Ethirneechal குணசேகரனுக்கு அண்ணன்..விரைவில் எண்ட்ரி!

குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவருக்கு பதில் யாராவது வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்ணன் ஒருவர் இருப்பது ஜோசியர் மூலம் வெளியாகிறது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
Ethirneechal குணசேகரனுக்கு அண்ணன்..விரைவில் எண்ட்ரி!
X

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலில் குணசேகரன் வீட்டை விட்டு சென்றதற்கு பின்னணி குறித்து நேற்றைய எபிசோடில் சில தகவல்கள் வெளியாகின. எதிர்நீச்சல் தொடர் மீண்டும் பரபரப்பான எபிசோட்களை எட்டியுள்ளது.

குணசேகரனின் கடிதத்தைப் பார்த்த குடும்பத்தினர் அனைவரும் கதிகலங்கி போயி நிற்க அவர் எங்கு சென்றார் தெரியவில்லையே என ஞானமும் கதிரும் அழ ஆரம்பிக்கின்றனர். குணசேகரன் இப்படி செய்வது இது முதல்முறையல்ல என்றாலும் இம்முறை மிகப் பெரிய வலியைத் தாங்கி அவர் வெளியேறியிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் வீட்டு மருமகள்களும் மகன் தர்ஷனும்தான் என ஞானமும் கதிரும் அனைவரையும் குற்றம் சாட்டுகிறார்கள்.

அந்த நேரத்தில் அங்கு ஆடிட்டர் வருகிறார். இரவு குணசேகரன் வீட்டை விட்டு செல்வதற்கு முன்பாக, அவர் தனது சொத்தை தனது தம்பிகள் ஞானம், கதிர், அம்மா பெயரில் பிரித்து எழுதியுள்ளார். இந்த தகவலை ஆடிட்டர் அனைவருக்கும் தெரிவிக்கிறார்.

"நிறைய சொத்தை கதிர் தம்பி பெயரிலும், ஒரு சில சொத்துக்களை ஞானத்தின் பெயரிலும் எழுதி வைத்துள்ளார். சில சொத்துக்களை அம்மா பெயரிலும் எழுதியுள்ளார். கடைசி தம்பி மேல கோபம் இருந்தாலும் அவர் பெயரிலும் சில சொத்துக்களை எழுதியுள்ளார். கரிகாலன் ஆதிரை ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினால் கரிகாலன் பெயரில் சில சொத்துக்களையும் எழுதியுள்ளார்" என ஆடிட்டர் சொல்கிறார்.

அதை கேட்ட கரிகாலன் "எங்கய்யா போன? என் பெயரில் சொத்து எழுதி இருக்கியா? நீ தான்யா பெரிய சொத்து. உன் குரல் தான் என்னோட காதுல கேட்டுகிட்டே இருக்கு? உன்னை புரியாதவங்களுக்கு நீ புதிர். உன்னை புரிஞ்ச எனக்கு நீ உயிர். உன்னோட நினைப்பு மனதுக்குள்ளேயே இருக்குயா" என கதறி அழுகிறான். அதை கேட்ட விசாலாட்சி அம்மா "போதும் நிறுத்து. அவன் செத்து போகலேயே வீட்டை விட்டு தானே போய் இருக்கான் வந்துருவான்" என சொல்கிறார்.

"ஒரு மணி நேரம் என்னோடு பேசினார். அவர் இதுவரையில் இவ்வளவு விரக்தியாக பேசி நான் பார்த்ததில்லை. மிகவும் நிதானமாக வாழ்க்கையை வெறுத்தது போல வித்தியாசமாக பேசினார்" என ஆடிட்டர் சொல்கிறார்.

குணசேகரன் வீட்டை விட்டு சென்றதற்கு காரணம்

குணசேகரன் வீட்டை விட்டு சென்றதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, அவர் தனது மகன்கள் மற்றும் மனைவி மீது ஏமாற்றம் அடைந்தார். இரண்டாவதாக, அவர் தனது வாழ்க்கையில் வெறுப்பை உணர்ந்தார். மூன்றாவதாக, அவர் தனது மனைவி ஈஸ்வரியின் நடவடிக்கைகளால் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

அதை கேட்ட ஞானம் ஈஸ்வரியிடம் கோபப்படுகிறான். "இப்போ உங்களுக்கு சந்தோஷமா? இனிமே உங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. நீங்க உங்க இஷ்டம் போல இருக்கலாம். வேற எவனையோ அப்பான்னு சொன்னியே இப்போ உன்னோட அப்பா வீட்டை விட்டு போயிட்டாரு சந்தோஷமா? இப்படி பண்ணிடீங்களே அண்ணி" என்கிறான் ஞானம். "நான் யாரையும் சும்மா விடமாட்டேன்" என சவால் விடுகிறான் கதிர்.

ஜோசியர் கூறிய தகவல்கள்

பிறகு ஜோசியரை விசாலாட்சி அம்மா, கதிர் மற்றும் ஞானம் சந்திக்கிறார்கள். அப்போது ஜோசியர் குணசேகரன் முதல் அம்மா, அப்பா, மனைவி என அனைவரை பற்றியும் புட்டு புட்டு வைக்கிறார். அப்போது ஜோசியர் குணசேகரன் இரண்டாம் பிள்ளை என சொன்னதும் ஞானம் இல்லை அவர்தான் மூத்தவர் என சொல்கிறான். அதற்கு ஜோசியர் அதை உங்கள் அம்மா சொல்லட்டும் என்கிறார். அதிர்ச்சியில் உறைந்துபோனது போல பதில் சொல்லாமல் இருக்கிறார் விசாலாட்சி அம்மா. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.

அடுத்தடுத்த எபிசோட்களில் என்ன நடக்கும்?

குணசேகரன் வீட்டை விட்டு சென்றதற்கு பின்னணியில் உள்ள உண்மை விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குணசேகரன் கதாபாத்திரம் என்ன ஆகும்? ஜோசியர் கூறிய தகவல்கள் உண்மையா? போன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த எபிசோட்களில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 20 Sep 2023 3:37 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  சென்னை புயல் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு
 2. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் ரேசன் கார்டு குறைதீர்
 3. நத்தம்
  நத்தம் அருகே கால்நடை மருத்துவ முகாம்..!
 4. திருவள்ளூர்
  கன்னிகைப்பேர் அருகே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து...
 5. திருவள்ளூர்
  குடிநீர்,மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!
 6. திருவள்ளூர்
  வதந்திகளை நம்ப வேண்டாம்: புழல் ஏரியை ஆய்வு செய்த பின் அமைச்சர்...
 7. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே சாலை அமைக்க பூமி பூஜை..!
 8. தென்காசி
  தென்காசியில் டிச.9 சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட...
 9. தென்காசி
  குற்றாலம் கோவிலுக்கு பூஜை கட்டளைக்காக இஸ்லாமியர் வழங்கிய கொடை..!
 10. சோழவந்தான்
  கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லை: பள்ளி...