கரிகாலனை மிரட்டிய ஆதிரை! என்ட்ரி கொடுத்த ஜான்சி ராணி! குணசேகரன் வீட்டில் கிளம்பும் புகைச்சல்!
எதிர் நீச்சல் இன்றைய புரோமோ | Ethir neechal serial promo
எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 14th July 2023
கரிகாலனை மிரட்டி நேற்றிரவு எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்தது என்று சொல்லச் சொல்கிறாள் ஆதிரை. இதனால் கொஞ்சம் அழுகையோட தான் பாவம் இல்லையா என்று கேட்கிறான் கரிகாலன். ஆனால் தன் முடிவு இதுதான் வெளியில் சொன்னால் வேறு மாதிரி ஆகிவிடும் என்று சொன்னதும் அப்படியே செய்வதாக சொல்லிவிட்டு வெளியே வருகிறான்.
சாப்பிடும் இடத்தில் கரிகாலனிடம் குணசேகரனும் ஞானசேகரனும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் கரிகாலன் நடந்த உண்மையைச் சொல்லிவிட நினைக்கிறான். நந்தினி அவனை முறைத்துக் கொண்டே அந்த பக்கமாக செல்கிறாள்.
கரிகாலன் நேற்று என்று ஆரம்பிக்கும்போது குணசேகரன் நேற்று வியாழக்கிழமை இன்று வெள்ளிக்கிழமை என்று முந்திக்கொண்டு சொல்கிறான். பயத்தில் கரிகாலனால் எதுவும் பேச முடியாத நிலையில், அந்த இடத்துக்கு எண்ட்ரி கொடுக்கிறாள் கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி. இனி பட்டாசாக இருக்கப் போகிறது என கரிகாலனும் மகிழத் தொடங்குகிறான்.
எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 13th July 2023
கரிகாலனை அடிக்கப் பாய்ந்த குணசேகரனின் மகள் பிரிய தர்ஷினியால் குடும்பத்தில் மீண்டும் சண்டை உருவாகிறது. இதற்கெல்லாம் சித்திகள்தான் காரணம் என குணசேகரனின் கோபம் குடும்பத்து மருமகள்கள் மேல் விழுகிறது. இதனையடுத்து குணசேகரன் தனக்கான காலம் வரும் வரை காத்திருந்து இவர்களை அடக்க வேற வழியைத் தேடி அமைதியாக இருக்கிறான்.
இடம் : குணசேகரன் வீட்டு மாடி
நபர்கள்: குணசேகரன், ஞானசேகரன், கரிகாலன்
கரிகாலன் தனது முதலிரவு குறித்து பேசிக்கொண்டிருக்கிறான். குணசேகரன் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி குறித்தும் கதிர் குறித்தும் பேசுகிறான்.
ஞானசேகரன் கரிகாலன் குணசேகரன் ஏற்பாடுகளை செய்தார்களா என பார்க்க கீழே செல்கிறார்கள்
பொம்பளைங்கள அடக்கி வைக்க வேண்டும் என்று கரிகாலனுக்கு சொல்லிக் கொடுக்கிறான். கரிகாலனோ ஆதிரை மேல் காதல் இருப்பதால் நான் இப்படி இருக்கிறேன் என்று காதல் வசம் பேச, பெரிய காதல் ரோமியோ ஜூலியட் காதல் என கேலி செய்கிறான் குணசேகரன். பின் நந்தினி, ரேணுகாவைப் பற்றி பேச்சு எழுகிறது.
நந்தினி என்ன நக்கல் பண்ணிட்டு இருக்கா. அது எனக்கு புரியும்னு அவளுக்கே தெரியுது அப்றமும் அத வேணும்னே பண்ணிட்டு இருக்கா. ரேணுகா பக்தி பழமாட்டும் இருந்தா ஆனா பண்ணுற வேலைகள்ல ஜான்சி ராணி தோத்துடுவா அப்படி பேசுறா என்னத்த பண்ண அமைதியா போயிட்டு இருக்கேன். பல்லு இல்லாத சிங்கம் என்ன பண்ணிடும்னு பொம்பளைங்கல்லாம் என்ன சீண்டு பாத்தாங்கன்னு வையி அத்தோட நேரா பாஞ்சி கழுத்த கடிச்சிடுவேன் என பேசிக்கொண்டே இருக்கும்போது கரிகாலன் மீண்டும் குறுக்கிட்டு வாங்க மாமா கீழே போவோம் என்கிறான்.
இடம் : குணசேகரன் வீட்டு சமையல் அறை
நபர்கள் : நந்தினி ரேணுகா ஆதிரை ஜனனி
ஆதிரை முதலிரவு குறித்தும் அருணிடம் பேச வேண்டும் எனவும் கேட்கிறாள்
அந்த நேரத்தில் குணசேகரன் வருகிறார்
ஆதிரை - அரிவாள் மனை - சண்டை
ஆதிரை முதலிரவுக்கு சம்மதிக்கிறாள்
சமையல் அறையில் ஆதிரை, ஜனனி, நந்தினி, ரேணுகா நால்வரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அருணைத் தான் சந்தித்து பேச வேண்டும் என்று கேட்கிறாள் ஆதிரை. ஆனால் மற்றவர்கள் அது எப்படி இப்ப முடியும் என யோசிக்கின்றனர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என ஆதிரை தான் முடிவு செய்யவேண்டும் என கூறுகிறாள் ஜனனி. தனக்கு அருணை சந்தித்து பேசினால்தான் அடுத்து என்ன செய்ய முடியும் என முடிவு எடுக்கத் தோணும் என்று கூறுகிறாள்.
அந்த நேரம் பார்த்து குணசேகரனும் கரிகாலனும் அடுப்படிக்குள் நுழைகிறார்கள். உடன் ஞானசேகரனும் வருகிறான். அங்கு நடப்பவற்றைப் பார்த்து தனது வழக்கமான குரலை கர்ஜிப்பது போல செய்ய, அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். ஜனனியைப் பார்த்து நீ ஏன் இங்க வந்த என்ன பண்ணிட்டு இருக்க. உன் புருசனை கையெழுத்த போட வுடலல.. அவன் இந்த சொத்தே வேண்டாம்னுட்டான்ல அப்றம் உங்களுக்கு இங்க என்ன வேலை. கொம்பு சீவி விடுறியலா என கோபத்தில் கேட்கிறான். பின் நந்தினி, ரேணுகாவை பார்த்து இன்னும் சடங்குக்கு ஏற்பாடு பண்ணலயா. நீங்கதானம்மா பண்ணனும் அதான மொற என்று கேட்க, நந்தினி பண்ண முடியாது மாமா. இது ஆதிரையோட வாழ்க்கை அது அவதான் முடிவு பண்ணனும் என்று சொல்ல, ஆதிரையும் எனக்கு இதில் விருப்பம் இல்லை என்கிறாள்.
குணசேகரன் ஆதிரையை கொன்றுவிடுவேன் என்று மிரட்ட உனக்கு அறுத்து போடணும் தானே இந்தா என அரிவாள்மனையை எடுத்து வெட்டிக் கொள்ள போகிறாள். அப்போது நந்தினியும் ரேணுகாவும் அவளைத் தடுத்து நிறுத்த, உனக்கு நான் சரிகிடையாது இங்க வந்து இவளுக பேச்ச கேட்டு திமிரெடுத்து ஆடுறியா..இரு எப்ப கரிகாலா நீ வீட்டுக்கு கூட்டிட்டு போ.. நா உங்கம்மாட்ட பேசிக்கிறேன். ஜான்சி ராணி தான் சரி. அங்க இருக்கிற வர ஒழுங்காதான இருந்த என்று பேசி தரதரவென ஆதிரையை இழுத்துக் கொண்டே போக அவள் சம்மதிக்கிறேன் இதுக்கு ஒத்துக்குறேன் என்று சொல்லிவிடுகிறாள்.
