அசுரனாக திரும்பி வரும் குணசேகரன்! என்னென்ன நடக்க போகுதோ?
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தவர் இயக்குநர் மாரிமுத்து. ஆதி முத்து குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் அவர் மிகவும் பொருத்தமான நடிப்பை வழங்கியிருந்தார். இதனால் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
எதிர்நீச்சல் சீரியல் சன்டிவியின் மற்ற சீரியல்களோடும் பிற தொலைக்காட்சி தொடர்களுடனும் போட்டி போடும் அளவுக்கு வெகு சீக்கிரமே டிஆர்பியில் முதலிடம் பிடித்தது. முக்கியமாக ரசிகர்கள் குணசேகரன் கதாபாத்திரத்துக்காகவே பலர் எதிர்நீச்சல் சீரியலைப் பார்த்து வந்தனர். இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணமடைந்தார் இயக்குநர் மாரிமுத்து.
ஆதிமுத்து குணசேகரன் கதாபாத்திரத்தில் வந்த மாரிமுத்துவின் இறப்பு திரையுலகினர் இடையே அதிர்ச்சியை உருவாக்கியது. ரசிகர்களும் இதனை சற்றும் எதிர்பாராது அதிர்ச்சியில் உறைந்தனர். ஒரு பக்கம் அவரது மரணம் அதிர்ச்சி என தொடர்ந்தாலும் மறுபக்கம் இந்த தொடரில் அவருக்கு பதில் யார் நடிக்க இருக்கிறார் என்பது பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு பக்கம் வேல ராமமூர்த்தி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு நிறைய பட கமிட் மெண்ட்ஸ் இருப்பதால் முடியாது என்று கூறிவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இதே வேடத்தில் நடிக்க இளவரசு, ராதாரவி உட்பட பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இணையத்தில் தகவல் பரவி வந்தது.
இதனிடையே குணசேகரன் இல்லாமல் சென்று கொண்டிருந்த சீரியல் தற்போது வேறொரு கோணத்தில் பயணிக்க இருக்கிறது. அண்ணனை இழந்துவிட்டு வாடும் குடும்பத்தில் இன்னொரு பிரச்னை ஆரம்பிக்க இருக்கிறது. அது இன்னொரு கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இன்றைய புரமோ அந்த வகையில்தான் அமைந்திருக்கிறது.
இன்று வெளியாகி இருக்கும் புரமோவில், குணசேகரன் வீட்டை விட்டு சென்று விட்ட நிலையில், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை பட்டம்மாள் வாசிக்கிறார். இதனைப் பார்த்த நந்தினி இந்த டிராமைத்தான் அடிக்கடி செய்கிறாரே என்று கூற, அதற்கு பட்டம்மாள் இந்த முறை குணசேகரன் வருவான். ஆனால் மிகவும் ஆபத்தான ஆளாக வரப்போகிறான் என்று சொல்கிறார்.
இதனிடையே ஜான்சி ராணியை குறிவைத்து விசாலாட்சியிடம், அத்தை கண்டதையும் கொண்டு வந்து நடு வீட்டில் வைக்கிறீர்கள் என்று சாடுகிறாள் நந்தினி. அதற்கு விசாலாட்சி கண்டவங்களோடு கூத்தடித்துதான் என்னுடைய புள்ளையை நான் தொலைத்து கொண்டு நிற்கிறேன் என்று பேச, நந்தினி அதிர்ச்சி அடைகிறாள்.” அத்துடன் இன்றைய புரமோ முடிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu