரி என்பதை அறிந்து கொந்தளித்துக் கொண்டிருக்கும் கதிர் மற்றும் ஞானம் இருவரிடமும் நாம் தங்கையை எஸ்கேஆர் தம்பிக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு அவன் தம்பி மூலமே அனைத்து சொத்துக்களையும் ஆட்டையப் போட வேண்டும் என்றும் திட்டத்தைக் கூறுகிறான். இதனால் அவர்களும் திருமணத்துக்கு சம்மதிக்கிறார்கள்.
இப்படி ஜான்சிராணியிடம் ஒரு பேச்சும் தம்பிகள், அப்பத்தாவிடம் ஒரு பேச்சும் என மாறி மாறி பேசிக் கொண்டிருக்கும் குணசேகரன் அடுத்து என்ன செய்வான் என்பது அறியாமல் வீடே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்பத்தா ஏதோ ஒரு திட்டத்தில் இருக்கிறார்
எஸ்கேஆர் வீட்டுக்கு போயி முறைப்படி பேசணும் என்று கேட்கிறாள் அப்பத்தா. அவள் கேட்பதில் ஏதோ சூட்சமம் இருப்பது தெரிந்தாலும் 40 சதவிகிதம் ஷேர் நமக்கு வரப்போகிறது என அமைதி காக்கிறான் குணசேகரன். ஆனால் கதிருக்கு கோபம் மூக்குக்கு மேல் வருகிறது. உடனே அப்பத்தாவிடம் நாம யாருகிட்டயும் எறங்கிப் போகணும்னு அவசியம் இல்லை என கொந்தளிக்கிறான். இது உடனடியாக பலருக்கும் ஷாக்கைத் தருகிறது. என்ன குணசேகரன் சரி என்று சொல்லிவிட்ட பிறகும் கதிர் இப்படி கோபப்படுகிறானே என நினைக்கும்வேளையில் குணசேகரன் தலையிடுகிறான்.
நாம் யாருக்காக இறங்கி போறோம். நம்ம கூட பொறந்தவளுக்காகத் தானே என்று குணசேகரன் கூறி பெருமிதம் படுவது போல நடிக்கிறான். இதனை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் அப்பத்தா, நீ கூடப் பொறந்தவளுக்காக விட்டுக் கொடுக்கலப்பா. 40 பர்சென்டேஜ் ஷேர் அதுக்காக விட்டுக் கொடுக்குற என்று கூறுகிறாள். அப்பத்தாவும் அங்கிருந்தவர்களும் சில நிமிடங்கள் அமைதி காக்க, குணசேகரன் தனக்கே உரிய கர்வ பாவனையைக் காட்டுகிறான்.
காரில் புறப்பட்டு செல்கிறார்கள். குணசேகரன் ஜனனியிடம் ஏதோ கேட்கிறான். எப்பவும் வெவரமா பேசிட்டே இருப்பியே இத யோசிக்கமாட்டியா என்று கேட்கிறான் குணசேகரன். அதற்கு பேசணும்னு முடிவு எடுத்தவரு நீங்க என்று கூறுகிறாள் ஜனனி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu