மீண்டும் மீண்டுமா? என்னப்பா இது எதிர்நீச்சலுக்கு வந்த சோதனை..!
எதிர்நீச்சல் தொடருக்கு சோதனை மேல் சோதனை வந்துகொண்டிருக்கிறது. மீண்டும் ஒளிபரப்பும் நேரத்தை மாற்றியிருக்கிறார்கள் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். சீரியலை அடிக்கடி நேரம் மாற்றம் செய்வதால் மற்ற தொலைக்காட்சி சேனல்களில் வரும் சீரியல்களும் அடி வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது என ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.
சன்டிவியில் டிஆர்பியில் கொடிகட்டி பறக்கம் சீரியல்கள் என்றால் அது கயல், இனியா, எதிர்நீச்சல் ஆகிய மூன்றும்தான். இப்போது புதிதாக வந்த சிங்கப் பெண்ணே தொடர் இவை அனைத்தையும் ஓவர்டேக் செய்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஒளிபரப்பான நிலையில், அதுவரை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடரின் நேரத்தை 9 மணிக்கு மாற்றினர். ரசிகர்களும் 9 மணிக்கு எதிர்நீச்சல் தொடரைப் பார்த்துவிட்டு அப்படியே 9.30 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைக் காண விரைந்தனர். இப்படியாக 3 மாதங்கள் சென்றுகொண்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரையும், சன்டிவியின் எதிர்நீச்சல் தொடரையும் பார்க்கும் ரசிகர்கள் மாறி மாறி பார்த்து வருகின்றனர். பலர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தொடரைப் பார்த்துவிட்டு, டிவியில் எதிர்நீச்சல் பார்க்கின்றனர். இப்படி இருக்க, பிக்பாஸுக்கு பிறகும் சிலர் தொடர்ந்து 9.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியைப் பார்த்து வருகின்றனர். இதனால் அந்த நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு தினமும் பழக்கப்படுத்திவிட்ட நிலையில், மீண்டும் நேர மாற்றம் அவர்களுக்கு சிக்கலாக இருக்கிறது.
எதிர்நீச்சல் தொடர் மாறுவதால், அடுத்து 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இனியா தொடரும் மாற இருக்கிறதாம். அந்த தொடர் 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது என்கிறார்கள். 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் மனைவி மதியம் 2.30 மணிக்கு மாற இருக்கிறதாம். அந்த நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த அருவி தொடர் நிறைவடைய இருக்கிறது.
9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் மாறும் நிலையில், அந்த நேரத்தில் இனி புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டு வருகிறது. அநேகமாக அந்த தொடரின் பெயர் மல்லி என்றும், அது இளைஞர்களைக் கவரும் வகையிலான தொடர் என்றும் கூறப்படுகிறது. இந்த தொடரில் பூர்ணிமா பாக்யராஜ், நளினி, மதன்பாப் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். அவர்களுடன் அருந்ததி தொடரில் நாயகியாக வந்த நிகிதா ராஜேஷ், ரோஜா தொடரின் வில்லி வீஜே அக்ஷயா, சுந்தரி தொடரின் வில்லி கிரேஸி தங்கவேல், பாண்டவர் இல்லம் கிருத்திகா அண்ணாமலை உள்ளிட்டோர் நடிக்க இருக்கிறார்கள். இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சன்டிவியின் தொடர்களான சுந்தரி, கயல், சிங்கப்பெண்ணே, வானத்தைப் போல, எதிர்நீச்சல், இனியா போல புதியதாக வரும் மல்லி தொடரும் நிச்சயம் டிஆர்பியில் சக்கை போடு போடும் என்று கூறப்படுகிறது. மேலும் மெட்டிஒலி சீரியலின் இரண்டாம் பாகமும் புதியதாக ஒளிபரப்பாக இருக்கிறது என்கிறார்கள். இதனால் சன்டிவியின் டிஆர்பி விண்ணை முட்டப்போகிறது என ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu