குணசேகரனைப் பகைத்து ஜனனி பக்கம் செல்கிறாரா மாமியார்?

குணசேகரனைப் பகைத்து ஜனனி பக்கம் செல்கிறாரா மாமியார்?
X
இரக்கமில்லையா உனக்கு என்பது போல குணசேகரனிடம் கேள்வி கேட்கிறாள் அவனது அம்மா. அதற்கு குணசேகரன் அளித்த பதில்தான்...

இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 10th March 2023

தம்பி வீட்டுக்கு சென்ற அம்மா திரும்பி வந்துவிட்டார். அவருக்கு நடந்த விசயங்கள் அனைத்தும் தெரிந்திருக்கின்றன. மகள் இப்படி செய்துவிட்டாளே என்கிற ஆத்திரத்தில் இருந்தாலும் அவர் தன் மகன் குணசேகரனின் சொல் கேட்டு பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருக்கிறார்.

உனக்கு மனசு துடிக்கலையாப்பா என்று தன் மகன் குணசேகரனிடம் இயலாமையில் கேட்கும் அவருக்கு குணசேகரன் அளித்த பதில் பதைபதைக்க வைக்கிறது. ஆம். குணசேகரனுக்கு குடும்ப கௌரவம்தான் முக்கியமாம். தனக்கு குடும்ப மானம் தான்மா முக்கியம் என்று அவன் வாயால் கேட்ட பிறகு அவளுக்கு தன் மகளின் மீதான பாசமா, மகன் நம்மை இத்தனை வருடங்களாக காப்பாற்றுகிறானே என்கிற விசுவாசமா எதை முன்னிறுத்துவது என்பதை தெரியவில்லை.

மருத்துவமனையிலிருந்து குணமாகி விடுதலை அடைந்து சிட்டாய் பறந்து வருகிறாள் ஆதிரை. நேற்று அருணின் அண்ணனே எந்த கொம்பன் வந்தாலும் நீ என் வீட்டு மருமகளா ஆகுறத தடுக்க முடியாது என்று கூறிவிட்டு சென்ற மகிழ்ச்சியில் விரைவில் குணமடைந்து வீடு திரும்புகிறாள் ஆதிரை.

வீட்டை அடைந்த நிலையில், அம்மாவின் முதல் கணமே அவளைப் பார்த்து சங்கடத்தில் இருக்கிறாள் ஆதிரை. அதற்கு சற்று முன்புதான் அண்ணன் குணசேகரன் எஸ்கேஆர் குடும்பத்திடம் போய் என் குடும்ப மானத்தை அடமானம் வைத்தவளுக்காக நான் துடிக்க முடியாது என்று கூறிவிட்டான்.

மகள் வீட்டுக்கு வந்த உடனே ஏன்டி இப்படி பண்ண என்று கோபத்தில் கேட்கிறாள் அம்மா. அதற்கு ஆதிரை, எனக்கு இந்த வீட்டில் நடப்பது எதுவுமே பிடிக்கவில்லை என்று கூறுகிறாள். ஜனனி அண்ணிதான் எனக்கு ஆறுதலா இருக்காங்க என்றும் தான் பிழைத்ததற்கும் அவர்தான் காரணம் எனுமாறும் அம்மாவிடம் கூறிய நிலையில், ஜனனியும் ஆதிரை மனதை புரிந்து கொள்ளும்படி தன் மாமியாரிடம் கேட்கிறாள்.


முந்தைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 9th March 2023

ஆதிரை மாத்திரை போட்டு தற்கொலைக்கு முயன்ற விசயத்தை தன் அண்ணனிடம் கூறியிருந்த அருண், அவர் ஆதிரையைப் பார்க்க வேண்டும் என்று கேட்டதால் மருத்துவமனைக்கே அழைத்து வந்திருக்கிறான்.

ஆதிரா நீங்கதான் அருணோட வைஃப். இதுல யார் குறுக்க வந்தாலும் தடுக்க முடியாது. எந்த கொம்பனாலும் ஒன்னும் பண்ண முடியாது. ஹேப்பியா இருங்க என்று கூறுகிறான் அருணின் அண்ணன். பின்னர் ஜனனியிடம் சென்று டாக்டர்லாம் என்ன சொல்றாங்க. எப்ப டிஸ்ஜார்ஜ் பண்ண சொல்லிருக்காங்க என விசாரிக்கிறான்.

நாளைக்கே வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என கூறியிருப்பதாக ஈஸ்வரி கூறவே, நல்ல விசயம் என்று கூறுகிறான். நீங்க கவல படாம ரெஸ்ட் எடுங்க ஆதிரா, நாங்க பாத்துக்குறோம். அடுத்தது என்ன பண்லாம்னு நாங்க யோசிக்கிறோம். சரி வீட்டுக்கு போக கார் அரேஞ்ச் பண்ணிட்டீங்களா? என்று கேட்டதற்கு தாங்கள் கேப் பிடித்து போய்க்கொள்வதாக ஈஸ்வரி தெரிவிக்கிறாள்.

ஏன்.. எங்க வீட்டுலதான் வண்டி இருக்கே. நா அனுப்புறேன் என்று அருணின் அண்ணன் கூற ஈஸ்வரியும் ஜனனியும் கொஞ்சம் யோசிக்கின்றனர். நாங்களே போய்க்கிறோம் சார் என்றதும், அருணிடம் பணம் வாங்கி ஜனனியிடம் செலவுக்காக கொடுக்கிறான். ஆனால் ஜனனி வாங்க மறுக்கிறாள்.

ரொம்ப யோசிக்காதீங்க ஆதிரா எங்க வீட்டு மருமக அவளுக்கு உதவுறதுக்கு எங்களுக்கு உரிமை இருக்கு என்று கூறுகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!