மாரிமுத்து இனி வரமாட்டார்.. கடைசி எபிசோட் இதுதானாம்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 12ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து கடந்த வாரம் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாரிமுத்து கடைசியாக நடித்த ப்ரோமோ இன்று வெளியானது. இந்த ப்ரோமோவில், முதியோர் இல்லத்தில் சாப்பாடு வழங்கிய பிறகு, நந்தினி மற்றும் ஜனனி மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, அவர்களை பார்த்து, வீட்டில் வேண்டுதல் என்று சொல்லிவிட்டு பொங்கல் எடுத்துக்கொண்டு ஒருத்தி வெளியில் போறா? வீட்டுக்கு வந்தவளை கூட்டிட்டு குடுகுடுன்னு மேல ஒருத்தி போறா இவளுக எதையுமே சாதாரணமாக செய்வது இல்லை. வச்சா பெரிய வெடியா தான் வைக்கிறது என்று மாரிமுத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.
அதற்கு கரிகாலன் உங்களுக்கு எதிரா பல சதி வேலைகள் நடந்துகிட்டு இருக்கு என்று மண்டைக்குள்ளே ஓடிக்கிட்டே இருக்கு மாமா என்று சொன்னதற்கு, விசாலாட்சி இருக்கிற குழப்பம் பத்தாதுன்னு நீ வேற குழப்பி விடுறியா? என்று கேட்டு கரிகாலனை திட்டுகிறார். அதற்கு கரிகாலன் எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமே என்று விசாலாச்சியை பார்த்து சொல்கிறார்.
இந்த ப்ரோமோவில், மாரிமுத்துவின் பேச்சு ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. இனி மாரிமுத்து நடித்த காட்சிகள் வரப்போவதில்லை என்ற சோகம் ரசிகர்களை ஆட்கொண்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்நீச்சலில் மாரிமுத்துவுக்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. புதிய குணசேகரன் இன்னும் சில நாட்களில் அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய எபிசோடில் நந்தினி தான் ஆரம்பித்துள்ள பிசினஸுக்கு சாப்பாடு செய்து தடபுடலான கட்டிக் கொண்டு போக திட்டமிடுகிறார்கள். ஆனால் நந்தினிக்கு ஒரு சந்தேகம். ஹாலில் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து வருகிறேன் என சொல்ல, அதான் இருந்த ஒருத்தனையும் மேல டீ குடுத்து உக்கார வச்சாச்சில்ல என்று சொல்கிறான் சக்தி.
நந்தினியும் தனக்கு நேரமே சரியா இருக்காது நான் போயி பார்த்து வருகிறேன் என்று சொல்ல, நந்தினி நினைத்தது போலவே அங்கு கரிகாலன் வந்து நிற்கிறான். அப்போது அத்தையும் வர, அவர்களையும் சமாளிக்க ஏதேதோ சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் அத்தை காலிலேயே விழுந்து நடப்பதை சொல்லி தன் பக்கம் இழுத்துவிடுகிறாள் நந்தினி.
எல்லாம் சரி என புறப்பட்டு செல்லும்போது சரியாக வந்து சேர்கிறார் குணசேகரன். அவருடன் கதிரும், ஞானசேகரனும் இருக்க போச்சு என பதைபதைத்தனர் ரசிகர்கள். அடுத்து நந்தினியும் ரேணுகாவும் ஏதேதோ சமாளிக்க, உள்ளே வந்த குணசேகரன் சந்தேகத்தில் அமர்ந்திருக்க, கதிரும் எகிறுகிறான்.
ரேணுகாவும் ஏதேதோ சொல்ல அதை சரியாக புரிந்துகொள்ளாமல் மாமியார் விசாலாட்சி திணற, வயோதிகத்தைக் காரணம் காட்டி சமாளித்து ஒரு வழியாக கோவிலுக்கு புறப்பட்டு செல்வதாக கூறி கிளம்புகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu