Ethirneechal ஜனனி அறையில் கதிர்! அடுத்த நடந்தது என்ன?

Ethirneechal ஜனனி அறையில் கதிர்! அடுத்த நடந்தது என்ன?
X
அருணுடன் தங்கியிருக்கும் சக்தி. ஜனனி அறைக்குள் புகுந்த கதிர். பரபரப்பான காட்சிகளுடன் இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 15th May 2023

தன்னுடைய காதலுக்காக வெளிநாடு போகாமல் இந்தியாவிலேயே மறைந்து இருக்கும் அருண், சக்தி உதவியுடன் கொடைக்கானல் சாலையில் ஹோட்டல்களில் மாறி மாறி தங்கிக் கொண்டிருக்கிறான். இதனிடையே சக்தியையும் அருணையும் சேர்ந்து பார்த்ததாக செல்வராஜ் என்பவன் குணசேகரனிடம் பத்தி வைக்க, குணசேகரன் கோபப்பட்டு அருணின் அண்ணன் அரசுக்கு கால் செய்து கேட்கிறான். அரசு கோபத்தில் கத்தி குணசேகரனை திட்டிவிட்டாலும், அருண் எங்கே இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள நினைக்கிறான்.

அரசு அருணுக்கு கால் செய்கிறான். அருண் அந்த அழைப்பை எடுக்கும்போது அருகில் சக்தியும் இருக்கிறான். எங்கே இருக்க என்று அரசு கேட்க, பக்கத்தில் ஒரு நண்பரைச் சந்திக்க வந்ததாகவும் அவர் பெயர் என்ன கேட்கும்போது சக்தி என்றும் வாய்த் தவறி கூறிவிட்டான் அருண். இதனால் அரசுக்கு சந்தேகம் எழ ஆரம்பிக்கிறது.

மறுபக்கம் ஜனனி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து ஜனனி அறைக்குள் வருகிறான் கதிர். அவள் வேறு எங்கோ சென்றிருந்த சமயம் பார்த்து அவள் மொபைலை எடுத்து பார்க்க திட்டமிடுகிறான். ஆனால் சரியான நேரத்தில் ஜனனி அறைக்குள் வந்துவிடவே, அவள் அவனைப் பார்த்துவிடுகிறாள். என் மொபைலை எடுத்து வேவு பார்க்கிறாயா என்று கோபத்தில் திட்டுகிறாள்.

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 13th May 2023

குணசேகரன் வீட்டில் எல்லாரும் திருமண வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது குணசேகரனிடம் வேலை பார்க்கும் செல்வராஜ், பதற்றமாக ஓடி வந்து தான் அருணை சக்தியுடன் சேர்ந்து பார்த்ததாக கூறுகிறான். இதனால் குணசேகரன் வீட்டிலுள்ளவர்களுக்கு அதிர்ச்சி. குணசேகரனும் கதிரும் மேற்கொண்டு விசாரிக்க நினைக்கின்றனர். அப்போது ஜனனி குறுக்கிட்டு, சக்தி ஊரிலேயே இல்லையே வேலை விசயமா வெளியூர் போயிருக்காரு என்று கூறுகிறார்.

குணசேகரனும் கதிரும் இதை நம்பவில்லை. செல்வராஜிடம் மேற்கொண்டு விசாரிக்கின்றனர். அப்போது அவன் அடித்து கூறுகிறான். இதனால் குணசேகரன் அருணின் அண்ணன் அரசுக்கு ஃபோன் செய்து கேட்கிறான். அதற்கு அரசு உன் வேலையைப் பார், என் தம்பி வெளிநாடு போயிட்டான். அவன பத்தி நீங்க ஏன் கேக்குறீங்க கவல படுறீங்க. அதான் உங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் இனி ஒன்னும் இல்லனு ஆகிடுச்சே. ஃபோன வை என கோபத்தில் கத்துகிறார்.

இதனால் குணசேகரன் கடுப்பாகி யாரைப் பார்த்த செல்வராஜ் 30 வருசமா ஒரே கண்ணாடிய போட்டுட்டு சுத்துற போயி கண்ண செக் பண்ணுப்பா என்று செல்வராஜிடம் கோபத்துடன் விளாசுகிறார். இதனால் செல்வராஜ் கொஞ்சம் அவமானப்பட்டதாக உணர்கிறார். ஆனாலும் செல்வராஜும் கதிரும் சேர்ந்து அருணை கண்டுபிடிக்க திட்டமிடுகின்றனர்.

ஜனனி, நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி என 4 பேரும் வெளியில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த இடத்துக்கு ஆதிரை வருகிறாள். அவளும் தனக்கு பயமாக இருப்பதாக கூறுகிறாள். ஆதிரையை சமாதானப்படுத்துகிறாள் ஜனனி. நந்தினியும் தனக்கு பயம் இருப்பதாகவும், அந்த மனுசன் என்னய கொஞ்சம் அதட்டியிருந்தா எல்லா உண்மையையும் கக்கியிருப்பேன். நல்ல வேள என்ன பேசவிடல என்று நந்தினி கூறுகிறாள். அருண இவங்க கண்டுபிடிச்சிட்டாங்கன்னா என ஆதிரை கேட்க இல்லை அது முடியாது. யாராலும் அருணை கண்டுபிடிக்க முடியாது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஹோட்டல் என மாறி மாறி இருப்பார் அதனால் அவர் யார் கண்ணிலும் சிக்கமாட்டார். திருமணம் நடக்கும்போது சரியான நேரத்தில் வந்துவிடுவார் என்கிறார்.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 16th May 2023

ஆதிரை திருமணத்துக்கு சம்மதித்து குணசேகரன் மூக்கை அறுக்க ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதனால் கரிகாலன் - ஆதிரை திருமணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!