இடம் - ஜீவானந்தம் வீட்டு மாந்தோட்ட பகுதி
நபர்கள் - ஜீவா, பர்ஹனா இன்னொரு பெண்
கௌதம் குறித்த உரையாடல்.
கௌதம் வந்து தன் தோழிதான் ஜனனி என கூறியதும் சமூக நீதி, தாங்கள் செய்யும் செயல்கள் என்ன என கொஞ்சம் தெளிவாக விளக்கிய பிறகு கௌதம் ஜீவானந்தம் பக்கமே நிற்க சம்மதிப்பதாகவும், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறிவிட்டு சென்றதிலிருந்து பர்ஹானாவுக்கும் அருகிலுள்ள மற்றொரு பெண்ணுக்கு கௌதமை பிடிக்கவில்லை. அதற்கு அவர்கள் சந்தித்த கௌதம் மாதிரியான இளைஞர்கள் காரணமாக இருக்கலாம் என்று எண்ணும் ஜீவானந்தம் கௌதமால் நமக்கு எந்த பிரச்னையும் வராது அவர் நமக்கு உதவிதான் செய்வார் என்று ஆணித்தரமாக கூறுகிறார்.
ரொம்ப யோசிக்க வேண்டாம் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்திவிடுகிறான் ஜீவானந்தம்.
இடம் : முதலிரவு அறை
நபர்கள் : ஆதிரை கரிகாலன்
கரிகாலன் வெகு சீக்கிரமாகவே முதலிரவு நடக்கும் அலங்கரிக்கப்பட்ட அறைக்கு வந்துவிடுகிறான். அங்கு நல்ல அலங்காரம் செய்யப்பட்டு வாசனையாக இருப்பதை உணர்ந்து அக்காங்க பரவால சூப்பரா அரேஞ்ச் பண்ணிட்டாங்க. என்னதான் திட்டிட்டே இருந்தாலும் இந்த விசயத்துல பாராட்டிதான் ஆகணும் என்று அறையை சுற்றி சுற்றி வருகிறான் கரிகாலன். பின் அங்குள்ள கட்டிலில் அமர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்து இனிப்புகளை சாப்பிட்ட மெய்மறந்து சுவைத்து சாப்பிடுகிறான். இதுலாம் மாமா தான் வாங்கி வச்சிருப்பாரு நம்ம டேஸ்ட் தெரிஞ்ச ஒரே ஆளு அவருதான் என்று புகழ்கிறான்.
ஆதிரை அப்போது அங்கு கதவைத் திறந்து உள்ளே வர, கரிகாலனுக்கு குஷி தாங்க முடியவில்லை. அவள் கட்டிலில் அமர்ந்து கரிகாலனையும் இங்க வாங்க என்று கூப்பிட்டதை அவனால் நம்ப முடியவில்லை. உடனே அருகில் வந்து அமர்ந்தவனை கொஞ்சம் தள்ளி உட்காரச் சொல்கிறாள் ஆதிரை. அப்போது அவன் ஏன் என்று கேட்க, தள்ளி உக்கார வைக்கிறாள். பின் தனக்கு கரிகாலனை பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்கையில் கரிகாலனுக்கு அழுகையாக வருகிறது.
அவள் தனக்கும் அருணுக்கும் எல்லாம் முடிந்துவிட்டது என்பதை சொல்ல வரும் முன்பே அதனை புரிந்துகொண்டு தன் வாழ்க்கை இப்படி ஆயிடிச்சே என்று அழத்தொடங்குகிறான்.
எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 15th July 2023
சிக்கித் தவிக்கும் கரிகாலன்! ஜனனியை மிரட்டும் கௌதம்! இப்படி ஒரு டிவிஸ்ட்டா?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu