கரிகாலனை அடிக்கப் போன தர்ஷினி! அதிரடி முடிவு எடுக்கப்போகும் குணசேகரன்!

கரிகாலனை அடிக்கப் போன தர்ஷினி! அதிரடி முடிவு எடுக்கப்போகும் குணசேகரன்!
X
பரபரப்பான எதிர்நீச்சல் தொடரின் இன்றைய எபிசோடின் புரோமோவில் பிரியதர்ஷினி கரிகாலனை அடிக்கப் போனது தெரியவருகிறது.

கரிகாலனை அடிக்கப் பாய்ந்த குணசேகரனின் மகள் பிரிய தர்ஷினியால் குடும்பத்தில் மீண்டும் சண்டை உருவாகிறது. இதற்கெல்லாம் சித்திகள்தான் காரணம் என குணசேகரனின் கோபம் குடும்பத்து மருமகள்கள் மேல் விழுகிறது. இதனையடுத்து குணசேகரன் தனக்கான காலம் வரும் வரை காத்திருந்து இவர்களை அடக்க வேற வழியைத் தேடி அமைதியாக இருக்கிறான்.

பொம்பளைங்கள அடக்கி வைக்க வேண்டும் என்று கரிகாலனுக்கு சொல்லிக் கொடுக்கிறான். கரிகாலனோ ஆதிரை மேல் காதல் இருப்பதால் நான் இப்படி இருக்கிறேன் என்று காதல் வசம் பேச, பெரிய காதல் என கேலி செய்கிறான் குணசேகரன்.

குணசேகரன் தனது மகள் பிரியதர்ஷினியே தன்னை எதிர்த்து பேசுகிறாளே. இனி நம்ம மீசையை முறுக்க வேண்டிய அவசியம் என்ன அது இருந்தா என்ன இல்லைனா என்ன என்று பேச, அந்த நேரத்தில் ஞானசேகரன் மீசையை முறுக்கிக் கொண்டிருக்க ஒரே ஜாலிதான.

எதிர் நீச்சல் இன்றைய புரோமோ | Ethir neechal serial promo

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 12th July 2023

நந்தினி சமைத்த இட்லியை பற்றி கிண்டல் செய்கிறான் குணசேகரன். இதை தின்றோம் என்றால் பல்லு கில்லுலாம் உடஞ்சு தூளாகிவிடும் எனக்கு இட்லி வேண்டாம் என்கிறான் குணசேகரன். ரோட்டு கடைலயே சூப்பரா இட்லி சுடுறான் மல்லிப்பூ மாதிரி. இங்க நீங்க சுட்ட இட்லிய கான்கிரிட் மிக்ஸர் மிஷின்ல போட்டுதான்மா எடுத்துட்டு வரணும்.

ஏம்பா ஞானம் நீ எக்ஸர்சைஸ் பண்றேல கம்பியெல்லாம் தூக்கிட்டு அதுக்கு பதிலா இனி இட்லிய தூக்கி பண்ணு அதுக்குதான் லாயக்கு எனும்படியாக கூறுகிறான் இதனால் நந்தினி கொஞ்சம் சலித்துக் கொள்கிறாள். அந்த பக்கம் திரும்பிக் கொண்ட நந்தினியிடம் சோற்றைப் போட்டு கொஞ்சம் தயிரை ஊத்து என்று சொல்கிறான் குணசேகரன். அதுக்கு நந்தினி மாமா நைட்டு சோறு சாப்பிட்டா சுகர் வந்துடும்னு சொல்கிறாள். முன்னாடி கொழுப்பு இப்ப சுகரா எம்மா நா நல்லாத்தான் இருக்கேன்னு எனக்கு தெரியும்.

அந்த நேரத்தில் ரேணுகா தோசை சுட்டு கொண்டு வர, இட்லியவே சுட்டு நட்டுட்டீங்க இது தோச வேற வேண்டிக் கெடக்கு என்று பேசவே ரேணுகா அப்படியே தோசையை எடுத்துக் கொண்டு செல்கிறாள். உடனே குணசேகரன் எம்மா இங்க வையம்மா உடனே எடுத்துட்டு போயிடுவா என்று சொல்ல, நந்தினி கோதுமை மாவ பிசஞ்சி பூரி சுட்டுத் தரவா என்று கேட்கிறாள்.

நல்லா சுடுவ பூரி.. நைட்டு நேரத்துல பூரிய சுட்டு தந்து எண்ணெய் ஒத்துக்காம நா மேலயும் கீழயும் அலஞ்சிட்டு கெடக்கணும்னு நினைக்குறியா. என்ன ஒரேடியா அனுப்பிடலாம்னு முடிவு பண்ணிட்டியா இது தேக்கு.. என்னய எதும் பண்ண முடியாது என்று தற்பெருமை பேசுகிறான்.

கரிகாலனிடம் இட்லி வேண்டுமா என்று கேட்கிறாள் நந்தினி. அதுக்கு நான் வயிறு ஃபுல்லா சாப்பிட்டா தூங்கிடுவேன் என்று கூறுகிறான். மாமனார் வீட்டுக்கு வர்றதே நல்லா சாப்பிட்டு தூங்கதானே.. நாங்கதான் எங்க போனாலும் வேலக்காரியாட்டம் வேலை செஞ்சு சாவணும் உனக்கு என்ன சாப்பிட்டு நல்லா தூங்கு என்கிறாள் நந்தினி. அதற்கு இன்னிக்கு எனக்கு மாமா ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணியிருக்காருனு சொல்ல நந்தினி தலையில் அடித்துக் கொண்டு அடுப்பாங்கரைக்கு செல்கிறாள்.

தோசையைக் கொடுத்து சாப்பிடச் சொல்கிறார் குணசேகரன். மேலும் தோசை வேண்டும் என்று கேட்கிறான். அங்க என்னம்மா பேசிட்டு இருக்கீங்க தோசைய கொண்டு வாங்க என அதட்டி கேட்க, உள்ளே ரேணுகாவிடம் பேசிக் கொண்டிருந்த நந்தினி தோசையை எடுத்துக்கொண்டு வருகிறாள்.

குணசேகரனிடம் மாமா உங்க ஃபர்ஸ்ட் நைட் எங்க நடந்துச்சு என கேட்க, ஞானசேகரன் கோபப்படுகிறான். சாப்பிடும் இடத்தில் நடு வீட்டிலிருந்து கேட்கக்கூடிய கேள்வியா இது என அவனை திட்ட ஆரம்பிக்க, குணசேகரன் அட விடுப்பா ஆர்வக்கோளாறுல பேசிட்டு இருக்கான். தனக்கு முதலிரவு நடந்ததே நினைவு இல்லடா. நா அப்ப கஷ்டப்பட்டு உழைச்சிட்டு இருந்தேன். குடும்பத்துக்காகவும் தம்பிகளுக்காகவும் உழச்சதால அதுக்குலாம் நேரம் இல்லடா என்று சொல்ல, கரிகாலன் அப்றம் தர்ஷன், தர்ஷினிலாம் எப்படி என்று கேட்கிறான். மீண்டும் திட்டி கரிகாலனை அமைதியா இருக்கும்படி கேட்கிறான்.

அதற்குள் அங்கு சக்தியும் ஜனனியும் வருகிறார்கள். குணசேகரன் வீட்டுக்கு விருந்தாள் வந்திருக்கிறது என்று சொல்ல, ஜனனி அப்பத்தாவுக்கு மருந்து வாங்கிட்டு வந்திருக்கேன் என ரேணுகாவை அழைக்கிறாள். கையெழுத்து போடாத கடுப்பில் இந்த வீட்டுக்கு ஏன் வந்தீங்க என்று கோபத்தில் கேட்டுவிட்டு, நந்தினியிடம் அவர்கள் கையெழுத்து போடாம விடமாட்டேன் என்று சொல்ல சொல்கிறான்.

இந்த நேரத்தில் குணசேகரனின் மகள் தர்ஷினி, தன்னை அடிக்க வந்ததாகவும் அவளுக்கு ஏன் கராத்தே கற்று தந்தீங்க எனவும் சொல்லி முன்பு நடந்த ஒன்றை சபையில் போட்டு உடைக்கிறான். அதை சொல்லாதே என ஞானசேகரன் சொல்லியும் கேட்காமல் மொத்ததையும் சொல்ல, குணசேகரன் தர்ஷினியை அழைக்கிறான்.

மாடிக்கு வேலையாக சென்ற தர்ஷினி என்ன என்று கேட்டு குணசேகரன் பக்கம் வந்து நிற்கிறாள். குணசேகரன் நீ கரிகாலன் மாமாவை அடிக்க போனியா என்று கேட்க அவள் அமைதியா நிற்கிறாள். குணசேகரன் கோபத்தில் மீண்டும் கத்தி கேட்க, அவன் தான் என்கிட்ட சீண்டுனான் என்று சொல்கிறாள்.

என்ன அவன் இவன்னு பேசிட்டு இருக்க. இந்த வீட்டுல ஆம்பளைங்கள எதித்தே பேசக்கூடாது தெரியும்ல. எங்க இருந்து வந்துச்சு இந்த தைரியம் என்று கேட்க, தர்ஷினி வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்கிறாள். அவன் இந்த வீட்டோட மாப்பிள்ளை, ஆதிரையோட வீட்டுக் காரன், உனக்கு மாமன் மரியாதையை மாமன்கிட்ட மன்னிப்பு கேளு என்று சொல்ல அவள் அதிர்ச்சியில் ஏன் நான் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கேட்கிறாள்.

நான் என்ன தப்பு பண்ணேன் கேட்க முடியாது என்றவளிடம் கோபத்தில் கையை நீட்டி விடுவேன் என்று குணசேகரன் சொல்ல, முடியாது இது என் தன்மானப்பிரச்னை நான் கேட்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவள்பாட்டுக்கு மாடி ஏறி சென்று கொண்டே இருக்கிறாள். குணசேகரனும் கோபத்தில் அவளை கத்தி கூப்பிட ஞானசேகரன் அவனை சமாதானப்படுத்திவிடுகிறான்.

உடனே ஜனனியை திட்டி வெளியே அனுப்புகிறான். இவள்தான் எல்லாத்துக்கும் காரணம், எல்லாத்தையும் சரி பண்ணி ஆகணும். கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் 3 நாளா நடக்காம இருந்த சடங்கு இன்னைக்கு நடந்தே ஆகணும் என மருமகள்களை திட்டி நடந்தே ஆகணும் என சொல்லிட்டு போகிறான். கரிகாலனும் மாமா சொல்லிட்டார்ல பர்ஸ்ட் நைட்டுக்கு ரெடி ஆகு என்று சொல்கிறான். ஆதிரை பயப்படுகிறாள். சமாளிச்சிடலாம் பயப்படாத உன்ன மீறி யாரும் உன்ன எதுவும் பண்ண முடியாது என தைரியம் சொல்கிறார்கள்.

கௌதம் - ஜனனி - ஜீவானந்தம் - அப்பத்தா இவர்களுக்குள் இருக்கும் சம்பந்தம், ஜனனியைப் பற்றி ஜீவானந்தமும், ஜீவானந்தம் பற்றி ஜனனியும் விசாரித்து சொல்லும்படி இருவருமே கௌதமை கேட்டிருக்கிறார்கள். இதனால் குழப்பத்தில் இருந்தாலும் இதனை எப்படியும் சரி செய்ய வேண்டும் என கௌதம் தனது பைக்கில் ஜீவானந்தம் வீட்டுக்கு மறுபடியும் வருகிறான்.

கௌதம், பட்டம்மாள் குறித்து பேச ஆரம்பித்து பட்டம்மாள் பக்கம் இருக்கும் நியாயத்தைக் கூறுகிறான். ஆனால் தயக்கத்தில் பல விசயங்களைப் பேச மறுக்கிறான் என ஜீவானந்தம் நினைக்கிறான். அதற்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்து கேட்கிறார் ஜீவானந்தம். ஜனனி தன் தோழி என்பதை ஜீவானந்தத்திடம் வெளிப்படையாக கூறிவிட்டு, அவர்கள் பக்கமே நிற்பேன் என கௌதம் கொடுத்த உறுதியை ஜீவானந்தம் நம்புகிறான்.

குணசேகரன் வீட்டில் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் முதல் இரவு நடைபெறும் நேரம் நெருங்க நெருங்க அவசரப்படுத்திக் கொண்டிருக்கிறான் கரிகாலன். குணசேகரனும் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி கேட்டு, கரிகாலன் அவசரப்படுத்திக் கொண்டே இருந்ததால் வா போய் பார்க்கலாம் என்று அழைத்துக் கொண்டு செல்கிறான்.

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 11th July 2023

பள்ளியில் சேர்க்கும் முன் விசாரிக்க சென்ற நந்தினி, ரேணுகா, ஐஸ்வர்யா ஆகியோர் ஆட்டோவில் வீடு திரும்பும் காட்சியாக தொடங்குகிறது இன்றைய எபிசோட்.

வழக்கம்போல பொறுமிக்கொண்டு இருக்கிறார் குணசேகரன். இப்போது ரேணுகாவும் நந்தினியும் பள்ளிக்கு கூட்டி சென்று வந்ததில் குணசேகரனுக்கு கோபம் ஆனால் நேரடியாக காண்பிக்காமல் ஞானசேகரனிடம் இது இப்படியே போய்க்கொண்டிருக்காது நான் வேற மாதிரி காட்டுவேன் என்று மிரட்டும் தொனியில் பேசுகிறான்.

வீட்டு ஆண்களை மதிக்காமல் நடக்கும் பெண்கள் வெளியில போயி பெருசா சாதிச்சிடவா போறாங்க என்று அவன் பேசியதற்கு அடுத்தடுத்து பதிலடிகளை ரேணுகா கொடுக்க, அவளிடம் பேசமுடியாமல் பேச்சை மாற்றுகிறான் குணசேகரன். அந்த நேரத்தில் அங்கு அமர்ந்திருக்கும் ஆடிட்டரிடமிருந்து ஃபைல்களை வாங்கி இதில் கையெழுத்து போடுங்க என அனைத்து மருமகள்களையும் அழைக்கிறான்.

Ethirneechal கலாய்த்து ஓட விடும் பெண்கள்! குணசேகரன் செய்யப்போகும் அடுத்த அதிரடி!

என்ன இது என்ற சந்தேகத்துடனேயே நந்தினி அந்த ஃபைல்களை தூரத்திலிருந்து பார்க்கிறாள். தனது சந்தேகத்தை குணசேகரனிடம் கேட்க, அவனும் மருமகள்கள் பேரில் இருக்கும் கம்பெனிகள் அனைத்தையும் தனது பெயரிலும் தன் தம்பிகள் பெயரிலும் மாற்றி எழுதியிருக்கிறேன் கையெழுத்து போடுங்க, நீங்கதான் சாதிக்க போறீங்களே என நக்கல் செய்கிறான் குணசேகரன்.

நந்தினியும் அப்பாடா இதுக்குதானே இவ்ளோ நாள் காத்திருந்தோம். அக்கா வாங்க ஒரு வேல முடிஞ்சிது படபடனு கையெழுத்து போட்டுடுட்டு விசிறிட்டு போயிடுவோம் என்று கூறுகிறாள் நந்தினி. பென்னை எடுத்து ஆட்டிருக்கு நன்றி சொல்லிவிட்டு நக்கலாக குணசேகரனிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறாள். மாமா நா கையெழுத்து போடமாட்டேன்னு சொன்னா என்ன பண்ணுவிய என்று கேட்க, அதற்கு குணசேகரன் நீ கையெழுத்து போடமாட்டேன்னு சொல்லிடுவியா என்று கேட்கிறான். அதற்குள் ரேணுகா முந்திக்கொண்டு அவரால என்ன செய்ய முடியும். அவரால எதுவும் செய்ய முடியாது அவரோட அடியாளத்தான் உனக்கு கட்டி வச்சிருக்காருல அவன வச்சி மெரட்டி உருட்டி ஏதாது செய்யப்பாப்பாரு என்கிறாள் ரேணுகா. நந்தினியும் இன்னும் உங்க மிரட்டலுக்கு பயந்துட்டு இருக்கோம்னு நினச்சிட்டு இருக்கியலா மாமா.. அய்யு பாவம் என நக்கல் அடிக்க, குணசேகரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

அடுத்து இந்தியாவில் குடும்ப பெண்களுக்கு சட்டம் கொண்டு வந்துள்ளதைப் பற்றியும், குடும்பத்து பெண்கள் 24 மணி நேரமும் வேலை செய்யுறதால அவங்களுக்கு சேர வேண்டிய உரிமை பற்றியும், குடும்ப சொத்தில் சரிபாதி மனைவிக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்குகிறாள். இதனைக் கேட்ட குணசேகரன் ஆடிட்டரிடம் இதுகுறித்து கேட்க, அவர் பம்முகிறார்.

மீண்டும் நந்தினி குணசேகரனை வாரிக்கொண்டே இருக்கிறார். குணசேகரன் செய்த அடாவடிகளையும் ஏமாற்று வேலைகளையும் நினைவுபடுத்திக் கொண்டே தான் படித்த படிப்புக்கு இப்போ வேலைக்கு போயி சம்பாதிச்சிருந்தா லட்சக்கணக்குல சம்பாதிச்சிருப்பேன் என்கிறார். இப்படியே அவர்களின் பேச்சு தொடர்கிறது.

கௌதம், ஜீவானந்தத்தை தேடி வருகிறான். ஒரு மாஞ்சோலையில் அவர்களது சந்திப்பு நடக்கிறது. அங்கு ஜீவானந்தத்தின் உதவியாள் பெண்மணியும் இருக்கிறார். பட்டம்மாள் குறித்தும் அவர்களது குடும்ப பின்னணி குறித்தும் தெளிவாக கூறுகிறார். ஜனனி கௌதமின் தோழி என்பதை தெரியாத ஜீவானந்தம் அவரிடம் நட்பாக பழகி அங்கு நடப்பதை அறிந்து கொண்டு வர சொல்கிறார். கௌதம் ஏதோ ஒரு உண்மையை மறைப்பதை ஜீவானந்தமும் தெரிந்துவைத்திருக்கிறார்.

சக்தியும் ஜனனியும் வெளியிலிருந்து வீட்டுக்கு வந்து பைக்கை நிறுத்தும்போதே ஞானசேகரனை விட்டு அவனை அழைக்கச் சொல்கிறார் குணசேகரன். உள்ளே வந்த சக்தியிடம் குணசேகரன் கையெழுத்து போடச் சொல்லிக் கேட்கிறார். ஆனால் ஜனனி கையெழுத்து போடாதே என்று தடுக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் ஜனனியிடம் கோபப்படுகிறான். சக்தியிடம் தன் பேச்சை கேட்டு கையெழுத்து போடப் போறீயா இல்லை அவ பேச்சைக் கேட்டு நாசமா போகப் போறியா என கேட்க, சக்தி வெளியில் செல்கிறான். இதனால் குணசேகரனின் கோபம் இன்னும் அதிகரிக்கிறது.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 13th July 2023

குணசேகரனுக்கு நேர்ந்த அவமானம்! எதிர்க்க வரும் ஜீவானந்தம்!

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!