குணசேகரனுக்கு தெரிந்த காதல் கதை! அடுத்தடுத்த அதிர்ச்சி...!
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தன் சொத்துக்களை மீட்க ஜீவானந்தத்தை பழிவாங்க திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும்போது, ஈஸ்வரியின் தந்தை மூலம் பெரிய அதிர்ச்சியே வந்து சேர்கிறது.
ஜீவானந்தத்தின் குழந்தையை பார்க்கச் செல்கிறார்கள் ஜனனி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா நால்வரும். இந்த நேரத்தில் போகும்போதே அழுது கொண்டு வரும் நந்தினியிடம் ஜனனி இதுபோல அவர் முன்னாடி நீங்கள் அழுதுவிட்டால் அவரிடமிருந்து நமக்கு எந்த உதவியும் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதையும் மீறி அடக்கமுடியாமல் அழுகிறாள் நந்தினி.
இவள் ஏன் அழுகிறாள் என ஜீவானந்தம் சந்தேகம் ஆக, ஜனனி ஏதோ சமாளிக்கிறாள். நீங்க அப்பத்தாவுக்கு உதவி செய்ய போய்தான் இப்படி உங்க மனைவிய இழந்துட்டு நிக்குறீங்க என்று வருத்தத்துடன் சொல்கிறாள். ஆனால் நா அப்பத்தாவுக்கு செஞ்ச உதவி வேற, என் மனைவியைக் கொன்னவங்க வேற என ஜீவானந்தம் சொல்கிறார்.
ஜீவானந்தத்தின் மகள் ஈஸ்வரியிடம் நன்கு ஒட்டிக் கொண்டார். நீங்கள் எங்க அம்மா மாதிரியே இருக்கீங்க என்று தெரிவித்தார். அப்போது அந்த குழந்தையை தூக்கி தன்னுடன் வைத்துக் கொண்டார் ஈஸ்வரி. பின் தனது மகளை ஜனனிக்கு வீட்டை சுற்றிக் காண்பிக்க அனுப்புகிறாள்.
ஜீவானந்தமும் ஈஸ்வரியும் பேசிக் கொள்கிறார்கள். தனது வாழ்வில் ஈஸ்வரி வந்தது அவர்களுக்குள் இருந்த சொல்லப்படாத காதல் என ஒவ்வொன்றாக பேசி மன்னிப்பும் கேட்கிறார் ஜீவானந்தம். ஆனால் இதற்கு எந்த பதிலும் கூறாமல் ஈஸ்வரி இருந்தது, அவருக்குள்ளும் காதல் இருந்தது ஆனால் இப்போது குடும்பம் என ஆகிவிட்டபோது அதை மறுக்கவும் இல்லாமல் ஆதரிக்கவும் இல்லாமல் அமைதியாய் கண்கள் கலங்கி நிற்கிறார்.
இதுவே ஒரு கவித்துவமான காட்சியாக எதிர்நீச்சல் சீரியலில் இடம்பெற்றிருக்கிறது.
இந்நிலையில் குணசேகரன் வீட்டுக்கு வரும் ஈஸ்வரியின் அப்பா, தான் ஈஸ்வரியை குணசேகரனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு முன்பாக ஜீவானந்தத்தை தெரியும் எனவும், அவர் ஈஸ்வரியை பெண் கேட்டு வந்தார் எனவும் குண்டைத் தூக்கி போட, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உக்கார்ந்துவிடுகிறார் குணசேகரன்.
இந்த விசயம் ஈஸ்வரிக்கும் ஃபோனில் சொல்லப்பட, அவர் என்ன செய்வது ஏது செய்வது என்று அறியாமல் குணசேகரன் வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருக்கிறாள்.
இந்த நாள் எபிசோட் வேற லெவலுக்கு எதிர்பார்ப்பை கிளப்ப இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu